Wednesday, 31 October 2012

MIDWEEK INSPIRATION


Seeds of Love:  The Ultimate Gift
Denis Waitley
Touch is the magic wand of intimacy. Love is keeping in touch.

Love should be a verb, not a noun or adverb. Love is an active emotion.


Don’t assume that money, shelter and creature comforts are enough to demonstrate your love.

Nothing can replace your presence, your hug, your smile, your touch --- you!

Love is one of the few experiences in life that we can best keep by giving it away.

Only when you set your romantic and business partners free to be all they can be, will you know how attractive and lovable you are yourself; free of the insecurity and self-doubt that spawn envy and jealousy.


To love is to be open and vulnerable, and to receive graciously that which is given.

Value is in the doer, not the deed.

Love yourself and give away, all the love you can today.

Healthy love can’t be demanded nor taken for granted. It can only be a continuing give-and-take exchange and dialogue between two independent persons who share many values and responsibilities, yet still feel a childlike magic with each other.

The first words you should speak to the one beside you when you awaken each morning are, “Good Morning, I love you.” The last words you should speak each night are, “Good Night, I love you.”

HAPPY HALLOWEEN


Tuesday, 30 October 2012

மூளைக்கு வேலை - 11


மூளைக்கு வேலை - இந்த பழைய புதிர் கதையை படிக்கிறதுதான்!


ஒரு ஊரில் இரண்டு சகோதரர்கள் இருந்தனர். அவர்களில் ஒருவன் பரம ஏழை. மற்றொருவன் பணக்காரன். பணக்காரனிடம் அவன் தம்பியாகிய ஏழை ஒரு பசுவைக் கேட்டான். அண்ணன் பசுவைக் கொடுப்பதற்கு முன், "என் நிலத்தில் நீ தினமும் வந்து ஓராண்டு உழைக்க வேண்டும்!'' என்றான்.

அவனும் ஒத்துக் கொண்டான். பசுவை வாங்கிக் கொண்ட இளையவன், தான் ஒத்துக்கொண்டது போல் அண்ணன் நிலத்தில் ஓராண்டு முழுவதும் உழைத்தான். ஓராண்டு முடிந்தது. தம்பி அண்ணனிடம் வேலைக்குச் செல்லவில்லை. மறுநாளே பசுவை திருப்பிக் கேட்டான் அண்ணன்.
""ஓராண்டு உன் நிலத்தில் உழைத்தேன் அல்லவா பசு எனக்குத்தான்!'' என்றான்.


மூத்தவன், "அதெப்படி முடியும்? ஓராண்டு காலம் நீ என் பசுவிடம் பால் கறந்து பலனை அனுபவித்தாய் அல்லவா? அதனால் இரண்டிற்கும் சரியாகிவிட்டது!'' என்றான்.


இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இருவரும் ஒரு பிரபுவிடம் சென்றனர். வழக்கை விசாரித்த பிரபு, அவர்கள் இருவருக்கும் மூன்று புதிர்களைக் கொடுத்து, "இதற்குச் சரியான பதில்களை யார் சொல்கிறீர்களோ அவர்களுக்குத்தான் பசு!'' என்று கூறி புதிரைச் சொன்னார்.


"முதல் புதிர், மனிதனுடைய வயிற்றை நிரப்புவது எது? இரண்டாவது புதிர், மனிதனுக்கு மிக மகிழ்ச்சியைத் தருவது எது? மூன்றாவது புதிர், அதிக விரைவாகச் செல்வது எது? இந்த மூன்று புதிர்களுக்கும் நாளை விடை கூறுங்கள்!'' என்றார்.


இருவரும் வீட்டிற்கு வந்து மூளையைக் குழப்பி சிந்தித்தனர்.


மறுநாள் காலை பிரபுவைச் சந்தித்தனர். மூத்தவனைப் பிரபு அழைத்து, "என் புதிருக்கு விடை சொல்!'' என்றார். "மேன்மை தங்கிய பிரபு அவர்களே! ஒரு மனிதனுடைய வயிற்றை நிரப்புவது எது என்று கேட்டீர்கள். அதற்குச் சரியான விடை பன்றிக்கறி. கொழுத்த பன்றிக் கறியைச் சாப்பிட்டால் வயிறு நிரம்பும். பல மணி நேரம் பசிக்காது.
"இரண்டாவது, மனிதனுக்கு மகிழ்ச்சியைத் தருவது எது என்று கேட்டீர்கள். அதற்கு விடை பணம். பணம் பெட்டி நிறைய இருக்கும்போது எவ்வளவு மகிழ்ச்சி ஏற்படுகிறது தெரியுமா? பணம் குறையக் குறைய மகிழ்ச்சியும் குறையும்.
"மூன்றாவதாக, அதிவிரைவாகச் செல்வது எது என்று கேட்டீர்கள். அதுற்குச் சரியான விடை வேட்டை நாய். வேட்டை நாய்கள் விரைவாக ஓடி முயல்களைக்கூட பிடித்து விடுகின்றனவே!'' என்று சொல்லிவிட்டு பிரபுவைப் பார்த்து, "பசு எனக்குத்தானே!'' என்று கேட்டான்.


"முட்டாளே! நீ சொன்ன அனைத்தும் அபத்தமான பதில்கள்!'' என்றார் பிரபு.


இளையவன் அழைக்கப்பட்டான்.


"நம் வயிற்றை நிரப்புவது பூமி. பூமி தாயிடம்தான் நாம் உண்ணும் தானியங்களும், கிழங்குகளும் கிடைக்கின்றன. அந்த உணவால்தான் விலங்குகளும், பறவைகளும் வாழ்கின்றன. இரண்டாவதாக ஒரு மனிதனுக்கு அதிக மகிழ்ச்சி தருவது தூக்கம். தூக்கத்திற்காக விலையுயர்ந்த செல்வத்தையும் மனிதன் விட்டுவிடுவான்.
மூன்றாவது, அதிவிரைவாகச் செல்வது நமது சிந்தனை ஓட்டம். அது நாம் விரும்பியபோது விரும்பிய இடத்தில் கொண்டு போய்ச்சேர்க்கும்!''


"இவையே சரியான விடைகள். இந்தப் பசு உனக்கே!''


பசுவைக் கொடுத்தபின் பிரபு கேட்டார். "இந்தப் புதிர்களுக்கு உனக்கு விடை கூறியது யார்?'' என்றார்.


"என் மகள் மரூஸ்யா!''


"அவள் என்ன அவ்வளவு விவேகியா?''


"ஏதோ கொஞ்சம்!''


"என் அளவிற்கு அவளுக்கு அறிவு இருக்கிறதா என்பதை பரீட்சை செய்து பார்த்து விடுகிறேன்!''


பிரபு பத்து அவித்த முட்டைகளை அவனிடம் கொடுத்து, "இதோ இந்த பத்து அவித்த முட்டைகளையும் உன் மகளிடம் கொடுத்து, ஒரு கோழியினால் அடைகாக்க வைத்து, பத்துக் குஞ்சுகளை ஓர் இரவிற்குள் பொரிக்க வைத்து அதே குஞ்சுகளை அதே இரவில் கோழியாக்கி, முட்டை போடவைத்து, பத்து முட்டைகளில் மூன்றை எடுத்து அடையாக்கி நாளைக் காலை உணவிற்கு எனக்குக் கொண்டுவா!'' என்றார்.


தன் மகள் மரூஸ்யாவிடம் சென்று அதை அப்படியே ஒப்புவித்தார் அவளது தந்தை. தன் மகள் இந்தப் புதிருக்கு விடை எப்படிச் சொல்லப்போகிறாள் என்று கவலைப்பட்டார். ஆனால், அவளோ எதிர் புதிர் போட்டாள். தன் தந்தையிடம் வேக வைத்த துவரைகள் அடங்கிய ஒரு பானையைக் கொடுத்து, "இதில் உள்ள துவரையை நிலத்தில் விதைத்து, முற்றியவுடன் அறுத்து எனது கோழிக் குஞ்சுகளுக்கு உணவாக தயாராக வைக்கும்படி கூறுங்கள்!'' என்றாள்.


அவளுடைய தந்தையும் அவ்வாறே பிரபுவிடம் சென்று சொன்னார். துவரையைப் பார்த்த பிரபு அவற்றை நாய்க்குப் போட்டுவிட்டு, சணல் தண்டு ஒன்றைக் கொடுத்து, "இதை ஊறவைத்து காயவைத்து நூறு ஜெகமுள்ள துணி தயாரிக்கச் சொல்!'' என்றார். ஆனால், அவளோ அதற்குப் பதிலாக மிக மெல்லிய குச்சி ஒன்றைக் கொடுத்து, "இதிலிருந்து நூலை நூற்பதற்கு ஒரு ராட்டினமும், கதிரும் செய்து தரும்படிக் கூறுங்கள்!'' என்றாள்.


அவளது அறிவின் ஆழத்தைக் கண்ட பிரபு, "உன் மகளை நாளை என்னை வந்து பார்க்கச் சொல். ஆனால், அவள் நடக்கவோ, சவாரி செய்யவோ கூடாது. வெறுங்காலுடனோ, செருப்புடனோ வரக்கூடாது. பரிசுடனோ, பரிசின்றியோ வரக்கூடாது. இது கடுமையான உத்தரவு!'' என்றார்.


மறுநாள் பனிச்சறுக்கு வண்டியில் வெள்ளாட்டைப் பூட்டி, ஒரு காலில் மட்டும் செருப்பு அணிந்து, முயல் ஒன்றையும், சிட்டுக்குருவி ஒன்றையும் தெரியாமல் எடுத்துச் சென்றாள் மரூஸ்யா. அவள் மிகுந்த புத்திசாலித்தனத்துடன் வருவதைக் கண்ட பிரபு, அவள் மீது நாய்களை ஏவினார். பதிலுக்கு இவள் முயலை வெளியே விட, நாய்கள் முயலைத் துரத்தின.


