Friday, 6 February 2026

ஒன்னு வாங்குனா இன்னொன்னு ப்ரீன்னு கொடுக்காததுக்கு...நன்றி!

 ஹலோ....

ஹலோ... ஆச்சி மசாலா ஓனர் சார் உங்களுக்கு ரொம்ப நன்றி்ங்க...

எனக்கெதுக்குப்பா நன்றி...! குலோப் ஜாமுன் மாவு பாக்கெட் ஒன்னு வாங்குனா ஒன்னு ப்ரீன்னு கொடுத்திருக்கான் அதுக்கா...

நான் சொன்ன நன்றி அதுக்கில்ல...

பின்ன... ஆச்சி பாதாம் மிக்ஸ் ஒன்னு வாங்குனா இன்னொன்னு ப்ரீன்னு ஆப்பர் கொடுத்திருக்கேனே அதுக்கா...

இல்ல....

பேரிச்சம்பழம் பாக்கெட் ஒன்னு வாங்குனா இன்னொன்னு ப்ரீன்னு ஆப்பர் கொடுத்திருக்கேனே அதுக்கா...

இல்ல...

சத்து மாவு ஒன்னு வாங்குனா இன்னொன்னு பிரீன்னு கொடுத்திருக்கேனே அதுக்கா...

இல்ல... இல்ல...

பின்ன எதுக்குப்பா எனக்கு நன்றி சொல்ற...!?

ரவை பாக்கெட் ஒன்னு வாங்குனா இன்னொன்னு ப்ரீன்னு கொடுக்காததுக்கு...!

No comments:

Post a Comment