Showing posts with label Song. Show all posts
Showing posts with label Song. Show all posts

Wednesday, 17 December 2025

சின்னப் பயலே சின்னப்பயலே - Song lyrics


 “சின்னப் பயலே சின்னப்பயலே

சேதி கேளடா நான்

சொல்லப்போகும் வார்த்தையை நல்லா எண்ணிப்பாரடா

ஆளும் வளரணும் அறிவும் வளரணும்

அதுதாண்டா வளர்ச்சி உன்னை

ஆசையோடு ஈன்றவளுக்கு அதுவே நீதரும் மகிழ்ச்சி

நாளும் ஒவ்வொரு பாடம் கூறும் காலம் தரும் பயிற்சி உன்

நரம்போடுதான் பின்னி வளரணும் தன்மான உணர்ச்சி

மனிதனாக வாழ்ந்திட வேணும் மனதில் வையடா

வளர்ந்து வரும் உலகத்துக்கே நீ வலது கையடா

தனி உடைமை கொடுமைகள் தீர தொண்டு செய்யடா

தானா எல்லாம் மாறும் என்பது பழைய பொய்யடா

வேப்பமர உச்சியில் நின்று பேய் ஒன்று ஆடுதுன்னு

விளையாடப் போகும்போது சொல்லி வைப்பாங்க தன்

வீரத்தை முளையிலேயே கிள்ளி வைப்பாங்க வேலையற்ற வீரர்களின் மூளையற்ற வார்த்கைகளை

வேடிக்கையாகக் கூட நம்பிவிடாதே

வீட்டுக்குள்ளே பயந்து கிடந்து வெம்பிவிடாதே”

Monday, 30 October 2023

இன்று (கேட்டு) ரசித்த பாடல் வரிகள்

 

சென்று வா மகனே சென்று வா 

அறிவை வென்று வா மகனே வென்று வா

கன்று தாயை விட்டு சென்ற பின்னும்

கன்று தாயை விட்டு சென்ற பின்னும்

அது நின்ற பூமி தன்னை மறப்பதில்லை

சென்று வா மகனே சென்று வா

அறிவை வென்று வா மகனே வென்று வா

அறிவுலகம் உன்னை அழைக்கின்றது
ஏதும் அறியாதவன் என்றே நினைக்கின்றது
அரண்மனை வாசல் திறக்கின்றது
அரண்மனை வாசல் திறக்கின்றது
அங்கே ஆணவம் புன்னகை புரிகின்றது

சென்று வா மகனே சென்று வா
அறிவை வென்று வா மகனே வென்று வா

உண்மையைச் சொல்வதற்கு படிப்பெதற்கு
எல்லாம் உணர்ந்தவர் போல் நடிக்கும் நடிப்பெதற்கு
கண் கண்ட காட்சிகட்கு விளக்கெதற்கு
நெஞ்சில் கள்ளமில்லாதவர்க்கு பயமெதற்கு

நீ இருக்கும் இடத்தில் நானிருப்பேன்
உன் நிழலிலும் பொருளாகக் குடியிருப்பேன்
தாயிருக்கும் வரையில் கலக்கமில்லை
இந்தத் தாயிருக்கும் வரையில் கலக்கமில்லை
எந்தச் சபையிலும் உனக்கு நடுக்கமில்லை

சென்று வா மகனே சென்று வா
அறிவை வென்று வா மகனே வென்று வா

Music
K. V. Mahadevan
Singers
K. B. Sundarambal
Lyrics
Kannadasan

Wednesday, 9 September 2015

இன்று (கேட்டு) ரசித்த பாடல் வரிகள் - 23

வெற்றி வேண்டுமா? போட்டுப் பாரடா எதிர்நீச்சல்
சர்தாம் போடா தலைவிதி என்பது வெறுங்கூச்சல்
எண்ணித் துணிந்தால் இங்கு என்ன நடக்காதது
கொஞ்சம் முயன்றால் இங்கு எது கிடைக்காதது?

