கணியன் பூங்குன்றனார் எழுதிய 'யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்ற பழமையான பாடல் இன்று உலகம் முழுவதும் பேசப்படுகிறது…*_
_*ஆனால் அந்தப் பாடலின் முதல் வரியை மட்டுமே பலர் அறிவார்கள்.*_
_*முழு பாடலும் வாழ்வின் முழுத் தத்துவத்தை விளக்குகிறது....*_
_"யாதும் ஊரே;_ _யாவரும் கேளிர்_
_தீதும் நன்றும்_ _பிறர்தர வாரா_
_நோதலும்_ _தணிதலும்_ _அவற்றோ ரன்ன_
_சாதலும் புதுவது_ _அன்றே;..._
_வாழ்தல் இனிது என மகிழ்ந்தன்றும் இலமே;*_
_முனிவின் இன்னாது_ _என்றலும் இலமே;_
_மின்னோரு_ _வானம் தண்துளி தலைஇ ஆனாது_
_கல்பொருது இரங்கும்வ_ _மல்லல் பேர்யாற்று_
_நீர்வழிப் படூஉம் புணைபோல் ஆருயிர்_
_முறைவழிப் படூஉம் என்பது திறவோர்காட்சியின் தெளிந்தனம்..._
_ஆதலின் மாட்சியின்_
_பெயோரை வியத்தலும்_ _இலமே;_
_சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே.”_
_*கணியன் பூங்குன்றனார்*_
_இதன் பொருள் …._
_*"யாதும் ஊரே யாவரும் கேளிர்...."*_
_எல்லா ஊரும் எனது ஊரே....எல்லா மக்களும் எனக்கு உறவினர்களே என்று எண்ணுக_
_*"தீதும் நன்றும் பிறர் தர வாரா...."*_
_உனக்கு வரும் தீமையானாலும் நன்மையானாலும், அது அடுத்தவரால் வருவதில்லை._
_அவற்றின் அடிப்படை காரணம் நீதான் என்பதை உணர்க .._
_*"நோதலும் தணிதலும் அவற்றோ ரன்ன...."*_
_மனக் கவலையும் ஆறுதலும்கூட மற்றவரால் கிடைப்பது இல்லை, மனம் பக்குவப்பட்டால், கவலைகள் உன்னை அண்டாது என்க .._
_*"சாதலும் புதுவது அன்றே.."*_
_*இறப்பு புதியதல்ல, அது இயற்கையானது எல்லோருக்கும் பொதுவானது....*_
_"வாழ்தல் இனிது என மகிழ்ந்தன்றும் இலமே_
_முனிவின் இன்னாது என்றலும் இலமே."_
_வாழ்க்கையில் ஏற்படும் இனிய நிகழ்வுகளைக் குறித்து_ _பெருமகிழ்ச்சி கொள்ளவும் வேண்டாம் .._
_அதுபோலவே,_ _துன்பம் வந்தால் வாழ்க்கையை வெறுக்கவும் வேண்டாம்._
_இன்பமும் துன்பமும் இணைந்தே வாழ்க்கை என்பதை உணர்க…_
_*"மின்னோரு வானம் தண்துளி தலைஇ ஆனாது கல்பொருது இரங்கும்வ மல்லல் பேர்யாற்று நீர்வழிப் படூஉம் புணைபோல் ஆருயிர் முறைவழிப் படூஉம் என்பது திறவோர் காட்சியின் தெளிந்தனம் ....."*_
_இந்த வானம் வெப்பமான மின்னலையும் தருகிறது குளிர்ந்த மழையையும் தருகிறது._
_கற்களைப் புறட்டிச் செல்லும் காட்டாற்று வெள்ளத்தில்,_ _முட்டிமோதிச் செல்லும் படகு போல,_ _துன்பங்களுக்கும் இன்பங்களுக்கும் ஊடே வாழ்க்கையும் போய்கொண்டே இருக்கும்._
_இதுவே இயல்பு என மனத்தெளிவு கொள்க...._
_*"ஆதலின் மாட்சியின் பெரியோரை வியத்தலும் இலமே;*_
_*சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே."*_
_*இந்த தெளிவு வரப் பெற்றால்,*_ _*உயர்ந்த நிலையில் உள்ளவர்களைப் பார்த்து வியந்து நிற்கவும்*_ _*வேண்டாம். சிறிய நிலையில் உள்ளவர்களைப் பார்த்து இகழ்வதும் வேண்டாம்.*_
_*அவரவர் வாழ்வில் அவரவர் பெரியவர் என்பது அடிப்படை ..*_

No comments:
Post a Comment