தங்களீஸ் வாழ்க
அண்ணே ஒரு பாக்கெட் சால்ட்...உப்பு கொடுங்க
நேற்று ரோட்டின் நடு...சென்டர்ல தான் வண்டியை ஓட்டி கொண்டு போனேன்!
அம்மா! எங்க போற!
அட சாமான் வாங்க நம்ம அன்னாசி ஷாப்பு...கடைக்கு தான்
அம்மா என் புக் எங்க மேல்...டாப் ஷெல்ப்ல இருக்கு பார் !
என்னங்க காய்கறி வாங்கும்போது நல்ல கிரீன்...பச்சையா பார்த்து வாங்குங்க!
அம்மா அந்த வண்டி சாவியை தூக்கி போடுங்க ! இந்தா கேட்சு...பிடி!
கடைக்காரர் ஒரு கோடு போட்ட பேப்பர்...தாள் கொடுங்க !
பாருடி அந்த ஹீரோயின் என்னம்மா டான்ஸ்...ஆடுறா
எனக்கு தெரியும் பட்...ஆனா மறந்து போச்சு!
டேய் ! ஹார்லிக்ஸ் கலந்து வைத்து இருக்கேன் மிச்ச...பேலன்ஸ் வைக்காம குடி பார்ப்போம்!
எல்லாரும் ஒழுங்கா கியூ...வரிசையில் நில்லுங்க!
அம்மா எனக்கு ஜுஸ் கண்ணாடி...கிளாஸ் ல கொடுங்க!
அடியே டோர் கதவ ரொம்ப நேரமா யாரோ தட்டி கிட்டு இருக்காங்க பாருன்!
ஏண்டி ரொம்ப நேரமா ஃபோன் ரிங் அடித்து கொண்டு இருக்கு!
எடுத்து answer பதில் சொல்லலாம் இல்ல
அம்மா இங்க தான் வச்சேன் எங்க அந்த பின்...ஊசி!
சார் அந்த முக்கு...கார்னர் திரும்பி நேரா போங்க! கோவில் வந்து விடும்!
எந்த போஸ்ட்...கம்பம் பார்த்தாலும் நம்ம நாய் விட மாட்டிக்குது
டேய் ரோட்டில் நடந்து போகும்போது சைட்...ஓரம் நல்லா பார்த்து போ!
கடைக்காரரே மொத்த...டோட்டல் எம்புட்டு என்று சொல்லுங்க !
அண்ணே! இதில் நாலு ஜெராக்ஸ்...காப்பி போட்டு கொடுங்க !
டேய் மகனே எப்படா உனக்கு எக்சாம்
பரீட்சை ஆரம்பிக்குது!
இந்த தடவை மார்க் மதிப்பெண் மட்டும் குறையட்டும் பார்த்துக்கிறேன்!உன்னை
போதும் டா லிஸ்ட் பெருசா போகுது!
No comments:
Post a Comment