Thursday, 28 December 2023

தமிழகத்தில் பெருகி வரும் பயமுறுத்தும் கலாச்சாரம்


1.வீட்டில் உண்ணாமல் வாரம் ஒரு முறை அல்லது இரு முறை ஹோட்டல் இல் சாப்பிடும் கலாச்சாரம் .இது மிகவும் தீங்கானது .ஒரு 15-20 வருடத்திற்கு முன்னர் இவ்வாறு கிடையாது .குடும்பத்தில் ஒரு புற்று நோய் நோயாளி இப்போது உள்ளார் .காரணம் இதுதான் .வீட்டில் 365 நாள் சாப்பிடுபவனை கஞ்சன் /கருமி /வாழ்க்கையை அனுபவிக்க தெரியாதவன் என்று எகத்தாளம் பேசுவது .ஹோட்டல் இல் பிரியாணி சாப்பிடுவதற்கு வீட்டில் பால்/பழம்/பழைய சோறு சாப்பிட்டு இருக்கலாம் .ஹோட்டலில் வியாபாரம் செய்கிறார்கள் ?அவர்கள் நல்ல உணவு கொடுப்பார்கள் என்று நினைப்பது 100% முட்டாள்தனம் .

2.மது அருந்தும் கலாச்சாரம் .நான் 2005 இல் degree முடிக்கும் போது இல்லாத மது அருந்தும் கலாச்சாரம் 2020 இல் உள்ளது .இப்போது ஒரு பத்தாம் வகுப்பு படிக்கும் பையன் மது அருந்துகிறான் .social drinker என்பது சரிதான் என்று சொல்லும் அளவிற்கு நாகரீகம் உள்ளது .நான் பீர் தான் குடிப்பேன் .hot அடிக்க மாட்டேன் என்று சொல்வது ஒரு பேஷன் ஆகி விட்டது .மது மூலம் அரசிற்கு கிடைக்கும் வருமானம் வருடா வருடம் கூடி கொண்டே உள்ளது .மது ஆலையை முடி விட்டால் அரசு திவால் ஆகி விடும் என்று சொல்லுகிறார்கள் .இது மிக மிக மிக மிக தீங்காகும் .

3.தேர்தல் நேரத்தில் காசு வாங்கி கொண்டு ஓட்டு போடுவது .2005 முன்னர் இந்த கலாச்சாரம் கிடையாது .வேறு எங்கும் இப்படி கிடையாது .

4.தமிழ்நாடு தான் ஆக சிறந்த மாநிலம் என்று வீண் ஜம்பம் பேசி கொள்வது .தமிழ்நாடு இந்திய அளவில் top 5 மாநிலங்களில் ஒன்று தான் .இருந்தாலும் நமக்கும் நிறைய குறைகள் உள்ளது .குறைகளை களைய முனைய வேண்டும் .7.5 கோடி மக்களில் இன்னும் 2.0 கோடி மக்கள் ஏழைகளாக உள்ளார்கள் தமிழ்நாட்டில் .எப்போது இவர்களை மீட்பது ? .பக்கத்துக்கு மலையாளி தனது 90 %ஏழைகளை ஏழ்மையின் பிடியில் இருந்து மீட்டு விட்டான் .

5.உழைப்பிற்கு பெயர் போன தமிழன் சோம்பேறி ஆகி விட்டானோ என தோன்றுகிறது ?பெரு நகரங்களில் எங்கு பார்த்தாலும் ஒரிசா,பீகார் ,வங்காளி தொழிலாளிகள் உள்ளார்கள் . நமது தமிழ்நாட்டில் 2.0 கோடி பேர் இன்னும் ஏழைகளாக இருக்கும் போது எவ்வாறு வட நாடு காரன் இங்கு எவ்வாறு கூலி வேலை செய்கிறான் ?ஏதோ முரணாக உள்ளது .

6.அரசியல்வாதிகள் (ஆளும் கட்சி ,ஆண்ட கட்சி )கமிஷன் மூலம் வந்த கருப்பு பணத்தை வெள்ளை ஆக்குவதற்கு பொறியியல் கல்லூரிகல் நூற்று கணக்கில் ஆரம்பிக்க பட்டு கிராமத்து மாணவர்களின் பெற்றோர்களை மூளை சலவை செய்து கல்வி கடன் பெற வைத்து சரியான வாத்தியார் இல்லாமல் அவனை BE என்ற ஒரு பட்டத்தை கொடுத்து இப்போது வேலை இல்லாமல் திரிகிறான் .நான் 2005 BE degree முடித்து வேலைக்கு செல்லும் பொது ரூபாய் 8000 சம்பளம் .இப்போது அதே BE civil முடித்து வரும் இளைஞர்களின் சம்பளம் 5000 ரூபாய் வரை கொடுக்க படுகிறது .பரிதாபமான நிலை .கருப்பு பணத்தை வெள்ளை ஆக தெரிந்த அரசியல்வாதிகளுக்கு ஏன் தொழிற்பேட்டைகளை,வேலைகளை உருவாக்க தெரிவதில்லை ?இதன் விளைவு மிகவும் மோசம் ஆகும் .இதற்கு எதற்கு அவன் BE படிக்க வேண்டும் ?BA,BCom,Bsc என ஏதேனும் படிக்கலாமே ?அரசு தான் இது போன்ற விஷயங்களுக்கு தீர்வு கொடுக்க முடியும் .

7.அதல பாதாளத்திற்கு செல்லும் நீர் மட்டம் .மக்கள் தொகை தமிழ்நாட்டில் இப்போது 7.5 கோடி .ஒரு தலைமுறை முன்னர் கூட்டு குடும்பம் என்ற முறை மாறி இப்போது ஒவ்வொரு வாரிசும் தனி வீடு கட்ட வேண்டும் என்ற ஒரு சமூக சூழல் உள்ளது .அரசு கொடுக்கும் தண்ணீர் போதாமையால் முக்கால் வாசி ஜனங்கள் bore-well போடுகிறார்கள் .ஒரு 30 வருடம் முன்னால் 50 அடி-1௦௦ அடி குள் தண்ணீர் கிடைத்தது .இப்போது 500 அடி -1000 அடிக்கு சென்று விட்டது .அரசு இதற்கு எந்த நடவடிக்கை எடுத்தது என்று தெரியவில்லை ?எந்த ஒரு மேலை /வளர்ந்த நாட்டிலும் இப்படி bore well போட்டு தண்ணீர் உறிஞ்சு எடுப்பது கிடையாது .தண்ணீர் என்பது ஒரு இயற்கையின் கொடை.இவ்வாறு bore well போட்டு உறிஞ்சி எடுத்தால் தமிழ்நாடு 2050 இல் பாலைவனம் ஆவது உறுதி .

ஆந்திராவில் ,தெலங்கானாவில் கோதாவரி ,கிருஷ்ணா நதி நீரை வைத்து polavaram ,kaaleshwaram ப்ராஜெக்ட் செய்து கொண்டு இருக்கிறார்கள் . இனி வரும் அரசுகள் இனிமேலும் தாமதிக்காமல் நமது பங்காளி கர்நாடக காரனோடு மல்லுக்கு நிற்காமல் கடலில் வீணாகும் 500 TMC கோதாவரி தண்ணீரை இங்கே திருநெல்வேலி வரை கொண்டு வர வேண்டும் .கண்டிப்பாக இது சாத்தியம்.

No comments:

Post a Comment