Saturday 28 October 2023

சொட்டை

 


மனிதனின் விந்துக்கும் தலை முடிக்கும் முடி வளருவதுக்கும் (சொட்டை) தொடர்புண்டா?

நிச்சயமாக. தலைமுடி வளர்ச்சிக்கும் விந்தணுவிற்கும் பெரும் தொடர்பு உள்ளது.

அதில் முக்கியமான ஒன்று டெஸ்டோஸ்டிரோன் எனப்படும் ஆண்மைத் தன்மை. இது தான் தலைமுடி, உடல் தசை வளர்ச்சி மற்றும் விந்தணுவிற்கும் பொதுவான ஒன்றுகும் பொதுவான ஒன்று.

ஆண்குறி விறைப்பு, விந்து எண்ணிக்கை, அதன் தரம் என அனைத்திற்கும் டெஸ்டோஸ்டிரோன் முக்கிய பங்கு வகிக்கிறது. இது நமது உடலில் அதிக அளவில் இருந்தால் தான் ஆண்மை பெருகும் மேற்சொன்னவை முழுப் பலன் பெறும்.

ஆனால் இதன் மறுபக்கம், டெஸ்டோஸ்டிரோன் அதிகமானால் நமது தலைமுடி வேருக்கு அடியில் DHT என உருமாற்றம் ஆகி வேர்களை செயலிழக்கச் செய்யும். முடியுதிர்வு அதிகமாகும். ஆனால் உச்சந்தலையில் மட்டும் கொட்டுகிறதே எனக் கேட்டால், காது மற்றும் கழுத்துப் பகுதி எல்லாம் DHT உருமாற்றம் ஆக போதிய வலு இருக்காது. அதனால் தான் முடியுதிர்ந்து மொத்தமாக மொட்டையாகாமல் சொட்டை விழுகுறது.

அதிகளவு சுயஇன்பம் செய்தாலும் விந்தணு மூலம் Zinc சத்து பெருமளவு வெளியேறும். இந்த Zinc தலையில் முடி வளர முக்கிய பங்காற்றுகிறது. ஆக இதனாலும் சொட்டை விழ வாய்ப்பு உள்ளது.

No comments:

Post a Comment