வெற்றி வேண்டுமா? போட்டுப் பாரடா எதிர்நீச்சல் 

பிள்ளையைப் பெறுகிற அம்மாவுக்கு பத்து மாதமும் எதிர்நீச்சால்
பொறக்குற கொழந்த நடக்குற வரையில் தரையில் போடுவது எதிர்நீச்சல்
பள்ளிக்குப் பள்ளி இடத்துக்கு அலையும் அப்பனுக்கது தான் எதிர்நீச்சல்
பிள்ளைக்கு எப்படி இடம் கிடைச்சாலும் பரிட்சை வந்தா எதிர்நீச்சல் எதிர்நீச்சல் 

வெற்றி வேண்டுமா? போட்டுப் பாரடா எதிர்நீச்சல் 

கடற்கரையோரம் நடக்குற காதல் கல்யாணம் முடிப்பது எதிர்நீச்சல்
கணக்குக்கு மேலே பிள்ளையைப் பெத்து காலங்கழிப்பதும் எதிர்நீச்சல்
கண்மூடி வழக்கம் மண்மூடிப் போகக் கருத்தைச் சொல்லுவது எதிர்நீச்சல்
வீட்டுக்கு வீடு ஓட்டுக்கள் வாங்கி பதவிக்கு வருவது எதிர்நீச்சல் எதிர்நீச்சல் 

வெற்றி வேண்டுமா? போட்டுப் பாரடா எதிர்நீச்சல்
சர்தாம் போடா தலைவிதி என்பது வெறுங்கூச்சல்
எண்ணித் துணிந்தாலின்று என்ன நடக்காதது
கொஞ்சம் முயன்றாலின்று எது கிடைக்காதது?

வெற்றி வேண்டுமா போட்டுப் பாரடா எதிர்நீச்சல்

Tuesday, 29 July 2014

இன்று (கேட்டு) ரசித்த பாடல் வரிகள் - 22 ( பக்தி....4 )



ஹரிவராசனம் விஸ்வமோகனம்
ஹரிததீஸ்வரம் ஆராத்யபாதுகம்
அறிவிமர்தனம் நித்யநர்த்தனம்
ஹரிஹராத்மஜம் தேவமாஷ்ரயே

ஷரணம் ஐயப்பா சுவாமி ஷரணம் ஐயப்பா
ஷரணம் ஐயப்பா சுவாமி ஷரணம் ஐயப்பா

சரணகீர்த்தனம் ஷக்தமானசம்
பரணலோலுபம் நர்த்தனாலசம்
அருணபாசுரம் பூதநாயகம்
ஹரிஹராத்மஜம் தேவமாஷ்ரயே

ஷரணம் ஐயப்பா சுவாமி ஷரணம் ஐயப்பா
ஷரணம் ஐயப்பா சுவாமி ஷரணம் ஐயப்பா

ப்ரணயசத்யகம் ப்ராணநாயகம்
ப்ரணதகல்பகம் சுப்ரபாஞ்சிதம்
ப்ரணவமந்திரம் கீர்த்தனப்ரியம்
ஹரிஹராத்மஜம் தேவமாஷ்ரயே

ஷரணம் ஐயப்பா சுவாமி ஷரணம் ஐயப்பா
ஷரணம் ஐயப்பா சுவாமி ஷரணம் ஐயப்பா

துரகவாகனம் சுந்தரானனம்
வரஹதாயுகம் வேதவர்நிதம்
குருக்ருபாகரம் கீர்த்தனப்ரியம்
ஹரிஹராத்மஜம் தேவமாஷ்ரயே

ஷரணம் ஐயப்பா சுவாமி ஷரணம் ஐயப்பா
ஷரணம் ஐயப்பா சுவாமி ஷரணம் ஐயப்பா

த்ருபுவனார்ஜிதம் தேவதாத்மகம்
த்ரனயனம் ப்ரபும் திவ்யதேஷிகம்
த்ரதஷபூஜிதம் சிந்திதப்ப்ரதம்
ஹரிஹராத்மஜம் தேவமாஷ்ரயே

ஷரணம் ஐயப்பா சுவாமி ஷரணம் ஐயப்பா
ஷரணம் ஐயப்பா சுவாமி ஷரணம் ஐயப்பா

பவபயாபகம் பாபுகாவஹம்
புவனமோகனம் பூதிபூஷனம்
தவளவாகனம் திவ்யவாரனம்
ஹரிஹராத்மஜம் தேவமாஷ்ரயே

ஷரணம் ஐயப்பா சுவாமி ஷரணம் ஐயப்பா
ஷரணம் ஐயப்பா சுவாமி ஷரணம் ஐயப்பா

களம்ருதுஸ்மிதம் சுந்தரனானம்
களபகோமளம் காத்ரமோஹனம்
களபகேசரி வாஜிவாஹனம்
ஹரிஹராத்மஜம் தேவமாஷ்ரயே

