Showing posts with label அன்றும் இன்றும். Show all posts
Showing posts with label அன்றும் இன்றும். Show all posts

Friday, 29 November 2013

அன்றும் இன்றும்...10

அன்று 


அரசுபள்ளிகள், கல்லூரிகள் அதிகம்.
மதுக்கடைகள் சட்ட விரோதம்.

இன்று 

பள்ளிகளையும், கல்லூரிகளையும் நடத்த வேண்டிய அரசு, மது விற்பனை செய்து கொண்டிருக்கிறது.



மது விற்றுக்கொண்டிருந்த பலர் இன்று கல்லூரிகளை நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.

Wednesday, 27 November 2013

அன்றும் இன்றும்...9

அன்று


சுதந்திரப்போராட்ட வீரராக 
வீரபாண்டிய கட்டபொம்மனாக 

சிவாஜி கணேசன் சிம்மக்குரலில் ஜாக்சன் துரையோடு நடத்திய போராட்டம் 


இன்று....


கல்யாண் ஜூவல்லர்ஸ்க்காக 
பிரபு சிம்மக்குரலில்(?) நடத்தும் புரட்சிப்போராட்டம். 



Saturday, 23 November 2013

அன்றும் இன்றும்...8

அன்று 


ரோட்டில் சைக்கிள் 

இன்று 


வீட்டில் சைக்கிள் 

Tuesday, 12 November 2013

அன்றும் இன்றும்...7

அன்று 


படிக்காதவன், வேலையில்லாதவன்தான் தண்ணியடிச்சிக்கிட்டு இருந்தாங்க...

இன்று 



படிச்சவனும், நல்ல வேலையிலிருக்குறவனும்தான் 
 நல்லா குடிச்சிட்டு 
மத்தவங்களுக்கும் ஊத்திக் கொடுக்குறாங்க!

Friday, 8 November 2013

அன்றும் இன்றும்...6

அன்று 



அன்று நாம் நம் பெற்றவர்களிடம் பயப்பட்டோம்.


இன்று 


நாம் நம் பெத்ததுகளிடம் பயப்படுகின்றோம்.

Wednesday, 6 November 2013

அன்றும் இன்றும்...4

அன்று 

பெரியவங்க ஏதாவது கேட்டா  கையைக் கட்டிக்கிட்டு  
பேசாம இருந்தா அதுதான் நல்ல பதில்! 
பேசினா அது எதிர்த்து பேசுற மாதிரி!


இன்று 


பெரியவங்க கேட்டவுடனே எதிர்த்து பேசுறதுதான் 
இப்ப பதிலே !

Sunday, 3 November 2013

அன்றும் இன்றும்...5


அன்று 

அப்பல்லாம்  செலவு செய்ய யோசிச்சோம்.



இன்று 

இப்ப செலவு செஞ்சப்புறம் யோசிக்கிறோம்!

Thursday, 31 October 2013

அன்றும் இன்றும்...3


அன்று 


டெலிபோன் மணி சத்தம் கேட்டாலே வீட்டில் உள்ள எல்லோரும் யார்  கூப்பிடுகிறார்கள் என ஓடி வந்து போன் பக்கம் கூடி நிற்பார்கள்.

இன்று 


செல்போன்  ரிங்க்டோன்  கேட்டவுடனே அதை எடுத்துக் கொண்டு
 தனியே போய்  பேசிக்கிட்டே இருக்காங்க!



Tuesday, 29 October 2013

அன்றும் இன்றும்...2


அன்று 



தீபாவளியை எப்படி கொண்டாடுவது
 என முன்கூட்டியே தமிழர்கள் முடிவு செய்வார்கள் 


இன்று 

தீபாவளியை எப்படிக் கொண்டாடுவது
 என தமிழ் தொலைக்காட்சிகள் 
முடிவு செய்கின்றன.