"இதோ உங்களுக்கு ஒரு சிறிய பரிசு!'' என்று சிட்டுக்குருவியைக் கொடுத்தாள். அது அவரது கையில் சிக்காமல் பறந்துவிட்டது. தான் சொல்லியபடியே வந்துவிட்ட அவளை நினைத்துப் பெருமைப் பட்டார்


 பிரபு. அப்போது இருவர் வழக்கு ஒன்றைக் கொண்டு வந்தனர்.
"நாங்கள் இருவரும் அடுத்தடுத்து இரு குதிரைகளை ஓர் இரவில் கட்டி இருந்தோம். இரண்டு குதிரைகளும் அன்றிரவே குட்டிகளை ஈன்றன. அவனுடைய குதிரையின் குட்டி இறந்துவிட்டது. என்னுடைய குட்டியைப் பார்த்து அவனுடைய குதிரைக் குட்டி என்கிறான்!'' என்றான் ஒருவன். அடுத்தவனைக் கேட்டதற்கு அவனும் அவ்வாறே பதில் சொன்னான்.
பிரபு இரு குதிரைகளையும் தனித்தனியே கட்டச் சொல்லி, குட்டியை விடச்சொன்னார். குட்டி இரு குதிரைகளிடமும் செல்லாமல் தனியே ஓடிவிட்டது. 


அந்தத் தீர்ப்பை அவர் மரூஸ்யாவிடம் கேட்டார். மரூஸ்யா குட்டியைக் கட்டச் சொல்லி குதிரைகளை அவிழ்த்துவிடும்படி கூறினாள். அவ்வாறே செய்தனர். தாய்க்குதிரை தன் குட்டியைத் தேடிக்கொண்டு ஓடிவந்தது.
பிரபுவின் தலைக்கனம் குறைந்தது. தன்னைவிட மரூஸ்யா புத்திசாலி என்று ஒப்புக்கொண்டார். அவளுக்கு வெகுமதியளித்துப் பாராட்டினார்.


நீதி: வல்லவனுக்கு வல்லவன் வையகத்தில் உண்டு. 

World Savings Day


World Savings Day 

The World Savings Day was established on 31st October 1924 during the 1st International Savings Bank Congress held in Milano, Italy. On the last day of the congress, an Italian Professor Filippo Ravizza declared this day the "International Saving Day".  It was formerly called World Thrift Day. The World Savings Day is usually observed on October 31st except in countries where this day is a public holiday. This is because the objective is to keep the banks open, so that the people can transfer their savings into their account.

In India, World Savings Day was observed on October 31 till 1984. After that it is celebrated on October 30th because of the death of Prime Minister Indira Gandhi on the same day in 1984. After the Second World War, World Savings Day reached the peak of its popularity. In order to attain the goal of world savings day celebrations, savings banks started working with the support of the schools, the clergy, as well as cultural, sports, professional, and women’s associations.

Monday, 29 October 2012

பெண்கள் - 2


கூட்டுக் குடும்பம்... தனிக்குடித்தனம்...எது பெண்கள்சாய்ஸ்?

எம்.செந்தில்குமார்                         நன்றி  - புதிய தலைமுறை வார இதழ் 


இன்றைய குடும்பத் தலைவிகளின் எதிர்ப்பார்ப்புகள் என்ன? ஆசைகள் என்ன?


நிர்வாகவியலைக் கற்றுத்தர பல பல்கலைக்கழகங்களும், கல்லூரிகளும் இருக்கின்றபோதும் ஆண்டாண்டு காலமாய்  இல்லங்களில் இலவசமாகவே நிர்வாகவியலை கற்றுத் தந்தவர்கள் நமது குடும்பத்  தலைவிகள். அஞ்சறைப்பெட்டிகளிலும், மளிகைச் சாமான் டப்பாக்களிலும் ‘சிறுவாடு’ வங்கிகளை நடத்தும் பெருமை இவர்களுக்கே உண்டு. இன்றும் அரசுக்கு நிகராக மாத பட்ஜெட் போட்டு, குடும்பத்தை தாங்கிப்பிடிக்கும் தூண்களாக விளங்குகிறார்கள் நம் குடும்பத்தலைவிகள். இவர்கள் குறித்த சர்வே ஒன்று சமீபத்தில் வெளியிடப்பட்டுள்ளது. 500 குடும்பத்தலைவிகளிடம் மேற்கொள்ளப்பட்ட இந்த சர்வே குடும்பத் தலைவிகளின் தற்போதைய நிலை என்ன? அவர்களின் எதிர்பார்ப்புகள் என்ன  என்பது போன்ற பல கேள்விகளுக்குப் பதிலளிக்கும் வகையில் அமைந்துள்ளது.

சர்வே துளிகள்:

  • சர்வே எடுக்கப்பட்ட இல்லத்தரசிகளில் இளங்கலை பட்டதாரிகளாக 32% பேரும், பன்னிரெண்டாம் வகுப்பு வரை படித்தவர்கள் 30% பேரும், பத்தாம் வகுப்பு வரை படித்தவர்கள் 20% பேரும் இருந்துள்ளனர்.  பட்ட மேற்படிப்பு படித்தவர்கள் 7% பேர் மட்டுமே. பத்தாம் வகுப்புக்குக் கீழே படித்தவர்கள் 11% பேர்.
  • திருமணம் முடிந்து வேலைக்கு செல்லாததற்குக் காரணம் குடும்பச்சூழ்நிலை என 40% பேரும், ஆர்வம் இல்லை என 34% பேரும், தன்னுடைய கணவருக்கு விருப்பம் இல்லை என 26% பேரும் தெரிவித்துள்ளனர்.
  • தங்களுடைய மனக்குழப்பங்களையும், கருத்துக்களையும் தங்கள் தோழிகளிடம் பகிர்ந்துகொள்வதாக 68% குடும்பத் தலைவிகளும், கணவரிடம் பகிர்ந்துகொள்வதாக 23% குடும்பத் தலைவிகளும், உறவினர்களிடம் பகிர்ந்துகொள்வதாக 9% குடும்பத் தலைவிகளும் தெரிவித்துள்ளனர்.
  • வீட்டில் கைத்தொழில் ஏதும் செய்கிறீர்களா என்ற கேள்விக்கு இல்லை என 72% பேரும், ஆம் என 28% பேரும் தெரிவித்துள்ளனர்.
  • ஓய்வு நேரத்தில் தூங்குவதாக 40% பேரும், தொலைக்காட்சி பார்ப்பதாக 36% பேரும், புத்தகங்கள் படிப்பதாக 6% பேரும், ஓய்வு நேரமே கிடைப்பதில்லை என்று 18%பேரும் தெரிவித்துள்ளனர்.
  • தினசரி செய்தித்தாள் வாசிக்கும் பழக்கம் உண்டா என்ற கேள்விக்கு இல்லை என 72% பெண்களும், உண்டு என 28% பெண்களும் கருத்து கூறியுள்ளனர்.
  • வாரப் பத்திரிகைகள் வாசிக்கும் பழக்கம் உள்ளதா  என்ற கேள்விக்கு ஆம் என 67% இல்லத்தரசிகளும், இல்லை என 33% இல்லத்தரசிகளும் பதிலளித்துள்ளனர்.
  • 61% குடும்பப் பெண்கள் தங்களுடைய கல்வித் தகுதியை உயர்த்திக்கொள்ள விரும்புகின்றனர். அதாவது மேற்கொண்டு படிக்க விரும்புகின்றனர். 39% குடும்பப் பெண்களுக்கு மேற்படிப்பு படிக்க ஆசை இல்லை.
  • தனிக்குடித்தனம் நடத்தவே 72% பெண்கள் ஆசைப் படுகின்றனர். 28% பெண்கள் மட்டுமே கூட்டுக் குடும்பத்தை விரும்புகின்றனர்.
  • மாதந்தோறும் குடும்ப வரவு - செலவுக் கணக்குகளை எழுதி வைப்பதாக 56% பெண்களும், எழுதி வைப்பதில்லை என 44% பெண்களும் தெரிவித்துள்ளனர்.
  • உங்கள் கோபத்தை யாரிடம் அதிகம் காட்டுவீர்கள் என்ற கேள்விக்கு குழந்தைகள் மீது என 50% பெண்களும், கணவர் மீது என 35% பேரும், மனதுக்குள்ளேயே புழுங்கிவிடுவதாக 15% பேரும் கருத்து தெரிவித்துள்ளனர்.
  • தினந்தோறும் சிறு உடற்பயிற்சிகள், யோகா போன்றவை செய்வதுண்டா என்ற கேள்விக்கு, இல்லை என 91% குடும்பப் பெண்கள் தெரிவித்துள்ளனர். உடற்பயிற்சி செய்யும் குடும்பப் பெண்கள் 9% மட்டுமே.
  • மின்சாரத்தைச் சிக்கனமாக செலவழிப்பது குறித்த விழிப்புணர்வு 92% குடும்பத்தலைவிகளுக்கு இல்லை. 8% பெண்கள்மட்டுமே இது குறித்த விழிப்புணர்வைப் பெற்றுள்ளனர்.
  • மின்சாரம் இல்லாதபோது எப்படி சமையல் செய்கிறீர்கள் என்ற கேள்விக்கு மின்சாரம் இருக்கும்போதே தேவையானவற்றை தயார் செய்து விடுவதாக 72% குடும்பத் தலைவிகள் பதிலளித்துள்ளனர். 20% குடும்பத்தலைவிகள் மின்சாரம் வரும்வரை காத்திருப்பதாகத் தெரிவித்துள்ளனர். அம்மி போன்றவற்றைப் பயன்படுத்துபவர்கள் 8% குடும்பத்தலைவிகள் மட்டுமே.

