Tuesday, 22 September 2026

நடக்க கூடாத செயல்கள்

 

மகன் தந்தையின் கண்ணீரை பார்க்கக்கூடாது!

பெற்ற பிள்ளைகளின் அவப்பெயரை தாய் கேட்கக்கூடாது!

சகோதரர், உடன் பிறப்புக்களிடம் அந்தஸ்து காட்டக்கூடாது!

தம்பதிகளிடையே சந்தேகம் கூடாது!

வெற்றியாளர்க்கு இறுமாப்பு கூடாது!

தலைவனுக்கு நொடி பொழுதும் சபலம் கூடாது!

வாழ்ந்து கெட்டவனின் வறுமையை தூற்றக் கூடாது!

பகைவனாக இருந்தாலும் ஒருவரின் இறப்பில் மகிழக் கூடாது!

கடும் பசியிலும் மதியாதவர் வீட்டில் உணவு உண்ணக் கூடாது!

தர்மம் செய்பவரை தடுக்க கூடாது!

இவைகள் நடக்க கூடாத செயல்கள்!!!
அறிந்து, புரிந்து செயல் படுங்கள்!!

No comments:

Post a Comment