Showing posts with label TAMIL. Show all posts
Showing posts with label TAMIL. Show all posts

Thursday, 15 February 2024

AVVAIYAR - HOW MANY?

 


The Avvaiyar were some of the most famous and important female poets of the Tamil canon. Abithana Chintamani states that there were three female poets titled Avvaiyar. Among them, Avvaiyar I lived during the Sangam period (1st and 2nd century CE) and had cordial relation with the Tamil chieftains Paari andAthiyaman

Monday, 8 January 2024

தமிழ்தான் உலகின் முதலாம் இடத்தில் உள்ள மொழி



சமஸ்கிருதம் தமிழை விட பழமையான மொழி என்று சொல்வதை எவரும் ஏற்கமாட்டார்கள். ஆது 3800 BC யிலிருந்து உள்ளது. தமிழ்தான் உலகின் மூத்த மொழிகளில் முதலாம் இடத்தில் உள்ள மொழி. கீழே கொடுக்கப்பட்ட தரவில் காணவும். உலகெங்கும் இன்றைய நிலையில் 12 கோடி பேருக்கு மேல் (தமிழ் நாட்டிலேயே 7 கோடி தமிழ் பேசுவோர் உள்ளனர்) தாய் மொழி தமிழாகவும், தமிழ் மொழி பேசுபவர்களாகவும் உள்ளார்கள். ஆகையால்தான் முதன் முதலில் தமிழை செம்மொழியாக அறிவிக்க தேவையான தரவுகள், ஒன்றிய அரசிடம் தரப்பட்டது, கலைஞர் கருணாநிதி முயற்சியால். அதனால் செம்மொழி என்று அறிவிக்கப்பட்டது.

சமஸ்கிருதம் பேச்சு வழக்கொழிந்த மொழி, அது 1500 BC யிலிருந்து உள்ளது. அதை யாரும் தாய் மொழியாக கொள்ள வில்லை. அது வேதங்களை அங்கு பயிலும் மாணாக்கர்களுக்கு பயிற்றுவிக்கும் மடங்களால், மடாதிபதிகளால், அங்கு பயிலும் மாணாக்கர்களுக்கு மட்டும் சொல்லித்தரபடுகிறது. அதுவே கீழேயுள்ள தரவின் படி 15000 கீழே உள்ளது. அங்கு படித்தவர்களும் சமஸ்கிருதத்தில் பேசிக்கொள்ள மாட்டார்கள், அவர்களின் தாய் மொழியில் பேசுவார்கள்.

Tuesday, 12 December 2023

TAMIL - THE OLDEST LANGUAGE

 

For the longest time it was believed that Sanskrit was the oldest language. But recent archaeological discoveries has shown that the oldest language in the world is Tamil, which is about 5000 years old.

Unlike Sanskrit which fell out of common usage around 600 BC Tamil is still used by around 78 million people in Tamil Nadu the state of India, Sri Lanka and Singapore. Part of the Dravidian family, which comprises of some native southern and eastern Indian languages. Sanskrit is now a liturgical language - the holy languages found in the scriptures of Hinduism, Buddhism and Jainism.

Another ancient language which cannot be left out is Egyptian. the Egyptian civilization was one of the oldest and the most powerful in the world. It boasts of many discoveries that has baffled the world. The ancient Egyptian language was not been understood for thousands of years. That was until the discovery of Rosetta stone by the French under Napoleon.

Sunday, 3 December 2023

திருவாசகம்

சிவபுராணம் என்றால் என்ன? அதை தினமும் படிப்பதால் வரும் பயன்கள் என்ன?

சிவபுராணத்தின் பெருமைகள் :

1. தில்லையில் ஒரு ஆனி மாதம் ஆயில்யம் அன்று சிவபெருமான் அந்தணர் வடிவம் தாங்கி திருநீறு பூசி மாணிக்கவாசகர் தங்கியிருந்த மடத்திற்கு வந்தார்.

வந்தவர் மாணிக்கவாசகர் பெருமானிடம் தாங்கள் எழுதிய ' திருவாசகத்தை' நீங்கள் ஒருமுறை சொன்னால் அப்படியே ஓலைச்சுவடிகளில் எழுதிக் கொள்கிறேன் என்றார்.

