Tuesday 30 January 2024

கலீல் கிப்ரான்

இவர் 1883ல் லெபனான் நாட்டில் பெய்ரூட் நகரருகே பஷாரி என்ற ஊரில் பிறந்தார். இவர் ஒரு கவிஞர், கதாசிரியர், ஓவியர், தத்துவவாதி.

இவர் எழுதிய மூன்று உலகறிந்த புத்தகங்கள் The Prophet, The Madman, Broken Wings.

இவற்றில் என்னை மிகவும் கவர்ந்தது The Prophet. வாழ்க்கையில் உள்ள பல கடினமான உண்மைகளை வெகு சுலபமாக புரிய வைத்திருப்பார். அந்த புத்தகத்தை படித்தால்தான் அவன் சிறப்பை நன்கு அறிய முடியும். அவற்றில் சில (ஆங்கிலத்தில் உள்ளதை தமிழாக்கத்துடன் கீழே தருகிறேன்.

கொடுத்தல் பற்றி :

"நீ கொடுக்கும் போது உன்னுடைய சொத்துக்களில் இருந்து கொஞ்சம் தருகிறாய்.

எப்போது நீ உன்னையே கொடுக்கிறாயோ, அப்போது தான் நீ உண்மையில் கொடுக்கிறாய்.

நீ சேர்த்துள்ள சொத்துக்கள் நாளை தேவைப்படும் என்ற பயத்தில் சேர்த்தவை.

யாத்திரிகளை தொடரும் அதிபுத்திசாலித்தனமாக ஒரு நாய் பாதை தெரியாத பாலைவன மண்ணில் புதைத்து வைக்கும் எலும்புத்துண்டு போல அது."

பிள்ளைகள் பற்றி :

"You are the bows from which your children as living arrows are sent forth."

"நீங்கள் ஒரு வில் போல. அதிலிருந்து உங்கள் பிள்ளைகள் ஏவப்படும் உயிருள்ள கணைகள்." (அவர்கள் தங்கள் இலக்குகளுடன் வருபவர்கள் என தொடர்கிறார்.)


No comments:

Post a Comment