சென்று வா மகனே சென்று வா
அறிவை வென்று வா மகனே வென்று வா
கன்று தாயை விட்டு சென்ற பின்னும்
கன்று தாயை விட்டு சென்ற பின்னும்
அது நின்ற பூமி தன்னை மறப்பதில்லை
சென்று வா மகனே சென்று வா
அறிவை வென்று வா மகனே வென்று வா
அறிவுலகம் உன்னை அழைக்கின்றது
ஏதும் அறியாதவன் என்றே நினைக்கின்றது
அரண்மனை வாசல் திறக்கின்றது
அரண்மனை வாசல் திறக்கின்றது
அங்கே ஆணவம் புன்னகை புரிகின்றது
சென்று வா மகனே சென்று வா
அறிவை வென்று வா மகனே வென்று வா
உண்மையைச் சொல்வதற்கு படிப்பெதற்கு
எல்லாம் உணர்ந்தவர் போல் நடிக்கும் நடிப்பெதற்கு
கண் கண்ட காட்சிகட்கு விளக்கெதற்கு
நெஞ்சில் கள்ளமில்லாதவர்க்கு பயமெதற்கு
நீ இருக்கும் இடத்தில் நானிருப்பேன்
உன் நிழலிலும் பொருளாகக் குடியிருப்பேன்
தாயிருக்கும் வரையில் கலக்கமில்லை
இந்தத் தாயிருக்கும் வரையில் கலக்கமில்லை
எந்தச் சபையிலும் உனக்கு நடுக்கமில்லை
சென்று வா மகனே சென்று வா
அறிவை வென்று வா மகனே வென்று வா
No comments:
Post a Comment