3. மாணிக்கவாசகர் அமர்ந்து இருந்தபடியே 51 பதிகங்கள் கொண்ட திருவாசகத்தின் 658 பாடல்களையும் சொல்ல சொல்ல, பெருமான் எழுதிக் கொண்டார்.

மறுநாள் ஆனி மாதம் மகம் நட்சத்திரத்தன்று ஆலயத்திற்கு வந்த தில்லை வாழ் அந்தணர்கள் எனப்படும் தீட்சதர்கள் கூத்தபெருமான் சன்னதியில் நிறைய ஓலைச்சுவடிகளை கண்டு திகைத்து போயினர்

ஓலைச் சுவடிகள் அத்தனையையும் எடுத்து பார்த்த தீட்சதர்கள் கடைசி ஓலையில் " மாணிக்கவாசகர் சொல்ல அழகிய சிற்றம்பலமுடையான்" எழுதியது என கையொப்பம் இடப் பட்டிருந்தது.

ஓலைச் சுவடிகள் அத்தனையையும் எடுத்து பார்த்த தீட்சதர்கள் கடைசி ஓலையில் " மாணிக்கவாசகர் சொல்ல அழகிய சிற்றம்பலமுடையான்" எழுதியது என கையொப்பம் இடப் பட்டிருந்தது.

மீண்டும் திகைத்து போய் பெருமான் கருணையை வியந்த அந்தணர்கள் மாணிக்கவாசகர் தங்கி இருந்த இடம் சென்று நடந்தவற்றை கூறி அவரை அழைத்து வந்தார்கள்.

ஓலைச்சுவடிகளில் உள்ள ஓவ்வொரு திருவாசகப் பாடலையும் பார்த்து, கடைசியில் பெருமானது ஒப்பத்தையும் கண்டு பிரமித்தவராய் " ஆம் அடியேன் சொல்ல எழுதப் பட்டது தான்" என்று சொல்லி வந்தது பெருமான்தான் என நினைந்து உள்ளம் உருகி கண்ணீர் சொரிந்தார்.

தீட்சதர்கள், மாணிக்கவாசகரிடம் ஓலைச்சுவடியில் உள்ள திருவாசகத்திற்கு பொருள் கூறுமாறு வேண்டினர்.

9. மாணிக்கவாசகர் , மந்தகாசப் புன்னகையுடன் நடனக் கோலத்தில் இருக்கும் நடராசப் பெருமானைக் காட்டி " இப் பாடல்கள் அனைத்துக்கும் இவர்தான் பொருள் " என்றார்.

அப்படி மாணிக்கவாசகர் கூறியதும் பெருமான் அருகே ஒரு ஒளி தோன்றியது. அதை நோக்கிய வண்ணம் உள்ளே சென்ற மாணிக்கவாசகர் சிவபெருமானிடம் இரண்டறக் கலந்து விட்டார்.

11. ஆக , ஆனி - மகம் மாணிக்கவாசகரின் குருபூசை நாள் ஆகும்.

சிறப்பு - 1 நமச்சிவாய என்னும் ஐந்தெழுத்தில் திருவாசகத்தின் முதல் பதிகமான சிவபுராணம் தொடங்குவது.

13. சிறப்பு - 2 சிவபுராணத்தின் முதல் 6 வரிகள் வாழ்க என முடியும்.

14. சிறப்பு - 3 அதை அடுத்த 5 வரிகள் வெல்க என முடியும்.

15. சிறப்பு -4 அடுத்த 8 வரிகள் *போற்றி* என முடியும்.

16. இவ்வாறு 6-5-8 என அமைந்திருப்பது திருவாசகத்தின் 658 பாடல்களை குறிக்கிறது.

17. சிவபுராணத்தின் 32 வது வரியில் மெய்யே உன் பொன்னடிகள் கண்டின்று வீடுற்றேன் என பாடி இருப்பார்.

இது மாணிக்கவாசகர் 32 வயதில் முக்தி அடைந்ததை சூட்சமமாக குறிக்கும்.

18. திருவாசகத்தின் 18 வது வரியான அவன் அருளாலே அவன் தாள் வணங்கி என்பது படிப்பவர் அனைவரையும் உருக்குவதாக இருக்கும்.

19. ரமண மகிஷி திருவண்ணாமலையில் தமது தாயார் உடல் நலமின்றி இருந்த கடைசி நாளில் அன்னை அருகே அமர்ந்து திருவாசகம் படித்தார்.

