பெல் மன்றத்தில் எந்த நிகழ்ச்சி நடத்த விரும்பினாலும் மகரிஷி அவர்களின் அனுமதி/ஒப்புதல் பெற நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ அவரை அணுகுவோம். அவ்வப்போது நல்ல ஆலோசனைகள் கூறி எங்களை உற்சாகப்படுத்துவார்கள்.
1987 ம் ஆண்டு முதல் வாரம் ஒருமுறை என்றாலும் மன்றத்திற்கு வரும் அன்பர்களின் எண்ணிக்கை பெருகிக்கொண்டே இருந்தது. வாரம் ஒரு உடற்பயிற்சி என்ற முறையில் சொல்லிக்கொடுக்க நிறைய ஆசிரியர்கள் தேவைப்பட்டனர்.
1980 தொடங்கி 1988 வரை மகரிஷி அவர்கள் ஏழு முறை பெல் பகுதிக்கு வந்திருந்து நிகழ்ச்சிகள் நடத்தித் தந்திருந்தார்கள். மகரிஷி அவர்களைக்கொண்டே பெல் பகுதியி ஓர் நூறு பேருக்கு அருள்நிதி பயிற்சி கொடுக்கத் திட்டமிட்டோம். மகரிஷி அவர்களிடம் எங்கள் விருப்பத்தினைத் தெரிவித்து கடிதம் எழுதினோம். அப்போது அவர்கள் ஜப்பானில் இருந்தார்கள். அங்கிருந்து அவர்கள் எழுதிய கடிதம் கீழே -
மகரிஷி அவர்களின் அறிவுரைப்படி பேராசிரியர்கள் அ/நி K G சாமி, லெட்சுமணன் , சுப்பு மற்றும் திருக்குறள் காளியப்பன் நால்வரையும் கொண்டு மூன்று நாட்கள் சிறப்பு பயிற்சிகள் தந்து 85 அன்பர்களை ஆசிரியர் பயிற்சிக்கு தயார் செய்தோம்.
இப்பயிற்சி பற்றிய விவரங்களைப் பிறகு தருகின்றேன்.
No comments:
Post a Comment