உலகளந்த பெருமாளான "மகாவிஷ்ணு "உயிர்களுக்கு, தன்னை, ஐந்து நிலைகளில் வெளிப்படுத்துகிறார்! என்பது, வைஷ்ணவசம்பிரதாயம்.
1.பரத்துவ நிலை:—மிகஉயர்ந்த நிலை! இறைவன் ஒருவன்! அவன் உயர்வானவன்! பரம பதத்தில், வடிவோடு எழுந்தருளி இருப்பவன்.
2.வியூக நிலை:—பிரிந்து நிற்றல். தெய்வம், தன்னை நான்கு நிலைகளில் பிரித்து நிிற்றல்! அது "வாசுதேவன்" "சங்கர்ஷணன்" "பிரதியும்னன்" "அனிருத்தன்" என்பதாகும்.
3.விபவ அவதாரம்:— எல்லா பொருட்களிலும், வந்து தோன்றுவது," விபவம்" என்று சொல்லப்படும். தீவினை ஒருபோதும் வாழாது! நிலைக்காது! அது, தன்னைத்தானே அழித்துக் கொள்ளும்! இதற்கு உதவுவதே, "ராமன்"" கிருஷ்ணன்" போன்ற விபவ அவதாரங்கள்ஆகும்.
4.அந்தர் யாமி:—அவரவர் நெஞ்சில் உறைந்து, அவரவரை கரையேற்ற முயல்கிறான்! "பிரகலாதன்" போன்றோருக்கு, அந்தர் யாமியாய் இருக்கிறான்.
5.அர்ச்சாவதாரம்:-கோவில்களிலோ, வீடுகளிலோ, உள்ள விக்கிரகங்களில், வந்து, உறைந்து, எப்போதும் காட்சி தருவது," அச்சாவதாரம்" ஆகும்.
No comments:
Post a Comment