ஆய்வும், தீர்வுகளும்:

  • தற்போதைய இல்லத்தரசிகளில் பெரும்பாலானோர் கல்வி கற்றவர்களாக இருப்பது ஆரோக்கியமான வளர்ச்சி. 61% பெண்கள் பட்ட மேற்படிப்பு படிக்க ஆசைப்படுகின்றனர். ஆனால் குடும்பச்சூழ்நிலை என்பது அவர்களுக்கு பெரிய தடைக்கற்களாக உள்ளது. கணவருக்கு   விருப்பம்   இல்லை  என க்   குறிப்பிட்ட அளவு இல்லத்தரசிகள்கூறியிருப்பது, இன்னும் பெண்கள் மாறவில்லையோ என யோசிக்கவைக்கிறது. கல்வி என்பது என்றும் அழியாச் செல்வம். குடும்ப உறுப்பினர்களுக்குத் தெளிவாக புரிய வைத்தால் எதுவும் சாத்தியம்.
  • அதேபோல் பட்ட மேற்படிப்பு படித்தவர்கள் குறைவாகவே உள்ளனர் என்ற தகவல் பெண்கள் கல்வி குறித்த விழிப்புணர்வை அதிகரிக்க வேண்டும் என்பதைப் பிரதிபலிப்பதாக உள்ளது.
  • தினசரி நாளிதழ்கள் படிக்கும் பழக்கம் பெண்களிடம் இல்லை என்பது வருத்தமூட்டும் செய்தி. பொது அறிவை வளர்த்துக் கொள்ளாமல் வீடே கதி எனக் கிடக்கும் குடும்பத் தலைவிகள் அறியாமையின் பிறப்பிடமாக மாறி விடுகின்றனர். படிப்பறிவு இருந்தும் நாளிதழ்கள் வாசிக்கும் பழக்கம் பெண்களிடையே இல்லாதது அவலம்.
  • வார இதழ்கள் படிக்கும் குடும்பத் தலைவிகளின் எண்ணிக்கை அதிகம் என்ற தகவல் மூலம் குடும்பத் தலைவிகளிடம் வாசிக்கும் பழக்கம் உள்ளது என்பது நமக்குத் தெரிய வருகிறது. ஆனால், செய்தித்தாள்கள் ஏனோ அவர்களுக்கு கசக்கின்றது. மேலும் திரைப்படங்கள், சீரியல் போன்றவற்றிற்கு அதிகமான நேரத்தை இல்லத்தரசிகள் ஒதுக்குகின்றனர். இவற்றைப் பார்க்கும்போது, இல்லத்தரசிகளுக்கு அதிக ஓய்வு நேரம் இருப்பது புலனாகிறது. எனவே கிடைக்கும் ஓய்வு நேரத்தை தூக்கம், சினிமா எனப் பொழுதுபோக்காமல் எளிதான கைத்தொழில், மேற்படிப்பு போன்றவற்றிற்கு குடும்பத் தலைவிகள் பயன்படுத்தலாம். தனிக்குடித்தனம் ஆசை இன்னும் நம் பெண்களை விட்டு அகலவில்லை. கூட்டுக் குடும்ப அமைப்பு சிதைந்ததால் ஏற்படும் பாதிப்புகளை ‘முதியோர் இல்லங்கள்’ என்ற பெயரில் இன்றும் நாம் கண்கூடாகப் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.  கூட்டுக் குடும்ப வாழ்க்கையில்தான், பெண்களின் உண்மையான நிர்வாகத்திறன் வெளிப்படும். தாத்தா, பாட்டி போன்ற உறவுகளை இழந்துவரும் இன்றைய தலைமுறைக்கு உறவுகளின் முக்கியத்துவத்தை உணர வைக்க கூட்டுக் குடும்பமே சரியான வழி.
  • பாதி குடும்பத் தலைவிகள் வரவு - செலவுகளை திட்டமிடுவதில்லை. வரவு செலவுகளை திட்டமிடுதல் என்பது ஒரு குடும்பத்தை சிறந்த முறையில் நிர்வகிப்பதில் முக்கியமான ஓர் அம்சம். ஒரு முறை மாத பட்ஜெட் போட்டுப்பாருங்கள். வீண் செலவுகள் எவை, முக்கியத் தேவைகள் எவை என்பது உங்களுக்கே புரியும்.
  • குழந்தைகள் மீது தங்கள் கோபத்தை வெளிப்படுத்துவதாக பெரும்பாலான குடும்பத் தலைவிகள் கூறியுள்ளது அறியாமை. கண்டிப்பு என்ற பெயரில்,பல பெற்றோர்கள் தங்கள் கோபத்தை குழந்தைகளிடம் வெளிப்படுத்துவதால்தான் மனதளவில் குழந்தைகள் பாதிக்கப்படுகின்றனர். கோபத்தின் வடிகாலாக குழந்தைகளை தயவுசெய்து பயன்படுத்தாதீர்கள்.
  • உடற்பயிற்சி செய்யும் குடும்பத் தலைவிகள் மிக மிகக் குறைவு என்பது அதிர்ச்சி தரக்கூடிய தகவல். ஓடி, ஆடி வேலை செய்த அந்தக் காலப் பெண்களுக்கு உடற்பயிற்சி என்பது தேவைப்படவில்லை. அம்மிக்கல்லை படத்தில் கூட பார்த்திராத நமக்கு உடற்பயிற்சி என்பது மிகவும் முக்கியம். கண்டிப்பாக குறைந்தபட்சம் 30 நிமிடங்களுக்காவது உடற்பயிற்சி மேற்கொள்ள வேண்டும். இது ஒரு சின்னத்திரையில் ஒரு சீரியலின் ஒரு எபிசோட் நேரமே.

SCORPIO


SCORPIO  CONSTELLATION


Oct  24  to Nov 22

Stars - Alpha Libroe, Delta Scorpic & Antares ( விசாகம், அனுஷம் & கேட்டை )

Sunday, 28 October 2012

I'm back..








I am back after three days student life

with great freshness...



See you tomorrow.

Tuesday, 23 October 2012

லீவு..!



விஜயதசமியன்னிக்கி ஆன்மீக அரிச்சுவடியை ஆரம்பிக்கலாம் என்றிருந்தேன்.

M.Sc கிளாஸ் கலந்துகொள்ள ஆழியார் செல்வதால் ஆனா, ஆவன்னா அடுத்த மாதம் சொல்லித்தரப்படும்.


மூன்று நாட்களுக்கு வயல்வெளியில் வேலை நிறுத்தப்பட்டுள்ளது.



ஹையா... ஜாலி..! 

ரொம்ப ஆடவேண்டாம்..சீக்கிரம் வந்துடுவேன்!

எந்தன் நெஞ்சில் நீங்காத தென்றல் நினைவுகள் - 19

சின்ன வயசுல நான் ஆவலோட எதிர்பாக்குற பண்டிகை சரஸ்வதி பூஜைதான்...
பூஜைக்கு முதல்நாளே தென்னைமரம் ஏறி குருத்தோலை வெட்டி அதில் தோரணம் செய்ய ரெடியாயிடுவோம். பக்கத்து வீட்ல இருந்த ஐயர் ஒருத்தர் ஓலையில அழகா கிளி பண்ணுவார். சமையல் கட்டுல பெரிசா ஊஞ்சல் இருக்கும்.
அதை கழட்டிவிட்டு அந்த இடத்தை பூஜைக்காக அம்மா தயார் பண்ணுவாங்க. நாலு பக்கமும் கயிறு கட்டி அதில் தென்னந்தோரணம் அதில் நடுநடுவே மாவிலைத் தோரணம் கட்டுவோம்.
சந்தனம் அரைக்கிற கட்டையை வச்சு - அதுக்குன்னே ஒரு வட்டமான கல் இருக்கும் - அதில சந்தனம் அரைச்சு வீட்ல இருக்குற எல்லா கதவுகளுக்கும், மேஜை, நாற்காலி, சைக்கிள், பெட்டிகள்  விடாம  ஃ  மாதிரி பொட்டு  வச்சு அதுல குங்குமம் வைப்போம்.

அப்புறம் சாமி ரூம்ல இருக்குற நூத்துக்கணக்கான சாமிபடங்களை துடைச்சு அதிலேயும் சந்தன போட்டு வைப்போம். சரஸ்வதி படத்தை கழட்டி பூஜை நடத்துற இடத்துக்கு எடுத்துவந்து பூ அலங்காரம் பண்ணுவோம். எங்க வீட்ல இருந்தது ரவிவர்மா வரைஞ்ச படத்தோட பிரிண்ட். அதுல சரஸ்வதி பாறையில உக்காந்துருப்பாங்க. "வெள்ளைத் தாமரைப்பூவில் வீற்றிருப்பாள்" என்ற பாடலுக்கு பொருத்தமில்லாமல் பாறை மேல சாமி உக்காந்திருக்கேன்னு யோசிப்பேன். இதற்கான விளக்கம் ரொம்ப நாளைக்கப்புறம்தான் கிடைச்சது.- ." அதாவது கல்விச் செல்வம் அழியாதது..கல் போல உறுதியானது..ஆனால் பொருட்செல்வம் பூ போல வாடிவிடும் அதனால் லக்ஷ்மிக்கு செந்தாமரைப்பூ சீட்
கொடுத்தாங்க..பின்னாடி வந்தவங்க சரஸ்வதியும் எவ்வளவு நாள் கல் மேல உக்காந்திருப்பாங்கன்னு யோசிச்சு மென்மையான வெள்ளைத் தாமரை சீட் கொடுத்துட்டாங்க"

எல்லோருடைய பள்ளிக்கூட புத்தகங்கள், வீட்ல மற்றும் தொழில் சம்பந்தமான பொருட்கள் அத்தனையும் பூஜையில வைப்போம். வீட்ல வெள்ளியிலான எழுத்தாணியும், செப்பு தகடுகளும் இருக்கும். அதையும் பூஜையில  வைப்பாங்க..முக்கியமா கருப்புகலர்ல ஒரு சின்ன மரப்பெட்டி இருக்கும்..அதுல பழங்கால நாணயங்கள் இருக்கும்..அதையும் பூஜையில வைப்போம்.


