- முருகனுக்கு மூத்தது தமிழ்.
- முருகன் எப்படி தமிழ்க்கடவுள் ஆவான் ?
- முருகன் தமிழுக்கு என்ன சேவை செய்தான் ?
- முருகனின் தாய்தந்தை தாய்மொழி என்ன ?
- வேதத்தைக் கொண்டு விளக்குக.
மொட்டைத்தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு போடுங்கோ பார்க்கலாம் எனக் கேள்வி.
தமிழர்கள் முதலில் முன்னவர்களை உருவமில்லாமல் வழிபட்டனர்.
போரில் இறந்தவர்களுக்கு வீர நடுக்கல் மரியாதை.
லிங்க வழிபாடு அதாவது வெறும் கூழாங்கல், கல்லை வழிபாடு செய்தனர்.
இப்போது ஏதோ ஒரு மொழி பேசினார்களா ? பேபேபே இல்லை. அது தமிழ்.
நாகரீகம் வளர்கிறது. சண்டைகளும் போர்களும் மனித வரலாறு. போர் தொடங்க சில ஆயுதங்கள் கம்பு, கூர்மையான செதுக்கப்பட்ட கல், கம்பு, வில், அம்பு, இரும்பு காலங்கள் வந்த பிறகு, வேல், ஈட்டி போன்றவை.
இப்போது யார்யாரை போராடப் போகிறார்களோ தெரியாது. வெற்றியா, தோல்வி அடைவோமோ தெரியாது.
பயம். தைரியம். இடையே நம்பிக்கை. நம்பிக்கைக்கு தேவை ஏதோ கடவுள். அது சூரியனோ, சந்திரனோ, நெருப்போ, நீரோ அல்லது ஒரு அழகான கொடூர பெண்கடவுளோ, அழகான அல்லது கொடூர ஆணோ கடவுள் நம்பிக்கை மனிதனுக்கு தேவைப்பட்டது.
கொற்றவை வந்தாள்.
அழகுக்கும் வீரத்துக்கும் முருகன் வந்தான். கற்பனைகள் உதித்தன.
கொற்றவையையும் முருகனையும் பாடித் துதித்தனர் தமிழர்கள்.
எந்த மொழியில் ? தமிழில்.
இப்போது ராணிமுத்து காலண்டரில் உள்ள பாலசுப்ரமண்யனையோ, இரண்டு மனைவி ஜெயந்திநாதரையோ, ஆதிசங்கரரின் ஸ்கந்த புராண சுகப்ராமன ரண்யாவையோ, சமஸ்கிரிதப் புராணங்களையோ இங்கு கொண்டு வராதீர்கள்.
இது தமிழ்நாடு.
வடநாட்டு வேதம், சமஸ்கிரித சங்கரர், சிவன், ஸ்கந்த புராண கார்த்திகேயா, சிவன், பார்வதி இவர்களெல்லாம் வெளிநாட்டினர். வேதம் ஆரிய ஈரானிய ஐரோப்பிய சமஸ்கிரிதம். தீ, நீர் வழிபாடு தமிழர் நாகரீகம் அல்ல.
No comments:
Post a Comment