அன்று இரவே அவரது அன்னை முக்தி அடைந்தார்

20. காஞ்சி மகா பெரியவரிடம் குழந்தை இல்லாத ஒரு தம்பதி சென்று தங்கள் குறையை கூறினர்.

பெரியவர் திருவாசகப் புத்தகத்தை கொடுத்து ஒரு குறிப்பிட்ட பதிகத்தை தினம் படிக்க சொன்னார்.

அவர்களுக்கு வரிசையாக 6 குழந்தைகள் பிறந்தன.

புல்லாகி, பூடாகி, புழுவாய், மரமாகி, பல் விருகமாகி, பறவையாய் , பாம்பாகி , கல்லாய், மனிதராய், பேயாய், கணங்களாய்" என சுவை நிறைந்த திருவாசகத்தின் பெருமைகளை சொல்லிக் கொண்டே போகலாம்.

தமிழ் முருகன்

முருகனுக்கு முற்பட்டது தமிழ் மொழி. பிறகு எப்படி முருகனை தமிழ் கடவுள் என்கிறார்கள்? முருகன் தமிழுக்கு செய்த சேவை என்ன? இல்லை முருகனும் தமிழும் ஒன்று என்றால், முருகனின் தாய் தந்தையர் பேசிய மொழி எது? வேதத்தைக் கொண்டு விளக்குக.
  1. முருகனுக்கு மூத்தது தமிழ்.
  2. முருகன் எப்படி தமிழ்க்கடவுள் ஆவான் ?
  3. முருகன் தமிழுக்கு என்ன சேவை செய்தான் ?
  4. முருகனின் தாய்தந்தை தாய்மொழி என்ன ?
  5. வேதத்தைக் கொண்டு விளக்குக.

மொட்டைத்தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு போடுங்கோ பார்க்கலாம் எனக் கேள்வி.

தமிழர்கள் முதலில் முன்னவர்களை உருவமில்லாமல் வழிபட்டனர்.

போரில் இறந்தவர்களுக்கு வீர நடுக்கல் மரியாதை.

லிங்க வழிபாடு அதாவது வெறும் கூழாங்கல், கல்லை வழிபாடு செய்தனர்.

இப்போது ஏதோ ஒரு மொழி பேசினார்களா ? பேபேபே இல்லை. அது தமிழ்.

நாகரீகம் வளர்கிறது. சண்டைகளும் போர்களும் மனித வரலாறு. போர் தொடங்க சில ஆயுதங்கள் கம்பு, கூர்மையான செதுக்கப்பட்ட கல், கம்பு, வில், அம்பு, இரும்பு காலங்கள் வந்த பிறகு, வேல், ஈட்டி போன்றவை.

இப்போது யார்யாரை போராடப் போகிறார்களோ தெரியாது. வெற்றியா, தோல்வி அடைவோமோ தெரியாது.

பயம். தைரியம். இடையே நம்பிக்கை. நம்பிக்கைக்கு தேவை ஏதோ கடவுள். அது சூரியனோ, சந்திரனோ, நெருப்போ, நீரோ அல்லது ஒரு அழகான கொடூர பெண்கடவுளோ, அழகான அல்லது கொடூர ஆணோ கடவுள் நம்பிக்கை மனிதனுக்கு தேவைப்பட்டது.

கொற்றவை வந்தாள்.

அழகுக்கும் வீரத்துக்கும் முருகன் வந்தான். கற்பனைகள் உதித்தன.

கொற்றவையையும் முருகனையும் பாடித் துதித்தனர் தமிழர்கள்.

எந்த மொழியில் ? தமிழில்.

இப்போது ராணிமுத்து காலண்டரில் உள்ள பாலசுப்ரமண்யனையோ, இரண்டு மனைவி ஜெயந்திநாதரையோ, ஆதிசங்கரரின் ஸ்கந்த புராண சுகப்ராமன ரண்யாவையோ, சமஸ்கிரிதப் புராணங்களையோ இங்கு கொண்டு வராதீர்கள்.

இது தமிழ்நாடு.

