உழைப்பில் உள்ளது சந்தோஷம்
ஒரு ஜப்பானிய ஜென்குரு முதுமையடைந்த
பின்னரும் தோட்டத்தில் வேலை செய்ய வந்து விடுவார் . எவ்வளவு
சொல்லியும் அவர் கேட்கவில்லையே என்று வருந்திய சீடர்கள் மண்வெட்டி,
கடப்பாரை ஆகியவற்றை ஒளித்து வைத்து விட்டார்கள் .
காலை தோட்ட
வேலைக்கு வந்த குரு ஏமாற்றம் அடைந்தார் . மடாலயம் வந்த அவர் அன்று
முழுவதும் உண்ணவே இல்லை . சீடர்கள் வற்புறுத்தியும் உண்ண
மறுத்துவிட்டார் . உழைக்காதவனுக்கு உண்ண உரிமை இல்லை என்று
உறுதியாகச் சொல்லிவிட்டார் .
வேறு வழியின்றி மறுநாள் மண்வெட்டியும்
கடப்பாரையும் அவர் வசம் தரப்பட்டது !.
No comments:
Post a Comment