ஒபாமா தனது 55 வது வயதில் அரசியலில் இருந்து ஓய்வு பெறுகிறார்...
ஆனால் டிரம்ப் தனது 70 வது வயதில் தான் அதிபர் ஆனார்...
பில்கேட்ஸ் தனது 30 களிலேயே உலகின் பெரிய பணக்காரரானார்...
ஆனால் INDITEX SPAIN நிறுவனத்தை தனது 50 ஆவது வயதில் தான் தொடங்கி அமான்சியோ ஓர்டேகா 80 வயதில் தான் உலகின் இரண்டாவது பெரிய பணக்காரரானார்....
இளமை காலங்களில் தனி ஆளாக சினிமா வாய்ப்பு கிடைக்காமலும் சரியான திரைப்படங்கள் அமையாமலும் தடுமாறிய நடிகர் விக்ரமிற்கு 34வது வயதில்தான் சேது என்ற படம் அமைந்து அவருக்கு பெரும் திருப்பத்தை ஏற்படுத்தியது...
நாம் கேள்விப்பட்டிருப்போம்... 23வயதில் திருமணம் செய்தவர் தனது 30வது வயதில் இறந்திருப்பர், 40வயதில் திருமணம் செய்தவர் 60வயதில் குழந்தை பெற்றிருப்பர்...
எல்லோருக்கும் எல்லாம் அது அதற்கு உண்டான வயதில் கிடைப்பது அரிதுதான் நண்பர்களே, நமக்கு விதிக்கப்பட்டவையே நமக்கு வந்து சேரும், அது நல்லவையாக இருந்தாலும் தீயவையாக இருந்தாலும் சரியே...
எனவே உங்களுக்கு ஒன்று கிடைத்துவிட்டால் அது கிடைக்காமல் போராடும் மற்றவரை ஏளனம் செய்யாதீர்கள்...
உங்களை மற்றவரோடு சதா ஒப்பிட்டு உங்களிடம் இல்லாததை நினைத்து புலம்பாதீர்கள், உங்களுக்கு கிடைத்தவை கூட நீங்கள் ஒப்பிட்டுப் பார்க்கும் நபருக்கு கிடைக்காமல் போயிருக்கும்...
யார் கண்டது -
அடுத்த நொடி நமக்கு என்ன நடக்கும் என்று, இந்த உலகமே ஒரு பெரிய விபத்தால் உருவானதுதான் நண்பர்களே, நாம் அதில் பயணிகள், நமக்கான நிறுத்தம் வந்துவிட்டால் நாம் அங்கே இறங்கித்தான் ஆகவேண்டும்...
எனவே எதிர்காலத்தில் நடக்கவிருப்பதை கட்டுப்படுத்த நினைப்பது முட்டாள்தனமே...
இங்கே இப்போது இந்த நொடியில் என்ன செய்து கொண்டிருக்கிறீர்களோ அதை முழுமையாக காதலுடன், விழிப்புணர்வுடன், செய்யுங்கள்...
அடுத்த நொடி நிச்சயம் அழகாய் மலருமே,
தேவைகளை நிச்சயம் பூர்த்தி செய்துவிடுமே...
ஆனால் ஆசைகள் ஓட்டை குடம் போல எப்போதும் நிறைவு செய்ய முடியாதே, வாழ்வில் வெற்றிப் பெற்றவர்கள் எல்லாம் தங்களின் ஆசைகளையும் தேவைகளையும் குறைத்துக் கொண்டவர்களே.
முகநூல் பகிர்வு
No comments:
Post a Comment