வடநாட்டு வேதம், சமஸ்கிரித சங்கரர், சிவன், ஸ்கந்த புராண கார்த்திகேயா, சிவன், பார்வதி இவர்களெல்லாம் வெளிநாட்டினர். வேதம் ஆரிய ஈரானிய ஐரோப்பிய சமஸ்கிரிதம். தீ, நீர் வழிபாடு தமிழர் நாகரீகம் அல்ல.

Thursday, 2 November 2023

குமரிக் கண்டம்

இன்றைய காலகட்டத்தில், வெஸ்டன் கக்கூஸ் கூட பயன்படுத்த தெரியாமல் நம் நாட்டில் பலகோடி பேர், தான் மேற்கத்தியத்தை பின்பற்றுபவன் ("I'm westernized..") என்று பீலாய் விட்டு திரிகின்றனர். மனிதனாக மருவிய இனம் பேசிய முதல் மொழி தமிழ். மனிதனும், தமிழும் பிறந்த குமரிக் கண்டம்! மறக்கடிக்கப்பட்ட உண்மைகள்!! நாகரீகத்தை வளர்த்தவர்கள் தமிழர்கள். உலகிலேயே ஓர் மொழியை இனம் என்றும் கூறும் கூற்றுடைய மொழி தமிழ். தமிழர்கள் ஓர் பிரிவினர்கள் அல்ல, மனித இனத்தின் ஆணிவேர். மொழிக்கு மட்டுமின்றி வாழ்வியலுக்கும் இலக்கணம் வகுத்து வாழ்ந்தவன் தமிழன். இயற்கை சீற்றத்தினால் அழிந்த உலக நகரங்கள்!!! இன்றோ அதை எல்லாம் மறந்து மீண்டும் நாணம், வெட்கம்,என அனைத்தையும் அறுத்தெறிந்து மீண்டும் அம்மணமாய் திரிய மேற்கத்தியத்தை கட்டி அழுதுக்கொண்டு இருக்கிறோம். தமிழன் மட்டும் அல்ல மனிதர்கள் யாவரும் அறிந்துக்கொள்ள வேண்டிய தமிழனத்தின் எழுச்சியைப் பற்றிய வியப்பூட்டும் தகவல்கள்.....

கி.மு. 2.5 பில்லியன் நிலத்தில் பாறைகள் தோன்றிய காலம். முதன் முதலில் உலகில் மனித இனம் தோன்றியது. தென் குமரிக்குத் தெற்கே இலெமூரியா என்ற கண்டத்தில் முதலில் மனித இனம் தோன்றியது.

கி.மு. 470000 இந்தியாவின் தமிழ் நாடு, பஞ்சாப் ஆகிய மாநில இடங்களில் மனித இனம் வாழத் தொடங்கி சுற்றித் திரிந்ததாகக் கூறப்படும் காலக்கட்டம்.

கி.மு. 360000 முதன் முதலாக சைனாவில் யோமோ எரக்டசு நெருப்பை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

கி.மு. 300000 யோமோ மனிதர்கள் ஆசியாவிலும் ஆப்பிரிக்காவிலும் சுற்றித் திரிந்தனர்.

கி.மு. 100000 நியாண்டெர்தல் மனிதன் கிழக்கு ஆப்பிரிக்காவில் தற்கால மனிதனின் மூளை அளவு உள்ள மனிதர்கள் வாழ்ந்தனர்.

கி.மு. 75000 கடைசி பனிக்காலம். உலக மக்கட் தொகை 1.7 மில்லியன்.

கி.மு. 50000 உலகின் முதல் மொழியாக நம் தாய் மொழி "உலக தமிழ் செம்மொழி" தமிழ் மொழியின் தோற்றம் ஏற்பட்ட காலகட்டம்.

கி.மு. 50000 - 35000 தமிழ் மொழியிலிருந்து சீன மொழிக் குடும்பம் பிரிவு ஏற்பட்டது.

கி.மு. 35000 - 20000 ஆஸ்திரேலிய, ஆப்பிரிக்க சிந்திய மொழிகள் எல்லாம் தமிழ் மொழியிலிருந்து பிரிந்ந காலகட்டம்.

கி-மு. 20000 - 10000 இந்தோ ஐரோப்பிய மொழிகள் எனப்படும் ஒளியர் கிளைமொழிகள் தமிழ் மொழியிலிருந்து பிரிந்த காலகட்டம்.

