To see earlier anniversary posts, click here
Saturday, 10 September 2022
Thursday, 8 September 2022
Wednesday, 7 September 2022
இரத்த சுகர்
உடலில் கணையம் என்கிற ஒரு சுரப்பி வயிற்றின் பின் பாகம் இருக்கிறது. இது ஜீரணத்துக்கு தேவையான ஒரு என்சைமையும்( Enzyme ), இரத்தத்திற்கு வரும் இன்சுலினையும் ( Insulin ) சுரக்கிறது.
எந்த அறிகுறியும் இல்லாமல், நீண்ட நாள் கண்டுபிடிக்கப்படாமல், சிலரது உடலில் அமைதியாக டயாபெட்டீஸ் இருக்கிறது
இனிப்பு வகை உணவுகள், குளிர்பானங்கள், பாட்டில் பழரசங்கள் உடல் எடை அதிகமாக காரணமாகும். அதிக உடல் எடை உடலில் இன்சுலின் குறைவதற்கு ஒரு காரணமாகும். எல்லாச்சத்தும், எல்லோருக்கும் தேவை.
ருசியுள்ள உணவெல்லாம் ஆரோக்கியமான உணவல்ல. தோல் அல்லது தவிடுடன் கூடிய உணவுகளை தேர்ந்தெடுங்கள். காய், கீரை, மீன், நட்ஸ், பயிறு வகை உணவுகள் நல்லது.
கார்போஹைட்ரேட் வகை உணவுகளுக்குத்தான் இன்சுலின் தேவை. புரோட்டீன் மற்றும் கொழுப்பு வகை உணவுகளுக்கு இன்சுலின் தேவையில்லை. இதை நினைவில் கொண்டு நாம் உணவுப் பழக்கத்தை மாற்றிக்கொண்டால் டயாபெட்டீஸ் வராமல், அல்லது வந்தபின் சமாளிக்கும் வழியாக பார்த்துக்கொள்ளலாம். கெட்டகொழுப்பு, நல்ல கொழுப்பு வகை உணவு களையும் நினைவிற்கொள்ள வேண்டும்.
சுகர் வந்தபின், தவறாமல் மருத்துவரிடம் பரிசோதனை, உணவுப்பழக்கம், மாத்திரை, உடற்பயிற்சி, பலவீனம் பற்றி ஆலோசித்துக்கொள்ள வேண்டியது கட்டயாமாகும். மருத்துவர் அவரவர் உடலுக்கு ஏற்றவாறு ஆலோசனை கூறுவார். டயாபெட்டீஸ் சம்பந்தப்பட்ட நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு புதிய மற்றும் பல்வேறு ஆலோசனைகளை பெறலாம்.
இரத்த சுகர் வராமல் இருப்பதற்குரிய கட்டுப்பாடுகள்.
வெள்ளை அரிசி உணவுகள், மைதா உணவுகள், சீனி உணவுகள், இவைகளை எளிமையான கார்போஹைட்ரேட்உணவுகள் (Simple Carbohydrate ) என்றும், தோல் அல்லது தவிடுடன் கூடிய தானியங்களை, கனிகளை, அவற்றிலுள்ள கார்போஹைட்ரேட்டை கடின கார்போஹைட்ரேட் ( Complex Carbohydrate ) என்றும் கூறுகிறார்கள்.
தோலுடன் கூடிய உணவுகளில் நார்ச்சத்து இருப்பதினால் ஜீரணம் மெதுவாகவே நடக்கும். அதனால் அவற்றிலிருந்து சுகரானது மிகவும் மெதுவாக இரத்தத்திற்கு வருகிறது. இதனால் இன்சுலின் தேவையும் குறைந்த அளவு மெதுவாகவே தேவைப்படுகிறது.
எண்ணெய்யில் செய்த உணவுகளை மாறிய கொழுப்பு உணவுகள் (Trans Fat Food) என்றும் கூறுகிறார்கள். இது திசுக்கள் சுகரை எடுத்துக்கொள்வதை மந்தப்படுத்துகிறது.
எளிமையான கார்போஹைட்ரேட் உணவு களுக்கு நிறைய இன்சுலின் தேவைப்படுகிறது. அவை அனைத்தையும் திசுக்கள் எரிப்பதற்கு வேர்வை சிந்தும் உடலுழைப்பும் தேவைப்படுகிறது.
