பரமஹம்சர், 'நாம் அனைவரிடமும் அன்பாகவும் மரியாதையாகவும் பழக வேண்டும்' என்று எப்போதும் வலியுறுத்துவார். ஆனால், 'ஒரு சிலரிடம் எப்போதும் தள்ளியிருக்க வேண்டும்' என்பதையும் கூறியுள்ளார்.எப்போதும் மிக ஜாக்கிரதையாகப் பழகுதற்குரியவர் சிலர் இருக்கின்றார்கள்.
அதில் முதலாவது செல்வ வளம் மிக்க தனவான்கள். அவர்களுக்கு பண பலம், செல்வாக்கு அதிகம் என்பதால், அவர்கள் இஷ்டப்பட்டால் உனக்குத் தீமை செய்துவிடுவார்கள். அதனால், அவர்களுடன் ஜாக்கிரதையாகப் பழக வேண்டும். அவர்கள் சொல்வதைக்கேட்டு 'சரி, சரி ஆமாம்....' என்று சொல்லும் நிலை ஏற்படலாம்.
இரண்டாவது குடிகாரன். நீ அவனைத் தொந்தரவு செய்தால், காதால் கேட்கச் சகிக்காதபடியெல்லாம் உன்னைத் திட்டுவான். அதைவிட்டு, 'என்னப்பா நல்லாயிருக்கியா?' என்று கேட்டால் உன்னிடம் சந்தோஷத்துடன் ஐக்கியமாகிவிடுவான்.
மூன்றாவது காளை மாடு. அது உன்னை முட்டவரும்போது அதையும் ஏதாவதொரு சப்தம் செய்து சமாதானப்படுத்த வேண்டும்.
நான்காவது நாய். அது உன்னைக் கண்டு குலைக்கவோ கடிக்கவோ வரும்போது, நீ ஓடாமல் நின்று விசிலடித்து அதனைச் சமாதானம் செய்ய வேண்டும்.
ஐந்தாவதாக பாம்பைப் போன்ற விஷத்தன்மை உடைய மக்கள். அவர்கள் எப்போது உன்னைக் கடிப்பார்கள் என்று உனக்குத் தெரியாது. அவர்களின் விஷத்தை முறிக்க மிகுந்த பாடுபட வேண்டும். இல்லாவிட்டால், அவர்களைப் பழிக்கு பழி வாங்க வேண்டும் என்னும் எண்ணம் தோன்றிவிடும்.அவர்களிடம் இருந்தும் தள்ளியிருக்க வேண்டும்.
No comments:
Post a Comment