Wednesday 27 December 2023

உளவியல் உண்மைகள்


  • கொட்டாவி விடுவதால் மூளைக்கு அதிகம் பிராணவாயு கிடைக்குமென்பது உண்மையல்ல. அதனால், மூளை குளிர்ச்சி அடைவதாக தற்போது கண்டறியப் பட்டுள்ளது.
  • பெண்களிடம் அதிகமாக உள்ள ஹார்மோன் ஆன ஈஸ்ட்ரோஜென் நினைவுத்திறனை அதிகரிக்க வல்லது.
  • நீல நிறம் மனதை சாந்தப்படுத்தும். நீல நிற அறையில் பணிபுரிபவர்கள் அதிக படைப்பாற்றலுடன் திகழ்வதாக கண்டறியப் பட்டுள்ளது.
  • ஆண்களை விட பெண்கள் நகைச்சுவை உணர்வு மிக்கவர்கள். (தமிழ் குவாராவிலுள்ள பெண்களே அதற்கு எடுத்துக்காட்டு. அதற்கு நானும் சாட்சி! ) ஆண் நிறைய நகைச்சுவை துணுக்குகளை சொல்வான். ஆனால், அது மற்றவர்கள் மனம் புண்படுமா என்பதை கவனிப்பதில்லை.
  • பெரும் குழுவாக இருப்பவர்கள் தவறான, உணர்ச்சி பூர்வமான முடிவெடுப்பர். (இந்தியாவே இதற்கு சாட்சி ). சிறு குழுவினர் சிறந்த முடிவுகளை எடுப்பர்.
  • ஏதாவது மோசமானது நிகழும்போது, மக்கள் சூழ்நிலையை காரணம் கூறுவதை விட அடுத்தவரை குறை கூறுவதே அதிகம்.
  • 9% ஆண்களும் 0.5% பெண்களும் நிறக்குருடு உடையவர்கள். (உங்கள் மனைவியின் உடை நிறத்தை பற்றி இனி பேசுவீங்க? )
  • மனிதரின் மூளையிலுள்ள காணுணர் பகுதியிலுள்ள சில உயிரலகுகள் கிடைமட்ட தகவல்களையும், மற்றவை நெடுக்கு தகவல்களையும் மட்டுமே உணர்கின்றன. (ஹூபேல் & வெய்செல், 1959)
  • மனிதரின் செயலாற்றும் நினைவு ஒரு நேரத்தில் 7 + அல்லது - 2 தகவல்களை மட்டுமே கொள்ள முடியும்.
  • Allodoxophobia - கருத்துகள் சொல்வது பற்றிய பயம்.

No comments:

Post a Comment