மாறிய கொழுப்பு உணவுகளை அதிகம் உண்பதால் அதனால் உருவாகும் செல்களால் இரத்தத்திலுள்ள சுகர் மற்றும் இன்சுலினை குறைந்த அளவே பயன் படுத்த முடிகிறது. இரத்தத்தில் சுகர் அதிகரிக்க மாறிய கொழுப்பு வகை உணவுகளும்(Trans Fat Food) ஒரு முக்கிய காரணமாகும்.
தேவையான அளவு இன்சுலின் சுரந்து உடல் உழைப்பு இல்லாத போது இரத்தத்தில் அதிகமாக இருக்கும் சுகரும், இன்சுலினும் கொழுப்பாக மாறி தோலின் அடியில் உறைந்து உடல் எடையை அதிகரிக்கிறது. அதிக உடல் எடை பலவித ஆரோக்கிய குறைவிற்கு காரணமாகிறது.
புரோட்டீன் வகை உணவு களை செல்கள் பயன் படுத்து வதற்கு இன்சுலின் தேவையில்லை. எனவே தோலுடன் கூடிய கடலை, பயறு, மற்றும் பருப்பு, காய், கீரை, நட்ஸ், சீட்ஸ், போன்ற வைகளை மூன்று வேளை உணவிலும் இருக்கும் படி பார்த்துக்கொள்ள வேண்டும். வெள்ளை அரிசி, மைதா மாவு உணவுகளை குறைவாக உண்ண வேண்டும்.
சீனி மற்றும் மாறிய கொழுப்பு உணவுகள் மெல்லக்கொல்லும் விஷமாகும். அவை மனிதன் கண்டு பிடித்த இயந்திரங்களினால் தயாரிக்கப்பட்டு பல முக்கிமான சத்துக்கள் நீக்கப்பட்டு பயன் பயன்படுத்தப்படுகிறது.
தினமும் காலையில் திறந்த வெளியில் முப்பது நிமிடம் தடையின்றி ஏதாவது ஒரு உடற்பயிற்சிசெய்வது இரத்த சுகருக்கும், கொலஸ் டிரா லுக்கும், இரத்த அழுத்தத்திற்கும், அதிக உடல் எடைக்கும் மிகவும் நல்லது.
யாருக்கு வேண்டுமானாலும், எந்த வயதில் வேண்டுமானாலும் டயாபெட்டீஸ் வரலாம் என்பதை நினைவில் கொண்டு நல்ல உணவுகளிலும், உடற்பயிற்சியிலும் விருப்பத்தை ஏற்படுத்திக் கொள்ளவேண்டும். நோய்களை ஏற்படுத்தும் உணவுகளை தவிர்ப்பதில் உறுதி கொள்ளவேண்டும்.
அமைதியான வாழ்க்கைக்கு ஒன்பது வகை ஆரோக்கியங்கள்
1.உடல் ஆரோக்கியம்
1.உடல் ஆரோக்கியம் :- ஒவ்வருவரும் தனது உடல் இயங்கும் விதத்தை அறிந்திருக்க வேண்டும். சரியான உணவை உண்பது, தினசரி தேவையான அளவு உடற்பயிற்சி செய்வது, உடல் எடையை கட்டுக்குள் வைத்திருப்பது போன்றவை உடலின் இயக்கம் சரியானபடி நடக்க உதவும். போதை ஏற்படுத்தும் மாத்திரை, மது போன்ற வற்றை தவிர்ப்பதும், நோய் மற்றும் உடல் நலக்குறைவில்லாமல் இருப்பதும் உடல் ஆரோக்கியமாகும் .
நல்ல ஆரோக்கியத்தை நாடி அந்த வழிகளை கடைபிடிக்கும் குணாதிசயங்கள் நமக்கு இருக்க வேண்டும்.
Sunday, 4 September 2022
ஞாயிற்றுக் கிழமை - வைரமுத்து
ஞாயிற்றுக் கிழமையென்பது சக்தி.
ஞாயிற்றுக் கிழமையென்பது மனசைத் தூசுதட்டி வைக்கும் துப்புரவுநாள்.
பலருக்கு வாழ்க்கையே விடுமுறையாய் இருப்பதனால் ஞாயிற்றுக் கிழமையின் பெருமையே தெரிவதில்லை.
