இந்த வருசம் தோட்டத்திலிருக்குற பலா மரத்துல ஏழெட்டு காய் காச்சிருக்கு..
சின்ன மரம்தான்.. போன வருசம் முத முதலா காய்க்க ஆரம்பிச்சுது..
சுந்து, ஷீலா வந்தப்ப ஒரு காயப் பறிச்சு தீயக்கறி பண்ணி ஒரு கட்டு கட்டுனோம்..
எதுக்கு இந்த blog ல பலா பத்தி சொல்றேன்னா, ஒரு பழைய தமிழ் பாட்டு கிடைச்சது..
அது ஒரு பலாபழத்துக்குள்ள எத்தனை சுளைகள் இருக்குதுன்னு கண்டு பிடிக்க வழி சொல்லுது..
அந்த பாட்டு –
" பலாவின் சுளையறிய வேண்டுதிரேல் ஆங்கு
சிறுமுள்ளுக் காம்பருகு எண்ணி - வருவதை
ஆறிற் பெருக்கியே, ஐந்தினுக்கு ஈந்திடவே
வேறெண்ண வேண்டாஞ் சுளை"
அர்த்தமென்னான்னா
பலாப்பழத்தோட காம்பச் சுத்தி எத்தன முள்ளு இருக்குன்னு எண்ணி அத ஆறால பெருக்கி அஞ்சால வகுத்தா வர்றதுதான் பழத்துக்குள்ளே இருக்குற சுளைகள்.. i.e., No of சுளைகள் = No of முள்ளுகள் around காம்பு X 6 /5
இந்த மாதிரி ரிசர்ச் ஏன் பண்ணுனாங்க - பொழுது போகலையா இல்ல வேற ஏதாவது
ட்ரை பண்ணுனாங்களா...?
என்னைப் பொருத்தவரையில இந்த பாட்டுல தப்பு இருக்குற மாதிரி தெரியுது..
இந்த formula வ இதுவரைக்கும் செக் பண்ணல...
இந்த வருசம் சரியா இருக்கான்னு பாக்கணும்..

எத்தனை முள் இருந்தால் என்ன எத்தனை சுளை இருந்தால் என்ன ... எனக்கு வேண்டியதெல்லாம் பலாக்காய் தீயகறி :P :P
ReplyDeleteபலாக்காய் தீய கறி, ரொம்ப நல்ல கறி (:-P............
ReplyDeleteI love the பலா பழம் too (will take Sheila's share) :)