Wednesday, 1 February 2012

ஸ்ரீலங்காவில் ஸ்ரீராம்



கொழும்பு தமிழ் சங்க ஹாலில் நடைபெற்ற மனவளக்கலை மன்ற நிகழ்ச்சியில் ஸ்ரீராம் ஆற்றிய உரையில் ஒரு பகுதி -

"இங்கே வந்திருக்கும் உங்களில் யாருக்காவது பக்கத்திலிருக்கும் போலீஸ் ஸ்டேஷன் இன்ஸ்பெக்டர் பெயர் தெரியுமா?"

(தெரியாது என்கிறார்கள் வந்திருந்த அன்பர்கள்).

" உங்களுக்கு ஏன் தெரியவில்லை தெரியுமா? நீங்கள் அனைவரும் நல்லவர்கள். போலீஸ் ஸ்டேஷன் போகவேண்டியதில்லை. அதனால் அங்கிருப்பவர்கள் பெயர் உங்களுக்குத் தெரியவில்லை!"

( கூட்டம் ஆமோதிக்கின்றது )

" இப்போ பக்கத்திலிருக்கும் Appollo மருத்துவமனை டாக்டர் பெயர் சொல்லுங்கள் - "
( கூட்டத்திலிருந்து பல பெயர்கள் சொல்லப்படுகின்றன )

" உங்களுக்கு ஏன் இவ்வளவு பேர்கள் தெரிந்திருக்கிறன..... நீங்கள் அடிக்கடி hospital செல்கின்றீர்கள்.... நீங்கள் ஆரோக்கியமாக இல்லை......உண்மைதானே.."

( கூட்டம் ஒத்துக் கொள்கின்றது )

" ஆனால் எனக்கும் என் அம்மாவிற்கும் எங்கள் BHEL hospital டாக்டர்கள் பற்றி தெரியாது. ஏனென்றால் நாங்கள் தினமும் உடற்பயிற்சி செய்கின்றோம். ஆரோக்கியமாக இருக்கின்றோம். Hospital செல்லவேண்டிய அவசியமில்லை. நீங்களும் உடற்பயிற்சி, தியானம் கற்றுக் கொண்டு தினசரி செய்யுங்கள். மகிழ்ச்சியாக வாழுங்கள். வாழ்க வளமுடன்! “
(பலத்த கரகோஷம் !)

1 comment:

  1. aahaaa Sri...you remind me of 'Vasanthan' in the movie "Ko" :))

    ReplyDelete