Sunday, 19 July 2026

ஜோக்

 


என்னாங்க...!?

சொல்லு...!?

நைட் டின்னருக்கு என்ன பண்ணனும்...?

தோசை...!?

எத்தனை...?

ஐஞ்சு தோசை...

என்னது...!?

சரி... நாலு...!?

போதுமா...!?

நாலே ஜாஸ்த்தியா... சரி மூணு ஓகே வா...!?

45 வயசுக்கு மேல போய்ட்டா நைட் டின்னர் லைட்டாத்தான் எடுத்துக்கனும்... ஓவரா சாப்ட்டு குத்துதே குடையுதேன்னு கடந்து உருளக்கூடாது...

சரி... கடேசியா ரெண்டு தோசையாவது சுட்டுக்கொடுப்பியா... மாட்டியா...?

என்ன பதில் சொல்லாம மொறைக்கிற... விடு ஒரே ஒரு தோசையாவது கெடைக்குமா...!?

நீங்க சாப்பிட்ற ஒரே ஒரு தோசைக்கு நா அடுப்ப பத்தவச்சி மாவ கலக்கி சுட்டு அதுக்கு சட்னி செஞ்சி வைக்கணுமா...?

இப்ப என்னய என்னத்தான் பண்ண சொல்ற...!?

பொடி நடையா நடந்து போயி ரெண்டு இட்லி சாப்ட்டு வந்துடுங்க... எக்சர்சைக்கு எக்சர்சைசுமாச்சி டின்னருக்கு டின்னருமாச்சி...

அப்ப உனக்கு...!?

சாப்ட்டு வரும் போது பிரியாணி வாங்கிட்டு வந்துடுங்க...

பிரியாணியா... அது ஹெவி புட் உன்ன மட்டும் எதுவும் பண்ணாதா...!?

பண்ணாது... ஏன்னா எனக்கு இன்னும் 45 ஆகல...

ரைட்டு... !

No comments:

Post a Comment