அம்மாவுக்கு, அண்ணிகளுக்கு சமையல் வேலைகள் ரொம்ப அதிகமாக இருக்கும் - முக்கியமா முக்காலி கிண்டுற வேலை ரொம்ப நேரம் பிடிக்கும். ரொம்ப  டேஸ்டியான உளுந்து களி! சிவராமனுக்கு பேரே 'முக்காலி சிவராமன்!' ( அவன் சின்ன வயசுல எனக்கு எழுதின லெட்டர்ல முக்காலி சிவராமன்ன்னு கையெழுத்து போட்டு அனுப்பியிருக்கான், அந்த லெட்டர் பத்திரமா என்கிட்டே இருக்கு ). அப்புறம் வடை, சுண்டல்ன்னு பலவித நைவேத்தியம் பண்ணி படைப்பாங்க.. அப்பா அம்மாவைவிட்டு படைக்க சொல்லுவாங்க.


தீபாராதனை எடுத்தப்புறம் ஒவ்வொருத்தரா சாமிக்கி சரணம் பண்ணிக்கிரப்ப அப்பா ஒவ்வொருத்தர் கையிலேயும் பணம் கொடுத்து அந்த கருப்பு பெட்டியில வைக்க சொல்லுவாங்க..( சமீபத்துல மாயூரம் போனப்ப அண்ணன் வீட்ல பூஜை அறையில இருந்த
 அந்த கருப்பு பெட்டியை தொட்டு வணங்கிவிட்டு வந்தேன் )


அப்புறம் விஜயதசமி அன்னிக்கு மறுபடியும் சாமிக்கு படைச்சு புத்தகங்களையெல்லாம் எடுத்து படிக்கணும்..

குழந்தைகளை பள்ளியில் சேர்க்க நிறைய பெற்றோர்கள் குழந்தைகளோட வருவாங்க..அப்பல்லாம் LKG கிளாஸ் கிடையாது.. அஞ்சு வயசானால் ஒண்ணாங்கிலாஸ் ல  சேரலாம். கனவசப்பா வாத்தியார் அன்னிக்கி கோட்டு போட்டுக்கிட்டு ஸ்கூலுக்கு வருவாரு. அரிச்சுவடி புத்தகத்தை குழந்தை கையில கொடுத்து " ஹரி நமோத்து சிந்தம்" ன்னு சொல்ல சொல்லி சிலேட்டுல  'ஆனா' போட கத்து கொடுப்பாரு. குழந்தைகளை சேர்க்கவந்தவங்க ஸ்கூல்ல இருக்குற எல்லா குழந்தைகளுக்கும் மிட்டாய், பிஸ்கட், பழங்கள்ன்னு கொடுப்பாங்க.


நவராத்திரி, கொலு இன்னும் இது தொடர்பான பல மலரும் நினைவுகள் எக்கச்சக்கமா இருக்கு..நேரம் கிடைக்கும்போது சொல்றேன்..

போன வருஷம் ஆயுத பூஜைக்கு மெயிலில் வந்த படம் கீழே -


Monday, 22 October 2012

பெண்கள்


தமிழ்நாட்டு  பெண்களிடம்  நடத்திய திருமணம்  பற்றியக்  கணக்கெடுப்பில்  சில  புள்ளிவிவரங்கள்

78% பெண்கள் வரதட்சணையால் தங்கள் திருமணம் தாமதமாகிறது என்று தெரிவித்துள்ளனர். (இது நாகர்கோயில் பகுதியில் அதிகமாக உள்ளது)

70% பெண்கள் திருமணத்திற்கு முன் மருத்துவப் பரிசோதனை கட்டாயம் (மாப்பி ள்ளை, பெண் குடும்பத்தினர் உள்பட) என்று தெரிவித்துள்ளனர்.

77% பெண்கள் திருமணச் செல வினை இரு வீட்டாரும் ஏற்றுக்கொள்ள வேண்டும் எனத் தெரிவித்துள்ளனர்

36% பெண்கள் கணவன் அடித்தால் பெற்றோரிடம் போய் சொல்லவேண்டும் என்றும் 28% பெண்கள் காவல் நிலையம் செல்லவும் 30% விழுக்காடு பெண்கள் மகளிர் ஆணையம் மற்றும் மகளிர் அமைப்புகளிடம் செல்ல வேண்டும் என்றும் கூறியுள்ளனர்.

32% பேர் நிச்சயிக்கப்பட்ட திரு மணத்தையும், 44% பேர் சொந்தத்திலும் திருமணம் வேண்டாம் என்கின்றனர்.

2.4 விழுக்காட்டினர் மட்டுமே ஜாதகம் வேண்டும் என்கின்றனர். 0.4 விழுக்காடு மட்டுமே ஜாதியின் அடிப்படையில் திருமணம் செய்து கொள்ள விரும்புகின்றனர்.

17.7% பேர் குடும்பப் பின்னணியை தெரிந்து கொள்கின்றனர்.

20% பேர் மட்டும் தரகர் மூலம் தமது இணையைத் தேர்ந்தெடுக்கின்றனர் 

25.6% பேர் பெற்றோரின் வற்புறுத் தலால் திருமணம் செய்து கொள்கின்றனர்.

Sunday, 21 October 2012

இன்று படித்தது - 13


இதுதான் என் கடைசி ஆசை!

                                    உடுமலை நாராயண கவி

புகழ் உச்சியில் இருந்தபோதும் மிக எளிய வாழ்க்கை வாழ்ந்த உடுமலை நாராயண கவியார், தம் 82ஆம் அகவையில் (23.05.1981)ல் உயிர்துறந்தார். அவர்தம் இறப்பிற்கு முன்பு எழுதி வைத்த இறுதி ஆவணத்தில், தாம் இறந்தபிறகு என்ன செய்யவேண்டுமென்பதைக் குறித்துள்ளார்.

அந்த ஆவணத்தில், செத்த பிணத்தை வைத்துக் கொண்டு, இனிமேல் சாகும் பிணங்கள் கூத்தடித்துக் கொண்டிருப்பது அறியாமை; இந்த அறியாமையானது பணத்தின் அளவிலே விரிவடைகிறது, குறைகிறது.

என்னைப் பொறுத்தமட்டில் இந்த அறியாமை வேண்டாம். உடலைவிட்டு உயிர் பிரியுமானால் அப்போதே காலத்தை வீணாக்காமல் குழியைத் தோண்டிப் புதைப்பதோ அல்லது எரிப்பதோ இந்த இரண்டில் ஒன்றைச் செய்திடுங்கள்! வேறு எந்தவகையான சடங்குகளும் தேவையில்லை.

மீறிச் செய்வது அறியாமை. உங்களை மன்றாடிக் கேட்டுக் கொள்கிறேன். எனக்காக ஒன்று செய்யவேண்டுமானால் அதை மட்டும் செய்யுங்கள்! உணவிலே எளிமை, உடையிலே எளிமை, கல்வியிலே மேன்மை இது போதுமானது. இதுதவிர வேறு எதையும் செய்யாதீர்கள்.

இந்த வீண்பெருமைகளை (டாம்பீகங்களை) எல்லாம் செய்து சீரழிந்து, மனத்துன்பங்களுக்கு ஆளாகி, என் பின்னோர்க்கு (வாரிசுகளுக்கு) இதைப் பழக்கி, அவர்களின் அறிவைக் கெடுத்துத் துன்பங்கட்கு ஆளாக்கி விட்டேன். இப்போது உணர்கிறேன். காலங்கடந்துவிட்டது. இனி ஒரு பயனும் இல்லை.

கடைசியாக ஏதோ வைத்திருக்கிறேன். அதைக்கொண்டு உங்கள் மதிப்பைக் காப்பாற்றிக் கொள்ளுங்கள்! இத்தனையும் கல்விக்குள்ளாக அடங்கியுள்ளது. ஆதலால் காலத்தை வீணாக்காமல் கவனத்தைக் கல்வியிலே செலுத்துங்கள்; இதுதான் என் கடைசி ஆசை!

