Tuesday 24 October 2023

தமிழ் vs சமஸ்கிருதம்

சமஸ்கிருதம் தமிழை விட பழமையான மொழி என்று சொல்வதை எவரும் ஏற்கமாட்டார்கள். ஆது 3800 BC யிலிருந்து உள்ளது. தமிழ்தான் உலகின் மூத்த மொழிகளில் முதலாம் இடத்தில் உள்ள மொழி. கீழே கொடுக்கப்பட்ட தரவில் காணவும். உலகெங்கும் இன்றைய நிலையில் 12 கோடி பேருக்கு மேல் (தமிழ் நாட்டிலேயே 7 கோடி தமிழ் பேசுவோர் உள்ளனர்) தாய் மொழி தமிழாகவும், தமிழ் மொழி பேசுபவர்களாகவும் உள்ளார்கள். ஆகையால்தான் முதன் முதலில் தமிழை செம்மொழியாக அறிவிக்க தேவையான தரவுகள், ஒன்றிய அரசிடம் தரப்பட்டது, கலைஞர் கருணாநிதி முயற்சியால். அதனால் செம்மொழி என்று அறிவிக்கப்பட்டது.

சமஸ்கிருதம் பேச்சு வழக்கொழிந்த மொழி, அது 1500 BC யிலிருந்து உள்ளது. அதை யாரும் தாய் மொழியாக கொள்ள வில்லை. அது வேதங்களை அங்கு பயிலும் மாணாக்கர்களுக்கு பயிற்றுவிக்கும் மடங்களால், மடாதிபதிகளால், அங்கு பயிலும் மாணாக்கர்களுக்கு மட்டும் சொல்லித்தரபடுகிறது. அதுவே கீழேயுள்ள தரவின் படி 15000 கீழே உள்ளது. அங்கு படித்தவர்களும் சமஸ்கிருதத்தில் பேசிக்கொள்ள மாட்டார்கள், அவர்களின் தாய் மொழியில் பேசுவார்கள்.

No comments:

Post a Comment