சனிக்கிழமை சாயங்காலத்தில் உயிரோடிருக்கிற ஞாயிற்றுக் கிழமை பிறக்கும்போது இறந்தே பிறக்கிறது.
ஞாயிற்றுக் கிழமை என்பது ஒய்வுகளின் உன்னத மண்டபம்.
மிகை ஊதியம் கிடைத்தால் ஞாயிற்றுக் கிழமையை விற்பதற்கு நாம் தயாா்.
அதற்கு வாய்ப்பில்லாதவா்கள் மட்டுமே ஞாயிற்றுக் கிழமையைக் கட்டாயக் கல்யாணம் செய்து கொள்கிறாா்கள்.
ஞாயிற்றுக் கிழமை என்பது உறக்கமல்ல விழிப்பு.
பூமி விழிக்குமுன்பே புலன்கள் விழித்து விடவேண்டும்.
பித்தளைப் பாத்திரங்களை மாதம் ஒரு முறை புளி போட்டுத் துலக்குவது மாதிரி, புலன்களை வாரம் ஒரு முறை புடம் போட்டுத் துலக்க வேண்டும்.
ஆனால் ஞாயிற்றுக் கிழமையென்றால் பதினொரு மணிக்குப் பல் துலக்குவது என்றுதான் இங்கு பலா் இல்லற அகராதிகளில் எழுதப் பட்டிருக்கிறது.
ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமையும் இந்தியாவுக்கு பாரத் பந்த் தாகவே இருக்கிறது.
ஜன்னல்களையும் புலன்களையும் சாத்திக் கொள்வதா ஞாயிற்றுக் கிழமை?
புலன்களை வலிக்க வைக்கும் பொழுது போக்குச் சாதனங்களுக்குள் புதைந்து போவதா ஞாயிற்றுக் கிழமை?
இந்தியாவுக்குக் கிடைத்த சுதந்திரத்தைப் போலவே இந்தியனுக்குக் கிடைத்த ஞாயிற்றுக் கிழமையும் தப்பாகப் பயன்படுத்தப்படுகிறது.
வாரத்தில் ஆறு நாட்கள் வயிற்றுக்காக வாழ்ந்து விட்டோமே!
ஒரு நாளாவது இதயத்துக்காக வாழவேண்டாமா?
வாரமெல்லாம் மனிதா்களோடு மன்றாடிக் கொண்டிருக்கிற மனிதா்களே!
ஞாயிற்றுக் கிழமையாவது தாவரங்களோடு பேசுங்கள்!
ஒரு செடிக்குப் பக்கத்தில் நாற்காலி போட்டு பூ மலரும்வரை பொறுத்திருங்கள்!
வானத்தில் வசிப்பதற்குப் பழகுங்கள்.
நாற்பது வயதிற்குப் பிறகு கால்சியத்தை கிரகித்துக் கொள்ள முடியாத மனித எலும்புகள் மாதிரி-மனிதா்கள் ஒரு குறிப்பிட்ட காலத்திற்குமேல் படிப்பதை நிறுத்தி விடுகிறாா்கள்.
ஒரு வீட்டில் சமையலறையைவிட நூலகம் முக்கியம் என்று சட்டம் போட வேண்டும்.
ஞாயிற்றுக் கிழமையை நல்ல புத்தகங்களுக்கும் நமக்குமுள்ள சிநேகநாள் என்று செய்து கொள்ளவேண்டும்.
திருமணத்திற்குப் பிறகு பல இந்தியப் பெண்களுக்கு, தாலிக்குப்போட்ட முடிச்சு மாதிரியே இல்லற வாழ்க்கையும் இறுகிக் கிடப்பதனால் அவா்களில் பலா் மன நோயாளியாகவே மாறிவிட்டாா்கள்.
நம் ரசனைகளையும் கலாசார அகலங்களையும் மனசின் பரப்பையும் விரிவு படுத்தும் வேலையைத்தான் ஞாயிற்றுக் கிழமை செய்ய வேண்டும்.
இரைப்பையை நிரப்பிக் கொள்ளத்தான் எல்லா நாட்களும்.
இதயத்தை நிரப்பிக் கொள்ள ஒரே நாள்தான்.
அதன் பெயா் ஞாயிற்றுக் கிழமை.
ஞாயிறு போற்றுதும்
வைரமுத்து
.jpg)