ஷரணம் ஐயப்பா சுவாமி ஷரணம் ஐயப்பா
ஷரணம் ஐயப்பா சுவாமி ஷரணம் ஐயப்பா

ஷ்ருதஜனப்ரியம் சிந்திதப்ரதம்
ஷ்ருதிவிபூஷனம் சாதுஜீவனம்
ஷ்ருதிமனோஹரம் கீதலாலசம்
ஹரிஹராத்மஜம் தேவமாஷ்ரயே

ஷரணம் ஐயப்பா சுவாமி ஷரணம் ஐயப்பா
ஷரணம் ஐயப்பா சுவாமி ஷரணம் ஐயப்பா

Saturday, 7 June 2014

இன்று (கேட்டு) ரசித்த பாடல் வரிகள் - 21


ஒருவன் மனது ஒன்பதடா... அதில்
ஒளிந்து கிடப்பது எண்பதடா

உருவத்தைப் பார்ப்பவன் மனிதனடா ...அதில்
உள்ளத்தைக் காண்பவன் இறைவனடா (ஒரு)

ஏறும்போது எரிகின்றான்
இறங்கும்போது சிரிக்கின்றான்
வாழும் நேரத்தில் வருகின்றான்
வறுமை வந்தால் பிரிகின்றான் (ஒரு)

தாயின் பெருமை மறக்கின்றான்
தன்னலச் சேற்றில் விழுகின்றான்
பேய் போல் பணத்தைக் காக்கின்றான்
பெரியவர் தம்மைப் பகைக்கின்றான் (ஒரு)

பட்டம் பதவி பெற்றவர் மட்டும்
பண்புடையோராய் ஆவாரா?
பள்ளிப் படிப்பு இல்லாத மனிதர்
பகுத்தறிவின்றிப் போவாரா? (ஒரு)

Sunday, 1 June 2014

இன்று (கேட்டு) ரசித்த பாடல் வரிகள் - 20

உலகம் ஆயிரம் சொல்லட்டுமே

உலகம் ஆயிரம் சொல்லட்டுமே
உனக்கு நீ தான் நீதிபதி
மனிதன் எதையோ பேசட்டுமே
மனசப் பாத்துக்க நல்லபடி உன்
மனசப் பாத்துக்க நல்லபடி

உலகம் ஆயிரம் சொல்லட்டுமே
உனக்கு நீ தான் நீதிபதி
மனிதன் எதையோ பேசட்டுமே
மனசப் பாத்துக்க நல்லபடி உன்
மனசப் பாத்துக்க நல்லபடி
உலகம் ஆயிரம் சொல்லட்டுமே

கதை கட்ட ஒருவன் பிறந்து விட்டால்
கண்ணகி வாழ்விலும் களங்கமுண்டு
காப்பாற்ற சில பேர் இருந்து விட்டால்
கள்வர்கள் வாழ்விலும் நியாயம் உண்டு
கோர்ட்டுக்குத் தேவை சில சாட்சி
குணத்துக்குத் தேவை மனசாட்சி உன்
குணத்துக்குத் தேவை மனசாட்சி

உலகம் ஆயிரம் சொல்லட்டுமே

மயிலைப் பார்த்து கரடி என்பார்
மானைப் பார்த்து வேங்கை என்பார்
குயிலைப் பார்த்து ஆந்தை என்பார்
அதையும் சிலபேர் உண்மை என்பார்
யானையைப் பார்த்த குருடனைப் போல்
என்னைப் பார்த்தால் என்ன செய்வேன்? சிலர்
என்னைப் பார்த்தால் என்ன செய்வேன்?

உலகம் ஆயிரம் சொல்லட்டுமே

கடலில் விழுந்த நண்பனுக்கு
கைகொடுத்தேன் அவன் கரையேற
கரைக்கு அவன் வந்து விட்டான்
கடலின் நான் தான் விழுந்து விட்டேன்
சொல்லி அழுதால் தீர்ந்து விடும்
சொல்லத் தானே வார்த்தையில்லை அதை
சொல்லத்தானே வார்த்தையில்லை

உலகம் ஆயிரம் சொல்லட்டுமே
உனக்கு நீ தான் நீதிபதி
மனிதன் எதையோ பேசட்டுமே
மனசப் பாத்துக்க நல்லபடி உன்