கி-மு. 10527 பாண்டிய மன்னன் காய்கினவழுதி முதல் தமிழ்ச்சங்கத்தைத் தோற்றுவித்த காலகட்டம் இது. 4449 புலவர்கள் கூடி, முதுநாரை, முதுகுருகு, களரியாவிரை முதலிய நூல்கள் இங்கு தான் இயற்றினார்.

கி.மு. 10000 கடைசி பனிக்காலம் முற்றுப்பெற்றது. இந்த காலகட்டத்தில், உலக மக்சுள் தொகை 4 மில்லியன்ஆகவும்.. குமரிக்கணடம் தமிழர் மக்கள்தொகை 1,00,000 ஆகவும் இருந்ததாக கூறப்படுகிறது.

கி.மு. 6087 மனிதர்கள் மற்றும் தமிழினம் தோன்றிய தாய் மடியான இலெமோரியா எனப்படும் குமரிக் கண்டம், கடல் கொந்தளிப்பில் மூழ்கி அழிந்தது.

கி.மு 6000 - 3000 கபாடபுரத்தைத் தலைநகரமாகக் கொண்ட பாண்டிய மன்னன் வெண்தேர் செழியன், இரண்டாம் தமிழ்ச்சங்கத்தை நிறுவினான். 3700 புலவர்கள் இருந்தனர். அகத்தியம், தொல்காப்பியம் முதலிய இலக்கண நூல்கள் இங்கு தான் 

உலக மக்கள் தொகை 5 மில்லியன். முகஞ்சதாரோ, ஹரப்பா அடங்கிய சிந்து சமவெளி நாகரிகம் தொடங்கிய காலகட்டம் இது தான்.

சிந்து சமவெளியை சேர்ந்த மக்கள் தொகை 10 லட்சமாக உயந்தது. மற்றும் கிருத்துவ உலக நாட்குறிப்பு ஆரம்பம் ஆனா காலகட்டம்.

கி.மு - 3200 சிந்து சமவெளியினர், 27 விண்மீன்களை பற்றிய இடைத்தொடர்பு நோக்கி சூரிய, சந்திரனின் முழு மறை வடிவங்கள் நிலைப்பாட்டைக் கண்டரிந்தினர்.

கி.மு - 3113 அமெரிக்க- தமிழினத்தவராகிய மாயர்கள் தொடங்கிய மாயன் ஆண்டுக் கணக்கு ஆரம்பமான காலகட்டம் இது.

சிந்து சமவெளிக் தமிழர்களின் "கலியாண்டு" ஆண்டு தொடக்கம், சிந்து சமவெளியில் தமிழர்களின் நாகரிகம் தழைக்கத் தொடங்கிய காலகட்டமும் இதுதான்.

கி.மு - 3100 - 3000 ஆரியர்கள் சிந்து சமவெளி வழி நுழைந்தனர். துணி நெய்தல் ஐரோப்பா சிந்து சமவெளியில் ஆரம்பித்தது. தென்னிந்தியாவில் குதிரைகள் இருந்தது. சைவ ஆகமங்கள் முதல் தமிழ்ச் சங்க காலத்தில் பொறிக்கப்பட்டன.

கி.மு - 2387 இரண்டாம் கடல் கொந்தளிப்பால் கபாடபுரம் அழிந்தது. மற்றும் ஈழம் பெருநிலப் பகுதியிலிருந்து பிரிந்தது.

கி.மு - 2000 - 1000 காந்தாரத்தில் இருந்த ஆரியர்களுடன் வடபுலத் தமிழ் மன்னர்களும் சிந்து வெளி தமிழர்களும் போர் புரிந்த காலம். கடற்பயணங்களில் புதியன கண்டுபிடித்த சேர இளவரசர்கள் ஈழத்தில் ஆண்டகாலம்.

கி.மு - 1915 திருப்பரங்குன்றத்தில் மூன்றாம் தமிழ்ச் சங்கம் கூடி நடந்ததாக கருதப்படும் காலகட்டம் இது.

கி.மு. - 1316 மகாபாரதத்தை  எழுதிய காலகட்டம் இது தான் என்று கருதப்படுகிறது.

கி. மு. 1000 உலக மக்கள் தொகை 50 மில்லியனாக உயர்ந்தது..

