Friday, 15 March 2024

தாஜ்மஹால்

உலகின் 7 அதிசயங்களின் ஒன்றான தாஜ் மஹாலை பற்றி பெரும்பாலும்; இதுவரை யாரும் அறிந்திராத மிரள வைக்கும் செய்தியினை இங்கு பார்ப்போம்.


  • தாஜ்மஹாலைக் கட்டிய பொறியாளர் உஸ்தாத் அகமத் லாஹரி, பெர்சியா நாட்டைச் சேர்ந்தவர். இவர்தான் டெல்லி செங்கோட்டையை கட்டியவர். ஆனால், இதன் தலைமை கட்டட வடிவமைப்பாளர் இந்தியராகத் தான் இருப்பார் என பலரும் நம்பிவந்தனர்.
  • தாஜ்மஹால் 28 வகையான விலை மதிப்பில்லாத உலகின் அதிக விலையுயர்ந்த கற்களைக் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. திபெத், சீனா உள்ளிட்ட நாடுகளிலிருந்து பல ஆண்டுகள் திட்டமிட்டு கொண்டு வரப்பட்டது.
  • தாஜ்மஹாலின் தூண்கள் சற்று சாய்வாக அமைத்திருக்கும் காரணம், தாஜ்மஹால் புயலிலோ, நிலநடுக்கத்தினாலோ எந்த பாதிப்பும் அடையாது.
  • சூரியனின் ஒளியைக் கொண்டு தாஜ்மஹால் வெவ்வேறு நிறமாக மாறும் அதிசய கட்டிடம் என்பது பலரும் அறிந்திராதது.
  • இப்போது இருக்கும் வெள்ளை தாஜ்மஹாலைப் போல, கருப்பு தாஜ்மஹால் ஒன்றை கட்ட ஷாஜகான் திட்டமிட்டிருந்தார். ஆனால், அவரை வீட்டுச் சிறையில் தள்ளி, அந்த திட்டத்தை அவுரங்கசீப் தவிடுபொடியாக்கிவிட்டார்.
  • தாஜ்மஹாலில் சிறு தவறு கூட நேராத வகையில், கட்டிடப் பணிகள் மிக நேர்த்தியாக கட்டப்பட்டுள்ளது. உலகில் உள்ள சமச்சீரான கட்டிடங்களில் இதுவும் ஒன்றாகும்.

No comments:

Post a Comment