மனசப் பாத்துக்க நல்லபடி


திரைப்படம்: அருணோதயம்
இயற்றியவர்: கவிஞர் கண்ணதாசன்
இசை: கே.வி. மஹாதேவன்

பாடியவர்: டி.எம். சௌந்தரராஜன்

Saturday, 3 May 2014

இன்று (கேட்டு) ரசித்த பாடல் வரிகள் - 19

ஆட்டுவித்தால் யாரொருவர் ஆடாதாரே கண்ணா
ஆசையெனும் தொட்டினிலே ஆடாதாரே கண்ணா
நீ நடத்தும் நாடகத்தில் நானும் உண்டு
என் நிழலில் கூட அனுபவத்தில் சோகம் உண்டு
பகைவர்களை நானும் வெல்வேன் அறிவினாலே
ஆனால் நண்பனிடம் தோற்று விட்டேன் பாசத்தாலே
நண்பனிடம் தோற்று விட்டேன் பாசத்தாலே

(ஆட்டுவித்தால் யாரொருவர்...)

பாஞ்சாலி உன்னிடத்தில் சேலை கேட்டாள்
அந்த பார்த்தனவன் உன்னிடத்தில் கீதை கேட்டான்
நானிருக்கும் நிலையில் உன்னை என்ன கேட்ப்பேன்

இன்னும் நன்மை செய்து துன்பம் வாங்கும் உள்ளம் கேட்பேன்
நன்மை செய்து துன்பம் வாங்கும் உள்ளம் கேட்பேன்


(ஆட்டுவித்தால் யாரொருவர்...)

கடலளவு கிடைத்தாலும் மயங்க மாட்டேன்
அது கையளவே ஆனாலும் கலங்க மாட்டேன்


உள்ளத்திலே உள்ளது தான் உலகம் கண்ணா
இதை உணர்ந்து கொண்டால் துன்பமெல்லாம் விலகும் கண்ணா


(ஆட்டுவித்தால் யாரொருவர்...).....

Wednesday, 26 February 2014

இன்று (கேட்டு) ரசித்த பாடல் வரிகள் - 19

ஆனந்த யாழை மீட்டுகிறாய்,
அடி நெஞ்சில் வண்ணம் தீட்டுகிறாய்.
அன்பெனும் குடையை நீட்டுகிறாய்,
அதில் ஆயிரம் மழைத்துளி கூட்டுகிறாய்.

இரு நெஞ்சம் இணைத்து பேசிட,
உலகில் பாஷைகள் எதுவும் தேவை இல்லை!
சிறு புல்லில் உறங்கும் பனியில் தெரியும்,
மலையின் அழகோ தாங்கவில்லை.

உந்தன் கைகள் பிடித்து போகும் வழி,
அது போதவில்லை இன்னும் வேண்டுமடி…

இந்த மண்ணில் இது போல் யாரும் இங்கே
என்றும் வாழவில்லை என்று தோன்றுதடி !

ஆனந்த யாழை மீட்டுகிறாய்,
அடி நெஞ்சில் வண்ணம் தீட்டுகிறாய்.
அன்பெனும் குடையை நீட்டுகிறாய்,
அதில் ஆயிரம் மழைத்துளி கூட்டுகிறாய்.

தூரத்து மரங்கள் பார்க்குதடி,
தேவதை இவளா கேக்குதடி,
தன்னிலை மறந்தே பூக்குதடி,
காற்றினில் வாசம் தூக்குதடி – அடி
கோவில் எதற்கு ? தெய்வங்கள் எதற்கு ?
உனது புன்னகை போதுமடி !

இந்த மண்ணில் இது போல் யாரு இங்கே,
என்றும் வாழவில்லை என்று தோன்றுதடி !

ஆனந்த யாழை மீட்டுகிறாய்,
அடி நெஞ்சில் வண்ணம் பூசுகிறாய் !

உன் முகம் பார்த்தால் தோணுதடி,
வானத்து நிலவு சின்னதடி,
மேகத்தில் வரைந்தே பார்குதடி,
உன்னிடம் வெளிச்சம் கேட்குதடி,

அதை கையில் பிடித்து ஆறுதல்
உரைத்து வீட்டுக்கு அனுப்பு நல்லப்படி !