TAKEN FROM NET

Tuesday, 24 October 2023

தமிழ் vs சமஸ்கிருதம்

சமஸ்கிருதம் தமிழை விட பழமையான மொழி என்று சொல்வதை எவரும் ஏற்கமாட்டார்கள். ஆது 3800 BC யிலிருந்து உள்ளது. தமிழ்தான் உலகின் மூத்த மொழிகளில் முதலாம் இடத்தில் உள்ள மொழி. கீழே கொடுக்கப்பட்ட தரவில் காணவும். உலகெங்கும் இன்றைய நிலையில் 12 கோடி பேருக்கு மேல் (தமிழ் நாட்டிலேயே 7 கோடி தமிழ் பேசுவோர் உள்ளனர்) தாய் மொழி தமிழாகவும், தமிழ் மொழி பேசுபவர்களாகவும் உள்ளார்கள். ஆகையால்தான் முதன் முதலில் தமிழை செம்மொழியாக அறிவிக்க தேவையான தரவுகள், ஒன்றிய அரசிடம் தரப்பட்டது, கலைஞர் கருணாநிதி முயற்சியால். அதனால் செம்மொழி என்று அறிவிக்கப்பட்டது.

சமஸ்கிருதம் பேச்சு வழக்கொழிந்த மொழி, அது 1500 BC யிலிருந்து உள்ளது. அதை யாரும் தாய் மொழியாக கொள்ள வில்லை. அது வேதங்களை அங்கு பயிலும் மாணாக்கர்களுக்கு பயிற்றுவிக்கும் மடங்களால், மடாதிபதிகளால், அங்கு பயிலும் மாணாக்கர்களுக்கு மட்டும் சொல்லித்தரபடுகிறது. அதுவே கீழேயுள்ள தரவின் படி 15000 கீழே உள்ளது. அங்கு படித்தவர்களும் சமஸ்கிருதத்தில் பேசிக்கொள்ள மாட்டார்கள், அவர்களின் தாய் மொழியில் பேசுவார்கள்.

Monday, 9 October 2023

TAMIL & MALAYALAM

 The word “malayalam” means the one who living in the mountains.

Yes, malayalam and tamil language are related to each other. You can call malayalam as sankrit infuenced tamil.

Malayalam came into exist only like 5 centuries ago(Drafted). Chera’s are the first one who started talking Sanskrit-Senthamiz (malayalam) language.

There was a political reason for the evolution of Malayalam. South India was ruled by Tamil dynasty but in Kerala there was strong presence of Sanskrit only speaking Aryans. So this Aryans and Dravidans went through a lot of tensions, conflict and wars at that time.

Later this two came into diplomatic terms and used this Sanskrit words widely with Tamil.

A different language called Malayalam came into existence.

This man “Thunchaththu Ramanujan Ezhuthachan” (father of malayalam),

Drafted this language more precisely and orderly, he was a brilliant poet.

Tamil was the reason for Malayalam but at least 60–70% of words using in Malayalam were Sanskrit.

Sunday, 3 September 2023

சிலப்பதிகார கதை - இரண்டு வரியில்



சிலப்பதிகார கதையை  அழகாக , இரண்டு வரியில் கூறுகின்றார்:

"பால் நகையாள், வெண்முத்துப் பல் நகையாள், கண்ணகியாள் கால் நகையால் வாய் நகைபோய்க், கழுத்து நகை இழந்த கதை ".

விளக்கம்:பால் நகையாள்--பால் உணர்ச்சி தோன்றுகிற மாதிரி சிரிக்கமாட்டாள்;
வெண்முத்துப் பல் நகையாள்--முத்துப் போன்ற பற்களை உடையவள்,
கால் நகையாள்-- கால் சிலம்பினால்;
வாய் நகை போய்-- புன் சிரிப்பு மறைந்து;
கழுத்து நகை-- தாலி.

 - அப்துல் ரஹ்மான்

Sunday, 27 August 2023

தமிழ்

 


மகுடேசுவரன் என்பவர் எழுதிய பெயர் வைக்கும் பேறு என்ற கட்டுரை விகடன் தடம் ஜீலை 2016 இதழில் வெளிவந்தது. அவர் அக்கட்டுரையில் சொல்லியுள்ள செய்திகளை சுருக்கமாக பார்க்கலாம்.



