பதகளிப்பு
( ANXIETY )
சிக்கல்கள் நிறைந்த வாழ்வினால் மனம் சிதறுண்டு போவதால் மனிதன் உளநோயாளியாகிறான்
மனப்பதகளிப்பை சுயபரிசோதனை மூலம் கண்டறிந்து
மருத்துவ ஆலோசனை பெறுவதே சிறந்தது
பதகளிப்பு என்பது மனிதனது ஆரோக்கியத்துக்கு தடையாக அமைகிறது. அதனால் ஒவ்வொரு தனி மனிதனும் தமக்கும் அவ்வாறான சிக்கல்கள் உள்ளனவா என்று சுய மதிப்பீடு ஒன்றை செய்து அதனை தீர்த்துக் கொள்ளக்கூடிய வழிவகைகளை செய்தல் சிறந்தது. நீங்கள் பதகளிப்பு நோய்க்கு உள்ளாகி உள்Zர்களா, என்று அறிந்து கொள்வதற்கு கீழ் வரும் வினாக்களுக்கு ஆம், அல்லது இல்லை என்று பதில் காணவும்.
1. நீங்கள் இரவில் தூக்கமின்மையால் அவதிப்படுகிaர்களா?
2. அதிகமான எதிர்மறை எண்ணங்களால் உங்கள் உள்ளம் தடுமாறுகிறதா?
3. காரணமின்றி கோபப்படுவதும் சினம் கொள்வதுமாக இருக்கிaர்களா?
4. ஒரு வேலையிலோ அல்லது கல்வி நடவடிக்கைகளிலோ உள்ளத்தை ஒருமுகப்படுத்த முடியாமல் உள்Zர்களா?
5. அதிகமாக மறதியால் அல்லல் படுகிaர்களா?
6. இதயத் துடிப்பின் வேகம் அதிகரித்தும் கனதியுடன் இருப்பதுமாக உணர்கிaர்களா?
7. அதிகமாக உடல் உபாதைகளாலும் நெஞ்சு வலியினாலும் அவதியுறுகிaர்களா?
8. பாலியல் செயற்பாடுகளில் எதிர்மறை எண்ணங்கள் காணப்படுகின்றனவா?
9. முறையான பாலியல் செயற்பாட்டில் வினைத்திறனுடன் செயற்பட முடியாமல் இருப்பதாக உணர்கிaர்களா?
10. உள்ளங்கால்கள் மற்றும் உள்ளங்கைகளில் அதிக வியர்வை காணப்படுகிறதா?
மேற்கூறப்பட்ட வினாக்களுக்கு ஆம் எனப் பதில் அளிப்பவர்களாக இருப்பின் நீங்கள் பதகளிப்புக்கு உட்பட்டவராக இருக்கலாம். எனவே அதற்குறிய மருத்துவ மற்றும் உளவளத்துணை சிகிச்சைகளைப் பெற்றுக்கொள்வதே சிறந்தது.

No comments:
Post a Comment