இந்த மண்ணில் இது போல் யாரும்
இங்கே என்றும் வாழவில்லை என்று தோன்றுதடி

ஆனந்த யாழை மீட்டுகிறாய்
அடி நெஞ்சில் வண்ணம் தீட்டுகிறாய் !
                                                                           


 - நா.முத்துக்குமார்

Thursday, 13 February 2014

இன்று (கேட்டு) ரசித்த பாடல் வரிகள் - 18

தென்றல் வந்து தீண்டும் போது என்ன வண்ணமோ மனசுலே
திங்கள் வந்து காயும் போது என்ன வண்ணமோ நெனப்புலே

வந்து வந்து போகுதம்மா எண்ணமெல்லாம் வண்ணமம்மா
எண்ணங்களுக்கேத்தபடி வண்ணமெல்லாம் மாறுமம்மா
உண்மையம்மா உள்ளதே நானும் சொன்னே பொன்னம்மா சின்ன கண்ணே


எவரும் சொல்லாமலே பூக்களும் வாசம் வீசுது
உறவும் இல்லாமலே இரு மனம் எதோ பேசுது
எவரும் சொல்லாமலே குயிலெல்லாம் தேனா பாடுது
எதுவும் இல்லாமலே மனசெல்லாம் இனிப்பா இனிக்குது

ஓடே நீர் ஓட இந்த உலகம் அது போல
ஓடம் அது ஓடும் இந்த காலம் அது போல
நிலைய இல்லாது நினைவில் வரும் நிறங்களே

ஈரம் விழுந்தாலே நிலத்துலே எல்லாம் துளிர்க்குது
நேசம் பிறந்தாலே உடம்பெல்லாம் ஏனோ சிலுற்குது
ஆழம் விழுதாக ஆசைகள் உஞ்சல் ஆடுது
அலையும் அலை போல அழகெல்லாம் கோலம் போடுது

குயிலே குயில் இனமே அதை இசையாய் கூவுதம்மா
கிளியே கிளி இனமே அதை கதையாய் பேசுதம்மா
கதையாய் விடுகதையாய் ஆவதில்லையே அன்பு தான்

வந்து வந்து போகுதம்மா எண்ணமெல்லாம் வண்ணமம்மா
எண்ணங்களுக்கேத்தபடி வண்ணமெல்லாம் மாறுமம்மா
உண்மையிலே உள்ளது என்ன என்ன வண்ணங்கள் என்ன என்ன

திரைப்படம்: அவதாரம்
பாடலாசிரியர்: கவிஞர் வாலி
இசையமைப்பாளர்: இளையராஜா
பாடகர்கள்: இளையராஜா, எஸ்.ஜானகி

Thursday, 2 January 2014

இன்று (கேட்டு) ரசித்த பாடல் வரிகள் - 17

பொன்னென்ன பூவென்ன கண்ணே - உன்
கண்ணாடி உள்ளத்தின் முன்னே
ஒரு கல்யாணப் பெண்ணாக உன்னைப்
புவி காணாமல் போகாது பெண்ணே

( பொன்னென்ன பூவென்ன )

மார்கழியில் மாலையிலே
மலர்ந்ததொரு மல்லிகைப்பூ
யார் வருவார் யார் பறிப்பார்
யார் அறிவார் இப்போது

( பொன்னென்ன பூவென்ன )

ஊர்கோலம் போகின்ற பூந்தென்றலும்
ஒலியோடு நடை போடும் நீரோடையும்
சுகமானது சுவையானது
உன் வாழ்வும் அது போல உயர்வானது

( பொன் )

செவ்வான மேகங்கள் குழலாகுமா
செந்தூரம் விளையாடும் முகமாகுமா
நடை போடுமா இசை பாடுமா
நடந்தாலும் அவை யாவும் நீயாகுமா.....


இசை: எம்.எஸ். விஸ்வநாதன்
பாடல்: கண்ணதாசன்
பாடியவர்: ஜெயச்சந்திரன்

இந்த பாடலைக் கிட்டத்தட்ட 40 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று கேட்டேன். ஸ்ரீதர் இயக்கிய ' அலைகள் ' படத்தில் வரும் இரு பாடல்களில் ஒன்று.  மிக இனிமையான பாடல்.  படம் தோல்வி அடைந்ததால் பாடல்  பிரபலமாகவில்லை. நெய்வேலியில் வேலை பார்த்தபோது கிராமபோன் வைத்திருந்த என் நண்பனுக்காக மிகவும் சிரமப்பட்டு இப்பாடலின் இசைத்தட்டு வாங்கியதும், நண்பனின் ஞாபகமும் இப்பாடலைக் கேட்கும்போது மலரும் நினைவுகளாக வந்து  இன்னும் வந்துகொண்டே இருக்கின்றது. இந்த படத்தில் வரும் இன்னொரு பாடல் மிகவும் புரட்சிகரமான, சிந்திக்கத் தூண்டும் பாடல். அதைப் பற்றி பிறகு எழுதுகிறேன்.