- உடுமலை நாராயண கவி பாடல்களிலிருந்து  =

  • உண்ணாத உபவாச விரதங்கள் கொள்ளுறார
    ஒருசட்டி உப்பு மாவை உள்ளுக்குத் தள்ளுறார்
    முன்னுக்கும் பின்னுக்கும் முரணாக நடக்கிறார்
  • கறுப்பா வெளுப்பா என்பதை எடுத்துக் காட்டும்  கண்ணாடி சிரிப்பு! - இதுகளைப்பபை நீக்கிக் கவலையைப் போக்கி மூளைக்குத் தரும் சுறுசுறுப்பு!
  • உலகம் வாழ வானம் மழை
    பொழிந்திட வேண்டும் - வானம்
    பொழிந்திட நாம் வனமரங்கள்
    வளர்த்திட வேண்டும்.
  • தேசம் ஞானம் கல்வி ஈசன் பூசையெல்லாம்
    காசுமுன் செல்லாதடி - குதம்பாய்
    காசுமுன் செல்லாதடி.
  • துன்ப வாழ்விலும் இன்பம் காணும்
    விந்தை புரிவது சிரிப்பு! - இதைத் துணையாய்க்
  •  கொள்ளும் மக்களின் முகத்தில்
    துலங்கிடும் தனிச் செழிப்பு!
  • அறிவேதரும் பெருமை சிறுமை!
    அவரவர்பால் அமைந்த திறமை!
    உறவுடன் யாவரும் வேற்றுமை
    நீக்கிட முயல்வது கடமை!
  • ஈசனும் ஈசனார் பூசையும் தேசத்தில்
    காசுக்குப் பின்னாலே - குதம்பாய்
    காசுக்குப் பின்னாலே
  • ஆளையேச்சுத் தின்பா ரெல்லாம்
    வேலை செஞ்சேயாகணும் - இனி
    அதிர்ஷ்டம் யோகம் என்ற சொல்லை - அக
    ராதிவிட்டே எடுக்கணும்.
  • நெனைச்சதை எல்லாம் எழுதி வச்சது
    அந்தக் காலம்; - எதையும்
    நேரில் பார்த்தே நிச்சயிப்பது
    இந்தக் காலம்
  • 10. மழைவரு மென்றே மந்திரம் ஜெபிப்பது
    அந்தக் காலம்; - மழையைப்
    பொழிய வைக்கவே யந்திரம் வந்தது
    இந்தக் காலம்!
  • வரவு செலவு எண்ணிப் பார்க்கணும் - வீட்டு
    வாழ்வின் தேவைக்கண்டு கேக்கணும் - போலி
    மரியாதை மதிப்புக் காக
    அல் டாப்புகளை நீக்கணும்!
  • ஓடி யோடிப் பல வேலைகள் செய்பவன்
    உடம்பது திடமாகும் - செய்யாவிடில்
    உறுப்புகள் முடமாகும் - அல்லாமலும்
    உற்சாகம் குறைவாகும்!
  • பிறவியிலே குலபேதமும் ஏது?
    பெண்களைக் குறை சொல்வது பெருந் தீது!
    அறநெறி யதற்கிது அணுவுந் தகாது;
    அரி ஹரி யென் திருச்செவி கேளாது.
  • மழை கொறஞ்சா விளைவுயராது - நம்ம நாட்டில் ஜாதி
    மதமிருந்தாப் பகமை மாறாது;
    எதையும் சுத்தப் படுத்தணும்!
  • அன்பே கடவுள் என்ப தெதனாலே? - அதில்
    ஆன்ம சக்தி இன்பம் இருப்பதாலே!
    சாத்திரங்கள் பொய்யென்ப தெதனாலே?- ஏமாத்துகிற
    வார்த்தையு மிருப்பதாலே!
  • ஜாதிமதம் இல்லையென்ப தெதனாலே? - மனம்
    சமத்துவம் தானடைந்த தன்மையாலே!
    பொதுவுடைமை கேட்ப தெதனாலே? - தொழில்
    புரிந்தும் புசிப்பற்றுப் போனதாலே!
  • ஒட்டிக்கு ரெட்டியாக வட்டிக்குப் பணம் கொடுத்து
    ஊரார் முதலைக் கொள்ளையடிப்பார் - இவர் அதை
    ஊதுபத்தி சாம்பிராணி சூடம் வாங்கி எரிப்பார்
    உண்ணாமலே செலவழிப்பார்!
    பட்டம் பதவிக் கிறைப்பார் - கோயில்
    கட்டுவதற்கும் செலவழிப்பார் 

Saturday, 20 October 2012

WEEKEND WISDOM




The Seven C's of Success!

Chris Widener  



1. Caring - I believe that to be a true success in this world we must have a bigger vision than simply accomplishing a goal for ourselves or simply lining our own pockets. I believe that successful people have a deep care for others. Yes, they are aggressive, but they are not aggressive to the point that they run roughshod over others.

Question: What is your care factor? Have you placed people in their proper place, as people worthy of dignity, respect, and proper treatment? Or have you begun to treat others as a means to an end for yourself?

2. Character - Becoming a success is more than increasing the digits in your bank account. In fact, I believe ANYONE can increase his or her bank account with a simple plan. Financial development is the easy part. Character development is the hard part, letting each and every experience shape and mold us as we experience them, always moving toward our goal and never allowing negative circumstances to destroy us but make us better people. This is what true success is about!

Question: How is your character? Are you becoming a better person with each passing experience? Are you becoming a rock of wisdom and experience, deepening your foundation of character?

3. Choice - Eisenhower reminded us that our histories are written by choice, not by chance. Every movement you make toward your ultimate success and destiny will be because you choose to move toward it. The actions that you choose, each and every day will add up, over the long-term, to your final destination. The power we have as humans to choose is one of the greatest gifts known to mankind.

Question: Do you choose success with each and every choice you make? Each choice you make either moves you toward your goal or away from it. Which do you choose?

4. Concentration - Often those who fail do so because they lose their concentration. Something else comes along and becomes their new found fancy. They move from whim to whim, tossed to and fro by the strong blowing winds. The successful person however, stands firm, with their eyes transfixed on the goal. One of my favorite posters as a boy was of George Brett of the Kansas City Royals Baseball Team. They picture was taken just as the bat was hitting the ball. Where were George's eyes? Straight down the barrel of the bat, looking at the point where the ball and bat came together. Now that is concentration!

Question: How is your concentration? Do you stick to your goal and focus firmly on it, or do you let your mind and heart wander from whim to whim?

5. Confidence - Success comes to those who have the confidence to try, and more than that, the confidence to win. Confidence is something that you can grow in your mind and heart. Each passing victory that you achieve builds more and more confidence in you to draw from the next time you go to fight another battle on your journey to success. Do what you can to build confidence inside of yourself so you will be able to dip deeply into that well when you need it!

Question: How is your confidence? Do you believe that you can achieve what you conceive? Are you winning victories that you can then draw on later?

6. Consistency - People who become a success realize that to a great degree, success is a formula. At the very least it is sticking to doing the right things for a long enough period of time for them to create their destiny. This is consistency. They consistently do the things that will bring them their success. Tiger Woods hits hundreds of practice balls each and every day. He doesn't do 100 one day, then two days off, then 500 balls, then a day off, then 300 balls, then three days off. No, he knows the power of consistency and has achieved a level of success that that consistency formulated for him.

Question: How is your consistency? Are you consistent? Are you doing the things you need to do each and every day that will bring your goal to you?

7. Courage - Successful people are brave people. They know that even success has its challenges, yet they face them head on and move forward anyway. No mountain is too high, nor river too wide, nor foe too large for the person who will choose to live out their dreams! They are courageous people who continue on even when others have quit. And for that they receive their reward!

Question: How about you? Are you courageous? Are you willing to face the obstacles and move forward in spite of the fear that may try to well up within you? Be courageous and you will succeed!

There they are, the Seven C's of Success. Set sail today!

Caring 

Character
Choice
Concentration                                                                           
Confidence
Consistency
Courage



மூளைக்கு வேலை - 10



1) ஒரே  மாதிரியான  இரண்டு தாள்களையும் ஒரே சமயத்தில் மேலிருந்து கீழே போட்டால், 'அ' தாள் முதலில் தரையில் விழ வேண்டும். வேறு எந்தப் பொருளையும் அவற்றோடு இணைக்கக் கூடாது. எப்படி 'அ' தாளை முதலில் தரை தொட வைப்பீர்கள்?

2) தனது படையில் உள்ள யானைகளைக் கணக்கெடுக்கச் சொன்னார் மன்னர். அதிகாரி வந்து 'சிக்ஸ்டி ஹெட்ஸ்' (60 தலைகள்) என்று சொன்னார். இன்னொரு முறை கணக்கெடுக்கும்படி வேறு ஒரு அதிகாரியை அனுப்பினார் மன்னர். அவர் வந்து 'சிக்ஸ்டி ஃபோர் ஹெட்ஸ்' என்று சொன்னார். அவையோர் புரியாமல் குழம் பினார்கள். ஆனால், மன்னர் 'இரண்டுமே சரி' என்றார். எப்படி?

3) இந்தக் கேள்விக்குப் பதில் சொல்ல உங் களுக்கு அதிகபட்சம் இரண்டு விநாடிகள்தான் நேரம். கமான் க்விக்! டெலிபோன் அல்லது செல்போனின் டயல் பட்டன்களில் உள்ள அனைத்து எண்களையும் பெருக்கினால் (1 ஐ  2 ஐ  3 ஐ ... என்று) வரும் தொகை என்ன? ம்... முதல் நொடி முடிந்துவிட்டது!

4) 1960-ல், நமது பிரதமரின் பெயர் என்ன?

 5) நான் கடவுளை விட வலிமைமையானவன், ஏழைகளிடம் இருப்பவன், பணக்காரர்களிடம் இல்லாதவன். நான் உன்னிடம் வந்தால் நீ இறப்பாய். நான் யார்?

6) மெக்கானிக் அண்ணாமலையின் சகோதரன் தாயுமானவன் இறந்து விட்டார். ஆனால் தாயுமானவனுக்கு சகோதரனே கிடையாது. எவ்வாறு?

விடை ...இந்நேரம் கண்டு பிடிச்சிருப்பீங்களே!  

Friday, 19 October 2012

POSTER OF THIS WEEK


விட்டுப்போன விஷயம்



எந்தன் நெஞ்சில் நீங்காத தென்றல் நினைவுகள் - 17ல் சனியைப் பற்றி கொஞ்சம் சொல்லியிருந்தேன். நெட் சரியாக கிடைக்காததால் அந்த post ஐ அப்படியே முடிக்கும்படி ஆகிவிட்டது. அதில் சொல்ல இருந்ததை இங்கே தந்துள்ளேன்.

  Cosmology  வகுப்பில் வந்த இன்னொரு இண்டரஸ்டிங் கேள்வி -

திருநள்ளார் சனீஸ்வரன் கோவிலுக்கு மேலே வரும் சாட்டிலைட்டுகள் சிறிது  நேரம் செயலிழந்து விடுகின்றன என்கிறார்களே - உண்மையா?
நான் பதிலுக்கு கேட்டேன் - " செயலிழப்பு என்றால் அந்த சாட்டிலைட் அப்படியே நின்று விடுகின்றதா? அல்லது அதில் உள்ள தொலைதொடர்பு சாதனங்கள் வேலை செய்வதில்லையா? "
அன்பரால் தெளிவாக சொல்ல முடியவில்லை.
"விண்வெளியில் சுழலும் எதுவுமே தன சுழற்சி பாதையில் நிற்காமல் சுற்றிக்கொண்டே இருக்கும் " என்று சொல்லி கேள்வி கேட்ட அன்பரிடம் " நீங்கள் சமீபத்தில் திருநள்ளாறு சென்று அங்கிருந்து யாரிடமாவது செல்போனில் பேசியிருக்கிறீர்களா? " என கேட்டேன். அதற்கு இன்னொரு அன்பர் தன்னுடைய சொந்தகாரர் அங்கிருப்பதாகவும் அவரிடம் தான் அடிக்கடி செல்லில் பேசுவதாகவும் சொன்னார்.

