Monday 8 October 2012

இன்று (கேட்டு) ரசித்த பாடல் வரிகள் - 10


நான்கு நாட்களாக எனக்கு திங்கள் தோஷம்!

(செவ்வாய் தோஷம் இருக்கும்போது திங்கள் தோஷம் இருக்கக்கூடாதா?)

திங்கள் என்றால் நிலா; நிலா என்றால் குளிர்ச்சி -
ஜலதோஷத்துக்கு நான் வச்ச பெயர் திங்கள் தோஷம்.
ரெண்டு நாள் பாட்டு கேட்டுக்கிட்டே   rest  எடுத்தேன்!

இது சத்தியம் பாட்டு மனசுக்குள்ள ஆழமா போச்சு...
ஏற்கனேவே பலமுறை கேட்டிருந்தாலும் இந்த தடவை 
பாட்டின் கடைசி பாரா  மீண்டும்,மீண்டும் மனசுக்குள் ஒடிக்கொண்டே இருக்கின்றது.

எப்படி இப்படியெல்லாம் கண்ணதாசனால்  எழுத முடிஞ்சது?!






 சத்தியம் இது சத்தியம் சத்தியம் இது சத்தியம்


எல்லாம் வல்ல இறைவனின் ஆணை
சொல்லப் போவது யாவதும் உண்மை
சத்தியம் இது சத்தியம்


எல்லாம் வல்ல இறைவனின் ஆணை
சொல்லப் போவது யாவதும் உண்மை
சத்தியம் இது சத்தியம்


பத்துத் திங்கள் சிறையிலிருந்தேன் பள்ளிக்கூட அறையிலிருந்தேன்
பத்துத் திங்கள் சிறையிலிருந்தேன் பள்ளிக்கூட அறையிலிருந்தேன்
எத்தனையோ சிறைகளை நான் பார்த்து விட்டேன்

 போடா போ போடா போ

சத்தியம் இது சத்தியம்
எல்லாம் வல்ல இறைவனின் ஆணை
சொல்லப் போவது யாவதும் உண்மை
சத்தியம் இது சத்தியம்


தலைக்கு மேலே வெள்ளம் போனால் சாணென்ன முழமென்ன?
தன்னை நம்பும் தைரியம் இருந்தால் நாளென்ன பொழுதென்ன?
தலைக்கு மேலே வெள்ளம் போனால் சாணென்ன முழமென்ன?
தன்னை நம்பும் தைரியம் இருந்தால் நாளென்ன பொழுதென்ன?
விலைக்கு மேலே விலை வைத்தாலும் மனிதன் விலை என்ன?
உயிர் விட்டு விட்டால் உடல் சுட்டுவிட்டால் - அதில்
அடுத்த கதை என்ன அதில் அடுத்த கதை என்ன? என்ன?
அதில் அடுத்த கதை என்ன?


எல்லாம் வல்ல இறைவனின் ஆணை
சொல்லப் போவது யாவதும் உண்மை
சத்தியம் இது சத்தியம்


பஞ்சைப் போட்டு நெருப்பை மறைப்பவன் பைத்தியக் காரனடா
பாவம் தீர்க்கப் பணத்தை இறைப்பவன் பச்சை மடையனடா
நெஞ்சுக்கு நீதியை ஒளித்தே வாழ்பவன் நிச்சயம் மிருகமடா - நல்ல
நேர்மையிலும் தன் வேர்வையிலும் தினம் வாழ்பவன் தெய்வமடா .....
தினம் வாழ்பவன் தெய்வமடா


எல்லாம் வல்ல இறைவனின் ஆணை
சொல்லப் போவது யாவதும் உண்மை
சத்தியம் இது சத்தியம் சத்தியம் இது சத்தியம் 


PS -


திங்கள் தோஷ நிவர்த்தி, சாந்தி மற்றும் பரிகாரங்களுக்கு
பட்டங்கள் பலகோடி பெற்ற ஜோதிட சாம்ராட் ஜலீல் பிப்ரனை
தொடர்பு கொள்ளலாம்!


No comments:

Post a Comment