www.youtube.com/watch?v=kHojLd7jyeE

Friday, 1 November 2013

இன்று (கேட்டு) ரசித்த பாடல் வரிகள் - 16


பாரதியாரின் அற்புதமான இந்த கவிதைக்கு மிகச் சிறப்பாக மெட்டமைத்து 
டூயட் பாடலாக மாற்றி P B ஸ்ரீநிவாஸ் & P சுசீலா குரல்களில் 
ஹம்மிங்கோடு கேட்டபோது 
எவ்வளவு சுகம்! 




Wednesday, 25 September 2013

இன்று (கேட்டு) ரசித்த பாடல் வரிகள் - 15

அக்கம் பக்கம் பாரடா சின்ன ராசா 
ஆகாசப் பார்வை என்ன சொல்லு ராசா
அக்கம் பக்கம் பாரடா சின்ன ராசா
ஆகாசப் பார்வை என்ன சொல்லு ராசா

வாயில் என்ன மந்திரமா மனசு என்ன எந்திரமா?
சாமியிடம் பேசுது புள்ள தாயழுக கேக்கவுமில்ல
சாமியிடம் பேசுது புள்ள தாயழுக கேக்கவுமில்ல


அக்கம் பக்கம் பாரடா சின்ன ராசா
ஆகாசப் பார்வை என்ன சொல்லு ராசா


அம்மா பசி என்றொரு கூக்குரல்
அது தான் இனி தேசிய பாஷை
கட்சிக் கொடிகள் ஏறுது அங்கே
கஞ்சிப்பானை தெருவில் இங்கே
சுதந்திர நாடு சோத்துக்குக் கேடு சொல்லாதே சாமி
நம்ம பூமியோ எப்போதும் தருமம் செஞ்ச பூமி
சுதந்திர நாடு சோத்துக்குக் கேடு சொல்லாதே சாமி
நம்ம பூமியோ எப்போதும் தருமம் செஞ்ச பூமி


அக்கம் பக்கம் பாரடா சின்ன ராசா
ஆகாசப் பார்வை என்ன சொல்லு ராசா


தேசமிது செஞ்சது ஒனக்கு ஏராளம் இங்கே உண்டு
நீ என்ன செஞ்ச அதுக்கு? ஒன்னக் கேட்டு நீ பதில் சொல்லு
நமக்கென்ன போடா போன்னு நழுவுறே நேரம் பாத்து
நாடு முழுதும் தீயாப் போனா வீடு மட்டும் ஏது?
நமக்கென்ன போடா போன்னு நழுவுறே நேரம் பாத்து
நாடு முழுதும் தீயாப் போனா வீடு மட்டும் ஏது?


அக்கம் பக்கம் பாரடா சின்ன ராசா
ஆகாசப் பார்வை என்ன சொல்லு ராசா
வாயில் என்ன மந்திரமா மனசு என்ன எந்திரமா?
சாமியிடம் பேசுது புள்ள தாயழுக கேட்கவுமில்ல

அக்கம் பக்கம் பாரடா சின்ன ராசா
ஆகாசப் பார்வை என்ன சொல்லு ராசா  


எனக்கு மிகவும் பிடித்த படங்களில் ஒன்று " உன்னால் முடியும் தம்பி"
பலமுறை இந்த படத்தைப் பார்த்திருந்தாலும் நேற்று பார்த்தபோதுதான்  
இந்த பாடலில் அதிகம் கவனம் செலுத்தினேன்.

