ஏண்டி ரேகா…. நீ எப்படி இருக்கே……உங்க அண்ணன் எப்படிஇருக்கான்……
அவனா……என்ன சொல்றது…அவன் பொண்டாட்டியை தலையில் தூக்கி வைச்சிக்கிட்டு ஆடராண்டி…..
பார்த்து……..தலை சுளிக்கிக்க போகுது…. அப்புறம் மூஞ்சி கோணிக்கும்…. பொண்டாட்டியை கீழே விசிறி போட சொல்லு…..
நீ ஒருத்தி….. நான் ஒண்ணு சொன்னா…நீ ஒண்ணு சொல்றே…சரியான டுயூப்லைட்……
அடி ரேகா முட்டாள்….. அப்படி தூக்கி வீசுனா தாண்டி முதுகு எலும்பு முறியும்…. நீ சந்தோச படுவே….. அதுக்கு சொன்னேன்…
அது சரி கவிதா…..உங்க மாமியார் எப்படி இருக்கா…ரொம்ப பொல்லாதவ'ன்னுஒரு முறை சொன்ன ஞாபகம்..,..
அவளுக்கென்ன…. நல்லா தின்னுட்டு பைட்டுக்கு ரெடியா இருக்கா…. வீட்டுலேஅவ வெச்சதுதான் சட்டம்…. யாரையும் மதிக்க மாட்டா….
இப்படி எல்லாம் மனித ஜென்மங்கள் இருக்குது பாரு.. சரி சரி…. டைம் ஆயிடிச்சி லேட்டா போனா அண்ணி திட்டுவா…. அப்புறம் சப்பாத்தி மாவை உருட்டி நான் தான் சப்பாத்தி செய்யணும்…கிளம்பட்டா….
இப்ப தான் அண்ணியை பத்தி கேவலமா சொன்னே.,.. அவளுக்கு போய் இவ்வளவு பயப்படுறே…..
என்னடி செய்யறது….. எங்க வீட்டிலேயே சாம்பாதிக்கிற ஒரே ஜீவன் அவ தான்…. மத்தவங்க எல்லாம் ஓசி சோறு…. சரி பை….
எங்க வீட்டிலேயும்அதே கதை தாண்டி….. எங்க மாமியார் பென்ஷனில் தான் காலம் ஓடுது…சரி போகலாம்….. பை…
No comments:
Post a Comment