 பெயர்ச்சொற்கள் தாம் தமிழுக்குள் கலந்தனவேயன்றி வினைச்சொற்களில்அவ்வளவாக கலப்பேற்படவேயில்லை.

   தமிழ் மக்கள் பிற மொழிகளில் பெயர் வைப்பதற்கு முக்கியமான காரணம், பெயா்களுக்கான பொருளை பற்றி கண்டு கொள்வதில்லை, அதற்கு காரணம் நம் மக்களுக்கு சொல்லறி வேயில்லை.

  மேலும் தற்போது நாள்தோறும் புதிய, புதிய தொழில்நுட்ப சொற்கள் வந்து மக்களிடம் புழங்க ஆரம்பித்து விடுவது.

4   பிற பொருளில் வரும் அன்றாட வழக்காற்று சொற்களும், உரிய வகையில் தமிழாக்கப்படவில்லை.

5.    ஒரு மொழி வாழ்வது அன்றாடப் பயன்பாட்டில் வாய்மொழியாய் வழங்கப்படும் சொற்களில்தான்.


மகுடேசுவரன் தமிழ்படுத்திய சில அன்றாடம் புழங்கும் தொழில் நுட்ப வார்த்தைகள். செல்போன் கைபேசி என்றும், பேஸ்புக் முகநுால் என்றும், கூரியா் துாது அஞ்சல் எனவும் அழகாக புழங்கி வருவதை போல கீழ்கண்டவற்றையும் நாம் பயன்படுத்தி நடைமுறைப்படுத்தலாம்.

சிம் கார்டு – அழைதகடு

செல்பி – தற்படம்

குரூப்பி – தம்படம்

செல்பி ஸ்டிக் – தற்படக்கோல்

இயர்போன் – காதணிபாடி

சார்ஜர் – மின்னேற்றி

பவர் பேங்க் – மின்தேக்கி

புரொஜக்டா் – ஒளிபெருக்கி

வாட்ஸ்அப் – என்வினவி

Monday, 24 July 2023

TAMILNADU

Tamil Nadu is one of the most culturally rich and vibrant states in India. It is home to the oldest surviving classical language in the world, Tamil, and a rich history dating back over 2,000 years. Tamil people are known for their hospitality, their love of music and dance, and their strong sense of community.

Here are some of the greatest things about Tamil Nadu, the Tamil language, and Tamil people:

  • The Tamil language: Tamil is one of the oldest and most sophisticated languages in the world. It has a rich literary tradition, dating back to the 3rd century BC. Tamil is also a very expressive language, and it is often used to express complex emotions and ideas.
  • The Tamil people: Tamil people are known for their hospitality, their love of music and dance, and their strong sense of community. They are also very proud of their heritage, and they often celebrate their culture through festivals and other events.
  • The history of Tamil Nadu: Tamil Nadu has a long and rich history. It was once home to the powerful Chola Empire, which ruled much of South India from the 9th to the 13th centuries. Tamil Nadu was also an important center of learning during the Sangam period, from the 3rd century BC to the 3rd century AD.

Here are some statistics and relevant historical data for comparison:

  • Tamil Nadu is the second-wealthiest state in India, with a GDP of $210 billion.
  • Tamil Nadu has the highest literacy rate in India, at 80.3%.
  • Tamil Nadu is home to over 38,000 temples, making it a popular pilgrimage destination.
  • Tamil Nadu was the site of the first Danish settlement in India, which was established in 1620.
  • Tamil Nadu has a coastline of 1,076 km, which is the second longest coastline in India.

In conclusion, Tamil Nadu is a state with a rich history, a vibrant culture, and a warm and welcoming people. If you are looking for a unique and unforgettable travel experience, Tamil Nadu is the perfect place for you.

Here are some additional things that make Tamil Nadu special:

  • The state is home to some of the most beautiful beaches in India, including Marina Beach in Chennai and Kovalam Beach, ECR
  • Tamil Nadu is also home to a number of UNESCO World Heritage Sites, including the Brihadeeswarar Temple in Thanjavur and the Mahabalipuram Group of Monuments.
  • The state is known for its delicious cuisine, which includes a wide variety of dishes made with rice, lentils, vegetables, and seafood.
  • Tamil Nadu is also a major center for education and research, with a number of universities and research institutes located in the state.