Sunday, 25 August 2013

SELF CONFIDENCE ...9



உன்னை அறிந்தால்...நீ உன்னை அறிந்தால்

உலகத்தில் போராடலாம்

உயர்ந்தாலும் தாழ்ந்தாலும்

தலை வணங்காமல் நீ வாழலாம்



மானம் பெரியது என்று வாழும் மனிதர்களை

மான் என்று சொல்வதில்லையா

தன்னை தானும் அறிந்து கொன்டு ஊருக்கும் சொல்பவர்கள்

தலைவர்கள் ஆவதில்லையா



பூமியில் நேராக வாழ்பவர் எல்லோரும்

சாமிக்கு நிகர் இல்லையா

பிறர் தேவை அறிந்து கொண்டு

வாரிக்கொடுப்பவர்கள் தெய்வத்தின் பிள்ளை இல்லையா



மாபெரும் சபையினில் நீ நடந்தால் - உனக்கு

மாலைகள் விழவேண்டும் - ஒரு

மாசு குறையாத மன்னவன் இவனென்று

போற்றிப் புகழ வேண்டும்



உன்னை அறிந்தால்...நீ உன்னை அறிந்தால்

உலகத்தில் போராடலாம்

உயர்ந்தாலும் தாழ்ந்தாலும்

தலை வணங்காமல் நீ வாழலாம்

Friday, 9 August 2013

இன்று (கேட்டு) ரசித்த பாடல் வரிகள் - 14


ஆடி வெள்ளி தேடி உன்னை
நானடைந்த நேரம்
கோடி இன்பம் நாடி வந்தேன்
காவிரியின் ஓரம்

ஓரக் கண்ணில் ஊறவைத்த
தேன் கவிதைச் சாரம்
ஓசையின்றிப் பேசுவது
ஆசை என்னும் வேதம்

வேதம் சொல்லி மேளமிட்டு
மேடை கண்டு ஆடும்
மெத்தை கொண்டு தத்தை ஒன்று
வித்தைபல நாடும்

நாடும் உள்ளம் கூடும் எண்ணம்
பேசும் மொழி மெளனம்
ராகம் தன்னை மூடி வைத்த
வீணை அவள் சின்னம்

சின்னம் மிக்க அன்னக்கிளி
வண்ணச் சிலைக் கோலம்
என்னை அவள் பின்னிக் கொள்ள
என்று வரும் காலம்!

காலம் இது காலம் என்று
காதல் தெய்வம் பாடும்
கங்கை நதி பொங்கும் - கடல்
சங்கமத்தில் கூடும்
சங்கமத்தில் 
கூடும்.

Wednesday, 1 May 2013

உழைப்பாளர் தினம்



சித்திரச் சோலைகளே!

உமை நன்கு திருத்த இப்பாரினிலே
முன்னர் எத்தனை தோழர்கள் ரத்தம் சொரிந்தனரோ!
உங்கள் வேரினிலே

நித்தம் திருத்திய நேர்மையினால்
மிகு நெல்விளை நன்னிலமே!
உனக்கெத்தனை மாந்தர்கள்
நெற்றி வியர்வை இறைத்தனர் காண்கிலமே

தாமரை பூத்த தடாகங்களே!
உமைத்தந்த அக்காலத்திலே
எங்கள் தூய்மைச் சகோதரர்
தூர்ந்து மறைந்ததைச்சொல்லவோ ஞாலத்திலே!

மாமிகு பாதைகளே!
உமை இப்பெரு வையமெலாம் வகுத்தார்
அவர் ஆமை எனப்புலன் ஐந்தும் ஒடுங்கிட
அந்தியெலாம் உழைத்தார்


ஆர்த்திடும் யந்திரக் கூட்டங்களே!
உங்கள் ஆதி அந்தம் சொல்லவோ?
நீங்கள் ஊர்த்தொழிலாளர் உழைத்த உழைப்பில்
உதித்தது மெய் அல்லவோ?

கீர்த்திகொள் போகப்பொருட்புவியே!
உன்றன் கீழிருக்கும் கடைக்கால்
எங்கள் சீர்த்தொழிலாளர் உழைத்த உடம்பிற்
சிதைந்த நரம்புகள் தோல்!


நீர்கனல் நல்ல நிலம்வெளி காற்றென
நின்ற இயற்கைகளே!
உம்மைச்சாரும் புவிப்பொருள் தந்ததெவை?
தொழிலாளார் தடக்கைகளே! தாரணியே!
தொழிலாளர் உழைப்புக்குச்சாட்சியும் நீயன்றோ?
பசி தீரும் என்றால் உயிர்போகும் எனச்சொல்லும்
செல்வர்கள் நீதிநன்றோ ?

எலிகள் புசிக்க எலாம்கொடுத்தே
சிங்க ஏறுகள் ஏங்கிடுமோ?
இனிப்புலிகள் நரிக்குப் புசிப்பளித்தே
பெரும் புதரினில் தூங்கிடுமோ?

கிலியை விடுத்துக் கிளர்ந்தெழுவார்
இனிக்கெஞ்சும் உத்தேசமில்லை
சொந்த வலிவுடையார் இன்ப வாழ்வுடையார்
இந்த வார்த்தைக்கு மோசமில்லை

- பாரதிதாசன் 



Tuesday, 23 April 2013

இன்று (கேட்டு) ரசித்த பாடல் வரிகள் - 13


புத்தம் புது பூமி வேண்டும்..