 
சாட்டிலைட் சிக்னல் திருநள்ளாருக்கு மேலே கிடைப்பதில்லை என்றால் அந்த ஊரில் யாருமே TV  பார்க்கமுடியாது, செல்லில் பேசமுடியாது என விளக்கினேன், மேலும் இப்போது நாம் கூகிள் மேப் பயன்படுத்துகின்றோம். உலகத்தில் எந்த இடத்தையும் சாட்டிலைட் உதவியுடன் துல்லியமாகப் பார்க்க முடியும். திருநள்ளார் சனீஸ்வரன் கோவிலும் கூகிள் மேப்பில்  நன்றாகவே தெரிகின்றது. சாட்டிலைட் திருநள்ளாருக்கு மேலே வேலை செய்வதில்லை என்றால் கூகிள் மேப்பில் கோவில் தெரிவது எப்படி? எனவே நீங்கள் கேட்ட கேள்விக்கு பதில் -

உண்மை இல்லை!

Thursday, 18 October 2012

திருக்குறள் ஆய்வு


திருக்குறள்  அறத்துப்பால், பொருட்பால், காமத்துப்பால் என்ற மூன்று பால்களை உடையது.

அறத்துப்பாலில் 38 அதிகாரங்கள், பொருட்பாலில் 70 அதிகாரங்கள், காமத்துப்பாலில் 25 அதிகாரங்கள் இடம் பெற்றுள்ளன.

திருக்குறள் தமிழ்ச் செய்யுள்களில் முதல் பாவாகிய வெண்பாவில் முதல் வகையாகிய குறட்பாக்களால் ஆனது.

திருக்குறளில் அதிகாரத்திற்குப் பத்துப்பாடல்களாக் 1330 குறட்பாக்கள் உள்ளன.

திருக்குறளில் முப்பால்களிலும் 120-க்கும் மேற்பட்ட உவமைகள் எடுத்துக்காட்டப்பட்டுள்ளன.


திருக்குறளில் அனிச்ச மலர் 4 முறையும், யானை 8 முறையும், பாம்பு 3 முறையும் சுட்டப்பட்டுள்ளன.

திருக்குறளில் ஒரே பெயரில் அமைந்த 2 அதிகாரங்கள் : குறிப்பறிதல - (பொருட்பால் - அதிகாரம் 71) குறிப்பறிதல் - (காமத்துப்பால் - அதிகாரம் 110)

'"தொடிற்கடின் அல்லது காமநோய் போல விடிற்கடின் ஆற்றுமோ தீ" (1159) என்ற குறள் ஒரே எழுத்தில் முடிந்துள்ளது.

என்ற இந்தக் கொம்பு எழுத்துக்கள் இல்லாமல் 17 குறள்கள் உள்ளன.

46 குறள்களில் உயிரினங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.

அன்புடைமை, அடக்கமுடைமை, ஒழுக்கமுடைமை, பொறையுடைமை, அருளுடைமை, அறிவுடைமை, ஊக்கமுடைமை, ஆள்வினையுடைமை, பண்புடைமை, நாணுடைமை என வள்ளுவர் கூறிய உடைமைகள் 10.

"ஒருமையுள் ஆமைபோ லைந்தடக்க லாற்றின்
எழுமையும் ஏமாப் புடைத்து" - என்ற குறளில் 1.5.7 என்ற பகா எண்கள் குறிபிடப்பட்டுள்ளன.

அன்னம்,கூகை (ஆந்தை), கொக்கு, காக்கை, புள்(பறவை), மயில், ஆமை, கயல் மீன். மீன் (விண்மீன்), முதலை, நத்தம்(சங்கு), பாம்பு, நாகம், என்பிழாது(புழு) ஆகியன இடம் பெற்றுள்ளன.

பாலோடு தேன்கலந் த்ற்றே பணிமொழி
வாலெயி றூறிய நீர் (112) - என்ற குறளில் பால், தேன், நீர் என்ற மூன்று

 நீர் மங்கள் இடம் பெற்றுள்ளன.

"பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப்
பற்றுக பற்று விடற்கு" - என்ற குறளில் ஒரே சொல் 6முறை இடம் பெற்றுள்ளது.

ஒரே சொல் 5 முறை 5 குறட்பாக்களிலும், ஒரே 4முறை 22 குறட்பாக்களிலும், ஒறே சொல் 3 முறை 27 குறட்பாக்களிலும் இடம் பெற்றுள்ளன.

"துணை எழுத்தே இல்லாத குறள் - 


"கற்க கசடற கற்பவை கற்றபின்
நிற்க அதற்குத் தக". (391)

திருக்குறளில் தமிழ் என்ற சொல் இடம் பெறவில்லை.

முதன் முதலில் 1812 ஆம் ஆண்டு ஓலைச்சுவடியிலிருந்து அச்சிடப்பட்டதே திருக்குறளின் முதற்பதிப்பாகும்.

திருக்குறளில் ஒரு முறை மட்டுமே இடம் பெற்றுள்ள எழுத்துகள் '"வீ, ங".

1330 குறட்பாக்களில் எந்த இடத்திலும் கடவுள் என்ற சொல் இடம் பெறவில்லை.

திருக்குறளில் 50 பிறமொழிச் சொற்கள் இடம் பெற்றுள்ளன.

ஆன்மீக ஆனா, ஆவன்னா

ஆன்மீக  ஆனா, ஆவன்னா தொடர்
விரைவில் ஆரம்பமாகின்றது!





Wednesday, 17 October 2012

MIDWEEK INSPIRATION


நல்ல பழக்கம்

ஒரு சமயம் நபிகள் நாயகம் மேடையில் பேசிக் கொண்டு இருந்தார். அப்பொழுது அந்தக் கூட்டத்தில் இருந்த குடிகாரன் ஒருவன் எழுந்து நபிகள் நாயகத்திடம் எனக்கு இஸ்லாம் மதத்திலே இடம் உண்டா? என்று கேட்டான். உடனே பக்கத்தில் இருந்த ஒருவன், “குடிகாரனுக்கு இஸ்லாம் மதத்திலே இடம் கிடையாது என்றார். உடனே நபிகள் நாயகம் அப்படிக் கூறியவரைப் பார்த்து கையமற்த்திவிட்டு, உமக்கு இஸ்லாம் மதத்தில் இடம் உண்டு” என்றார். அப்படி என்றால், நான் அதிலே சேர்ந்துக் கொள்ளலாமா என்றான். “இறைவனை தொழுகும் பொழுது மட்டும் குடிக்கக் கூடாது” என்றார். “சரி என்று ஒத்துக் கொண்டான் அந்தக் குடிகாரன். கலிமா சொல்லப்பட்டது. முறைப்படி அவன் இஸ்லாம் மதத்திலே சேர்ந்தான். தொழுகைக்குப் போகும்போது மட்டும் குடிக்க முடியாத நிலைமை அவனுக்கு.
சிறிது நாட்கள் ஆகியது. நபிகள் அவனைப் பார்த்து, “காலையில் மட்டும் தொழுதால் போதாது! மாலையிலும் தொழ வேண்டும்” என்றார். அவன் இரண்டு வேலையும் தொழ ஆரம்பித்தான். இரண்டு நேரமும் குடிக்காமல் இருந்தான். அப்புறம், சிறது நாட்கள் கழித்து பகலிலும் ஒரு முறை தொழ வேண்டும் பிறகு அந்திப் பொழுதிலும் ஒரு முறை தொழ வேண்டும் என்றார் நபிகள். அவன் படிப்படியாக அந்தப் பழக்கத்திற்கு ஆளாகிவிட்டான்.

ஐந்து வேலையும் தொழ ஆரம்பித்துவிட்டான். ஐந்து வேலையும் அவனால் குடிக்க முடியாமல் போயிற்று! அப்புறம் தொழுகைக்குப் போய்க் கொண்டு இருந்தபொழுது. நபிகள் அவரைப் பார்த்து, “இறைவனைத் தொழப் போகும் பொழுது மட்டும் குடிக்காமல் இருந்து பயனில்லை, தொழுதுவிட்டு வந்தப்பிறகும் குடிக்காமல் இருக்க வேண்டும்” என்றார். அவன் அதற்கும் “சரி” என்று ஒத்துக் கொண்டான். இறுதியில் அந்த குடிகாரருக்கு குடிப்பதற்கே நேரமில்லாமல் ஆகிவிட்டது.


எல்லாமதமும் இறைவனோடு அடிக்கடி தொடர்பு வைத்துக் கொள்ள வேண்டும் என்று சொல்வது எதற்காக?

நல்ல பழக்க வழக்கங்கள் வர வேண்டும் என்பதற்காகத்தான்.

எந்தன் நெஞ்சில் நீங்காத தென்றல் நினைவுகள் - 18


மயூரநாதர் கோவில்



1788ம் ஆண்டு   ஆங்கிலேயர் ஒருவரால் வரையப்பட்ட  லாகடம் (துலா கட்டம்) 
மாயூரம் துலாகட்டத்தில் துலா ஸ்நானம் 

போன ஞாயித்துக்கிழமை மாயூரம் போனப்ப வழியில தஞ்சாவூர்கிட்ட  காவிரி  ஆறு ஓடுதா இல்ல நிக்குதான்னு புரியல...தண்ணி இருந்ததே தவிர ஓட்டம் தெரியல..மாயூரம் கிட்ட  வரவர வழியில இருந்த கிளையாறுகள், வாய்க்கால்கள் எல்லாமே காய்ந்து போய் கிடந்தன. இந்த சீசன்ல காவிரி கரை புரண்டு ஓடும். 'வான் பொய்ப்பினும் தான் பொய்க்காத காவிரி'ன்னு பாடிய புலவர் இன்றிருந்தால் எப்படி புலம்பியிருப்பாரோ?

