அருகிலிருப்பவர் துன்பச் சூழலில் இருக்கும்போது, அவரின்
துயரைத் துடைக்க எடுக்கும் முயற்சியே உண்மையான வழிபாடு.
சகல உயிர்களிடத்தும் இறைவனைக் காணுங்கள் என்றே எல்லா
மதங்களும் போதிக்கின்றன.
புனித நூலான பகவத் கீதையின் பெருமையை நாம் எல்லோரும்
அறிவோம். பகவத் கீதை போதிப்பது என்ன? கீதை பக்தியை
போதிக்கிறது என்பார்கள் சிலர். அது கர்ம யோகத்தை போதிக்கும்
நூல் என்பது சிலரின் கருத்தாக இருக்கும். பக்தி, ஞானம், கர்ம
மார்க்கம் ஆகிய அனைத்தும் அதில் உண்டு என்பார்கள்
ஆன்றோர்கள்.
`கீதை போதிப்பது என்ன?' இந்தக் கேள்விக்குத் துல்லியமான பதிலை
அறிய விரும்பினார் ஒருவர். ஒருநாள் சாது ஒருவரை தரிசித்தவர்,
அவரிடம் தன்னுடைய கேள்வியைக் கேட்டார்.
அந்த அன்பரிடம் சாது கேட்டார், ``கீதையின் முதல் சுலோக வரி
என்ன தெரியுமா?''
``நீங்கதான் சொல்லணும்.''
``தர்ம க்ஷேத்ரே குரு க்ஷேத்ரே'' என்ற சாது,
``கீதையின் கடைசி வரியையும் நானே சொல்கிறேன்...
`த்ருவா நீதிர் மதிர் மம' என்று முடியும். நான் சொன்ன கடைசி
சுலோகத்தின் கடைசி வார்த்தையையும் முதல் சுலோகத்தின் முதல்
வார்த்தையையும் இணைத்தால் கிடைப்பது என்ன?''
அன்பர் சொன்னார், ``மம தர்ம.''
``இதற்கு என்ன அர்த்தம் தெரியுமா?''
``நீங்கதான் சொல்லணும் சாமி!''
``உனது உண்மையான தர்மம் என்று பொருள். ஆக, மனிதனுக்கான
வாழ்க்கை தர்மத்தை - அறத்தை கீதை போதிக்கிறது'' என்றார் சாது.
ஆம், மனிதன் மனிதனாக வாழவேண்டும் என்பதே ஞானநூல்களின்
வழிகாட்டுதலாக இருக்கிறது.
அறம் சார்ந்த வாழ்க்கை போதும் எனில்... ஆலய வழிபாடுகள்,
பண்டிகை விழாக்கள், கோயில் முதலான வழிபாட்டுக் கூடங்கள் எதுவும்
தேவையில்லையா?
இப்படியான கேள்விகளுக்குப் பெரியவர்கள் எளிமையான
பல விளக்கங்களைத் தந்திருக்கிறார்கள். ஒரு கட்டடம் கட்டுவதற்கு
சாரம் அமைக்கிறோம். கட்டட வேலை பூர்த்தியான பிறகு அந்தச் சாரம்
போன்றவற்றைக் களைந்துவிடுகிறோம் அல்லவா? அப்படித்தான்...
நமக்கான தர்மம் - அறம் இதுதான் என்ற மனப்பக்குவத்தை வளரச்
செய்வதற்கு வழிபாட்டுக் கூடங்கள், சமயச் சடங்குகள், விழாக்கள்,
விரதங்கள் போன்றவை உதவி செய்யும்.
`இவையாவும் பக்தியின் படிநிலைகள். நாம் ஒவ்வொன்றாகக் கடந்து
இறைவனின் அணுக்கத்தை அடைய முயல வேண்டும்.முதல்
படியிலேயே நின்றுவிடக்கூடாது' என்று அறிவுறுத்துவார்கள்
No comments:
Post a Comment