நித்தம் ஒரு வானம் வேண்டும்..
தங்க மழை பெய்ய வேண்டும்..
தமிழில் குயில் பாட வேண்டும்!

சொந்த ஆகாயம் வேண்டும்..
ஜோடி நிலவொன்று வேண்டும்..
நெற்றி வேர்க்கின்ற போது- அந்த
நிலவில் மழை பெய்ய வேண்டும்!

வண்ண விண்மீன்கள் வேண்டும்..
மலர்கள் வாய் பேச வேண்டும்..
வண்டு உட்காரும் பூ மேலே – நான்
வந்து உட்காரும் வரம் வேண்டும்!

கடவுளே, கொஞ்சம் வழிவிடு..- உன்
அருகிலே ஒரு இடம் கொடு..
புன்னகை எங்கள் தாய்மொழி என்ற வரம் கொடு..
பூமியில் சில மாறுதல் தனை வர விடு!

யுத்தம் காணாத பூமி – ஒரு
சத்தம் இல்லாமல் வேண்டும்.
மரணம் காணாத மனித இனம் – இந்த
மண்ணில் நிலை கொள்ளும் வரம் வேண்டும்!

பஞ்சம் பசி போக்க வேண்டும்..
பாலைவனம் பூக்க வேண்டும்..
சாந்தி,சாந்தி என்ற சங்கீதம் – சுகம்
ஏந்தி ஏந்தி வந்து விழ வேண்டும்!

போனவை அட,போகட்டும்..
வந்தவை இனி வாழட்டும்..
தேசத்தின் எல்லைக் கோடுகள்..அவை தீரட்டும்..
தெய்வங்கள் இந்த மண்ணிலே வந்து வாழட்டும்!

Thursday, 17 January 2013

இன்று (கேட்டு) ரசித்த பாடல் வரிகள் - 11

புத்தன் ஏசு காந்தி பிறந்தது பூமியில் எதற்காக
தோழா ஏழை நமக்காக
கங்கை யமுனை காவிரி வைகை ஒடுவதெற்காக
நாளும் உழைத்து தாகம் எடுத்த தோழர்கள் நமக்காக
கேள்விகுறி போல் முதுகு வளைந்து உழைப்பது எதற்காக
மானம் ஒன்றே பெரிதென்று எண்ணி பிழைக்கும் நமக்காக

புத்தன் ஏசு காந்தி பிறந்தது பூமியில் எதற்காக
தோழா ஏழை நமக்காக

நிழல் வேண்டும் போது மரம் ஒன்று உண்டு
பகை  வந்த போது துணை ஒன்று உண்டு
நிழல் வேண்டும் போது மரம் ஒன்று உண்டு
பகை  வந்த போது துணை ஒன்று உண்டு
இருள் வந்த போது விளக்கொன்று உண்டு
எதிர்காலம் ஒன்று எல்லோர்க்கும் உண்டு
உண்மை என்பது எங்கும் உள்ளது தெய்வத்தின் மொழியாகும்
நன்மை என்பது நாளை வருவது நம்பிக்கை ஒளியாகும்

புத்தன் ஏசு காந்தி பிறந்தது பூமியில் எதற்காக
தோழா ஏழை நமக்காக

பொருள் கொண்ட பேர்கள் மனம் கொண்டதில்லை
தரும் கைகள் தேடி பொருள் வந்ததில்லை
பொருள் கொண்ட பேர்கள் மனம் கொண்டதில்லை
தரும் கைகள் தேடி பொருள் வந்ததில்லை
மனம் என்ற கோவில் திறக்கின்ற நேரம்
அழைக்காமல் அங்கே தெய்வம் வந்து சேரும்
அழுதவர் சிரிப்பதும் சிரித்தவர் அழுவதும் விதி வழி வந்ததில்லை
ஒருவருக்கென்றே உள்ளதெல்லாம் இறைவனும் தந்ததில்லை

புத்தன் ஏசு காந்தி பிறந்தது பூமியில் எதற்காக
தோழா ஏழை நமக்காக
கங்கை யமுனை காவிரி வைகை ஒடுவதெற்காக
நாளும் உழைத்து தாகம் எடுத்த தோழர்கள் நமக்காக

புத்தன் ஏசு காந்தி பிறந்தது பூமியில் எதற்காக
தோழா ஏழை நமக்காக