இன்னிக்கு ஐப்பசி 1 ம் தேதி. இன்றிலிருந்து இந்த ஐப்பசி ( துலா மாசம் )  முடிய மாயூரம்  காவிரியில் குளிப்பது ரொம்ப  புண்ணியம் அதுவும் கடைசி நாள் 'கடை முழுக்கு'ன்னு பேரு. அன்னிக்கு கங்கை உட்பட 63  கோடி தீர்த்தங்கள் தங்கள் பாவங்களைப் போக்க மாயூர காவிரிக்கு வருகின்றன.ஆயிரமானாலும் மாயூரமாகுமா என்பது பழமொழி. ஆயிரம் வருஷம் கங்கையில் தினம் குளித்தால் என்ன புண்ணியம் கிடைக்குமோ அந்த புண்ணியம் ஐப்பசி மாதத்தில் மாயவரம் காவிரியில் ஒரு நாள் குளித்தாலே கிடைத்துவிடும் என்பது ஐதீகம்.அன்னிக்கு காவிரியில சாமிக்கு தீர்த்தவாரி நடக்கும்போது ஆறு முழுக்க தலைகளாத் தெரியும். நான் ஏழெட்டு தடைவையாவது காவிரியில கடைமுழுக்கு குளியல்  போட்டுருக்கேன்.

சின்ன வயசில ஐப்பசி ஒண்ணாம் தேதின்னிக்கி குழந்தைகளுக்கு, சின்ன பசங்களுக்கு  முழுக்கு காசுன்னு கொடுப்பாங்க.எனக்கு தாத்தா, பாட்டி, மாமா யாருமே இல்லாததால முழுக்கு காசு கிடைக்காது! அம்மா எனக்கு ஒரு ரூபா கொடுப்பாங்க. லாகடத்துல ( துலாகட்டங்கிற பேரு குளிர்ல நடுங்கிகிட்டே சொல்லும்போது   லாகடம்ன்னு ஆயிடுச்சு ) நிறைய திருவிழா கடைகள் வந்திருக்கும். முழுக்கு காசை வச்சுகிட்டு அந்த கடைகள்ல தேவையானதை வாங்கிப்போம்.

ஐப்பசி முழுக்க நகராட்சி பூங்காவுல பொருட்காட்சி  நடக்கும். தினமும் ஏதாவது புகழ்பெற்ற நாடகம் நடக்கும். எம்.ஜி.ஆர்., சிவாஜி போன்ற நடிகர்கள்லாம் நாடகம் நடத்தியிருக்காங்க. நான் TKS  சகோதரர்கள் நடத்திய ராஜராஜசோழன், ஔவையார், கப்பலோட்டிய தமிழன் போன்ற எல்லா நாடகங்களையும் பாத்திருக்கேன். M R ராதா டிராமாவுல ஒரு சீன்ல துப்பாக்கியில சுடுவாரு..அப்ப  லைட்  எல்லாம் ஆப்  ஆயிடும். அந்த சீன்ல நான் ரொம்ப பயந்துபோனது இன்னும் ஞாபகம் இருக்கு.

அப்பா முனிசிபல் மேனேஜரா இருந்ததால தினமும் பொருட்காட்சிக்கு போய் நாடக மேடையில ஒரு ஓரத்துல உட்கார்ந்து நாடகம் பார்ப்பேன்.ஐப்பசி மாசம் பொறந்தவுடனே மழையும் வந்துடும். " அடாது மழை பெய்தாலும் விடாது நாடகம் நடக்கும்"ன்னு ஒலிபரப்புவாங்க. மழை கடுமையா இருக்கும். சிலதடவைகள்  புயல் அடிச்சிருக்கு. பல நாடகங்கள் கேன்சலா ஆயிடும். பொருட்காட்சி நடத்துறதால நகராட்சிக்கு ரொம்ப நஷ்டம். அதனால  அப்புறம் பொருட்காட்சி நடக்கவே இல்லை.

முழுக்கு சமயத்துல தினமும் பஞ்சமூர்த்திகள் தீர்த்தவாரிக்காக காவிரிக்கு வரும்போது மிக, மிக அழகாக அலங்கரிக்கப்பட்டிருப்பர்கள்.
இப்போது அந்தமாதிரி பூ அலங்கார அழகைப் பார்க்கமுடிவதில்லை!
யாராவது போட்டோக்கள் வச்சுருக்காங்களான்னு  தெரியல!

  இந்த வருஷம் காவிரியில தண்ணியே இல்ல ..கூவம் மாதிரி ஆயிடுச்சே...துலா ஸ்நானம் பண்ண மக்கள் வருவாங்களா..... ...இப்படியெல்லாம் யோசிச்சிகிட்டே  திருச்சி திரும்பினேன்.  

Tuesday, 16 October 2012

சிரிப்பு ஞானம் -14 ( பவர் கட் ஸ்பெஷல் )

Candlelight Haircut






ஆசிரியர்: ஏன் வீட்டுப்பாடம் எழுதவில்லை?

மாணவி:கரண்ட் இல்ல !


ஆசிரியர்:மெழுகுவர்த்தி வைத்து எழுத வேண்டியதுதானே?


மாணவி:தீப்பெட்டி சாமி ரூம்ல இருந்தது! எடுக்க முடியல!


ஆசிரியர் :ஏன்?


மாணவி: குளிக்கல! அதனால சாமி ரூமுக்குள்ள போக முடியல!


ஆசிரியர் :ஏன் குளிக்கவில்லை?


மாணவி : மோட்டார்  ஓடல ...தண்ணி  வரல ...

ஆசிரியர் : ஏன்  மோட்டார் ஓடல .?

மாணவி:  அதான் கரண்ட் இல்லேன்னு மொதல்லயே சொன்னனே!?


மக்கு : ஸ்பென்சர் பிளாசா போய்ட்டு வசமா மாட்டிக்கிட்டேன்.

ஜக்கு : ஏன்?

மக்கு : கரண்ட் கட் ஆயிடுச்சி "எஸ்கலேட்டர்லயே" 4 மணிநேரம் மாட்டிக்கிட்டேன். 










சூர்யா: நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி ....
அடுத்த கேள்வி ....
தமிழ்நாட்டு பவர்கட் எப்போது தீரும்? 
உங்கள் விடை .........
A. E B க்கு தெரியாது                              B.தமிழக அரசுக்கு தெரியாது
C. மத்திய அரசுக்கு தெரியாது         D.யாருக்குமே தெரியாது  



கணவன் : என் மனைவி நிறைய டி.வி பார்க்கிறா டாக்டர்.

டாக்டர் : உங்களுக்கு நல்லதுதானே? நிம்மதியா இருங்க !

கணவன் : நீங்க வேற டாக்டர். பவர் கட் ஆனாலும் டார்ச் அடிச்சு பார்க்கிறா டாக்டர்.
Current விளையாட்டு  

இருட்டுல நீ வாழ பழகு
வெளிச்சமெல்லாம் எதுக்குடா...
கருவறையில் இருந்தப்போ
கரண்ட் இல்லையே உனக்குடா...

பெட்ரோமாக்ஸ் லைட்ட  கொளுத்து
பங்சன்  மூடு கிடைக்குண்டா...
மெழுகுவர்த்திய ஏத்தி வையி
பர்த்டே போல இருக்குண்டா...

காலேஜுக்கு கட் அடிச்சுட்டு
சந்தோசமா சிரிக்கிற
கரண்ட் மட்டும் கட் அடிச்சா
ஏன்டா கண்டபடி குதிக்கிற!

பாக்டரிய இழுத்து மூடு
டெய்லி உனக்கு லீவுடா...
போர் அடிச்சா திறந்சிருக்கு
டாஸ்மாக்கு ஓடுடா...

பேனை தூக்கி போட்டுட்டு
பேரிச்சம் பழம் வாங்குடா...
வொய்ப் சீரியல் பாக்காட்டி
டைம்முக்கு கிடைக்கும் சோறுடா...

இயற்கையோட இணைந்து வாழ்ந்தா
மின்சாரம் மிச்சமடா...
கரண்ட் பில்லு கட்ட வேண்டாம்
மவனே உனக்கு உடம்பு பூரா மச்சம்டா...

ஆதிவாசி மனுசனோட
வாழ்க்கை இப்போ புரியுதா...
கல்லறைக்கு போன பிறகும்
கரண்ட் இல்ல தெரியுதா... 




நான் மின்சாரத்துறையில வேலை செய்யுறேன்”
“அப்ப வேலையே இல்லைன்னு சொல்லுங்க”





World Food Day, 16 October 2012


Agricultural cooperatives – key to feeding the world

Agricultural cooperatives are the focus of World Food Day 2012.

The official World Food Day theme, announced each spring by the Food and Agriculture Organization of the United Nations (FAO), gives focus to World Food Day observances and raises awareness and understanding of approaches to ending hunger.

“Agricultural cooperatives – key to feeding the world” is the formal wording of the 2012 theme. It has been chosen to highlight the role of cooperatives in improving food security and contributing to the eradication of hunger.

Interest in cooperatives and rural organizations is also reflected in the decision of the UN General Assembly to designate 2012 “International Year of Cooperatives.”


2009 ம்   ஆண்டு ஐ.நா.வெளியிட்ட  செய்தி -


உலக ஏழை மக்களின் பட்டினியை போக்க ஐ.நா. சபையின் உலக உணவுத் திட்டம் உதவி வருகிறது.

இந்த திட்டத்தின் மூலம் ஆப்பிரிக்க கண்டத்தில் உள்ள ஏழை மக்களுக்கு உணவு வழங்கப்பட்டு வருகிறது. இந்த திட்டத்துக்கு நடப்பாண்டு 33 ஆயிரத்து 500 கோடி ரூபாய் நிதிக்கு பட்ஜெட் போடப்பட்டது. ஆனால் இந்த திட்டத்துக்கு 13 ஆயிரம் கோடி ரூபாய் மட்டுமே கிடைத்து உள்ளது. பொருளாதார பின்னடைவு காரணமாக எதிர்பார்க்கப்பட்ட நிதி உதவி கிடைக்கவில்லை. இதனால் இந்த ஆண்டு 100 கோடி பேர் பட்டினி கிடக்கும் நிலை ஏற்பட்டு இருப்பதாக ஐ.நா. சபை வேதனை அடைந்து உள்ளது.

இது தொடர்பாக ஐ.நா. உலக உணவு திட்ட அலுவலகம் கூறியிருப்பதாவது:-

நாள் ஒன்றுக்கு ரூ.50 ரூபாய்க்கும் குறைவாக வருமானம் உள்ளவர்கள் அதிகமாக இருப்பதால் மக்கள் வறுமையின் பிடியில் சிக்கி தவிக்கிறார்கள். பொருளாதார பின்னடைவு காரணமாக நிலைமை மோசமாகி உள்ள நிலையில் அத்தியாவசிய பொருட்களின் விலையும் உயர்ந்து இருப்பது மக்களை மேலும் அதிக அளவில் பாதித்து உள்ளது. இதற்கு இந்தியாவும், பாகிஸ்தானும் கூட விதிவிலக்கு அல்ல. வறுமையின் பிடியில் சிக்கித் தவிக்கும் மக்கள் அதிகம் உள்ள நாடுகளில் இந்தியா 25 இடத்தில் உள்ளது. பாகிஸ்தான் இந்த பட்டியிலில் 11-வது இடத்தில் உள்ளது. இவ்வாறு ஐ.நா. சபையின் உலக உணவு திட்ட அலுவலகம் அறிவித்து உள்ளது.


இறைவன் உலகத்தைப் படைத்தானா?
ஏழ்மையை அவன்தான் படைத்தானா?
ஏழையைப் படைத்தவன் இறைவன் என்றால்
இறைவன் என்பவன் எதற்காக?


பொன்னகை அணிந்த மாளிகைகள்
புன்னகை மறந்த மண்குடிசை
பசி வர அங்கே மாத்திரைகள்
பட்டினியால் இங்கு யாத்திரைகள்    

      
இருவேறுலகம் இதுவென்றால்
இறைவன் என்பவன் எதற்காக?


உயரே பறக்கும் காற்றாடி
உதவும் ஏழை நூல்போலே
பட்டம் போலவர் பளபளப்பார்
நூல் போலே இவர் இளைத்திருப்பார்


இரு வேறியக்கம் இதுவென்றால்
இறைவன் என்பவன் எதற்காக?

Monday, 15 October 2012

கைலாஷ்

என் சின்ன அண்ணன் திரு.நடராஜன் அண்ணி கலைவாணி இருவரும் அநேகமாக இந்தியாவில் உள்ள எல்லா ஸ்தலங்களுக்கும் சென்று வந்துள்ளார்கள். நிறைவாக சமீபத்தில் கைலாஷ் யாத்திரையையும் முடித்து திரும்பியுள்ளார்கள். 

நேற்றுதான் அவர்களை மாயூரம் சென்று பார்த்துவிட்டு வந்தேன்.

பொன்னிறப் பொலிவில் கைலாஷ்  

முக்கண் முக தரிசனம்  
கைலாஷ் செல்லும் வழியில் அண்ணன்-அண்ணி 

கைலாஷ் தரிசனம்  27-8-2012 

நீங்க எப்ப கைலாஷ் போகப் போறீங்கன்னு கேட்டப்ப 
"நாங்க கைலாஷ்புரத்துலேயே ரொம்பநாளா வாழ்ந்துகிட்டு இருக்கோம்"ன்னு சொன்னேன்! 

Sunday, 14 October 2012

இறைவன் சிரிப்பு & அழுகை


ஒரு குழந்தை எப்போது சிரிக்கும், எப்போது அழும்? என்றே கூற முடியாத போது, கடவுள் சிரிப்பாரா, அழுவாரா என்பதை எப்படிக் கூறுவது? இறைவன் பரபிரம்மசொரூபியாக இருக்கும்போது, குணாதீதனாக- ஆனந்த சொரூபியாகத் திகழ்கிறார். அதே இறைவன் லீலையில், மனிதனாக அவதரிக்கும்போது அவருக்குச் சிரிப்பும் அழுகையும் சகஜமே. பரபிரம்ம ஸ்வரூபி ஸ்ரீராமர், மனிதனாக வந்து சீதையைக் காட்டில் பிரிந்தபோது துன்பத்தில் அழுதார். மாய வலையில் சிக்கி பரபிரம்மமே அழுதது... ஆம், ஆண்டவன் சிரிக்கிறார்; அழுகிறார்- அதுவும் மனிதர்களைப் பார்த்து! மேலும் இறைவனை மனிதன் சிரிக்கவும் வைக்கிறான், அழவும் வைக்கிறான். இறைவனின் சிரிப்பு இரு விதம். 1. பரிகாசச் சிரிப்பு, 2. பிரசன்ன சிரிப்பு.

சிவபெருமானின் கண்ணீரும் சிரிப்பும்: தாரகாசுரனின் மூன்று மகன்களும் சிவபக்தர்களாக இருந்தார்கள். ஆனால் காலப்போக்கில் அகங்காரம் பிடித்து, தாங்களே கடவுள் என்று எண்ணித் தாறுமாறாக வாழ ஆரம்பித்தனர். எவ்வளவு அருமையான பக்தர்கள் இப்படி ஆகிவிட்டார்களே என்று வருந்திக் கண்ணீர் வடித்தார் சிவபெருமான். சிவனின் - ருத்திரனின் அக்ஷத்திலிருந்து (கண்கள்) திவலையாகக் கண்ணீர் வடிந்தது. அதுவே ருத்ராக்ஷமானது! அந்த மூவரும் கட்டுக்கடங்காமல் போகவே, தேவர்கள் அனைவரும் சேர்ந்து அந்த அசுரர்களுடன் போர் புரிய ஒரு தேரை உருவாக்கினார்கள். ஒவ்வொருவரும் போருக்கான ஆயுதமாகவும், தேரின் பாகங்களாகவும் உருமாறினார்கள். சிவனின் பராக்கிரமத்தை மறந்து தேவர்கள் ரதத்தைச் செலுத்தும்படி அவரிடம் வேண்டினார்கள். ஈசன் ரதத்தில் ஒரு காலை வைத்தார். உடனே ரதம் நொறுங்கியது. இவ்வளவு சக்திமிக்க சிவபெருமானைப் புரிந்து கொள்ளவில்லையே என தேவர்களுக்கு ஆச்சரியம். இதைக் கண்டு இறைவன் சிரித்தார்; சிரித்தபடி அசுரர்களின் மூன்று பலமான கோட்டைகளைப் பார்க்க, மூன்றும் அக்கணமே சாம்பலாயின. அழிந்தவை, அசுரரின் அகங்காரக் கோட்டை மட்டுமல்ல, தேவர்களின் அறியாமைக் கோட்டையும்தான்! இப்படி சிவன் அழுதார், ருத்திராக்ஷத்தைப் படைத்தார்; சிவன் சிரித்தார், திரிபுரத்தை எரித்தார்.
கண்ணீருடன் பெருமாள்: திருக்கோட்டியூர் நம்பி என்ற வைஷ்ணவ அடியார் எழுதிய வார்த்தா மாலை என்ற கிரந்தத்தில் வரும் ஒரு பாடல் பெரும் உண்மைகளைக் கூறும். கடவுள் மனிதனைப் படைத்து ஏதோ ஒரு மகத்தான காரியத்தைப் புரிய உலகிற்கு அனுப்புகிறார். ஆனால் அவன் இங்கு வந்ததும் எந்நேரமும் எதையாவது பிடித்துக் கொண்டுச் சுற்றித் திரிகிறான். எதற்காக? அனைத்தும் வயிற்றுக்காகத்தான். உணவு உடலுக்குப் போகிறது. அவ்வுடல் ஆண்டு அனுபவித்த பின் இறுதியில் மண்ணிற்குப் போகிறது. இறைவன் அளித்த உயிரோ கர்மத்தோடு போகிறது. நல்லவை செய்திருந்தால் நல்லவிதமாகப் போகும். தீயதைச் செய்திருந்தால் தீயதாகப் போகும். இப்படி, தான் படைத்த மனிதன் மண்ணோடும் கர்மத்தோடும் தன் வாழ்க்கையை முடித்துக் கொள்வதைப் பார்த்து, இறைவன் உயர்ந்த காரியம் செய்ய உலகிற்கு அனுப்பி வைத்தேன்; இவன் இப்படி ஆகிவிட்டானே! என்று கண்ணீர் வடிப்பாராம்.

இதனை திருக்கோட்டியூர் நம்பி கூறுகிறார்:

விருத்தி சோறோடே போகும்
சோறு உடம்போடே போகும்
உடம்பு மண்ணோடே போகும்
உயிர் கர்மத்தோடே போகும்

ஈஸ்வரன் கண்ண நீரோட கை வாங்கும்.

உலகியலில் உழன்று லவுகிக நினைவுகளிலேயே ஊறிக் கிடப்பவர்களைப் பார்த்து தெய்வம் சிரிக்கிறது - பரிகாசமாக!



                                                                                                -நன்றி - தினமலர்  




கடவுள் எப்போ டென்ஷன் ஆவாரு..?

கல்யாணம் ஆகாத கன்னி பொண்ணு கர்ப்பம் ஆகும்போது, அவ அம்மா 'அட கடவுளே, இப்படி பண்ணிட்டியே' என்று கேட்கும் போது...

பாவம் ஒண்ணுமே செய்யாத கடவுள் என்ன பண்ணுவார்..டென்ஷன் தான் ஆவாரு.