- மனசாட்சிக்கு விரோதமாக இல்லாது, நேர்மையான மற்றும் ஒழுக்கம் நிறைந்த வாழ்க்கை முறை உங்களுக்கு மன நிம்மதியைத் தரும்
- பிறருக்கு — சரியான நேரத்தில் — சரியான முறையில் — எந்தவிதமான எதிர்பார்ப்பும் இல்லாமல் — செய்யப்படுகின்ற (மனிதநேய) உதவிகள், உங்களின் வாழ்க்கைக்குப் புண்ணியம் சேர்க்கும்
- தானம் / தர்ம காரியங்கள் / ஏழை மாணவர்களுக்குக் கல்வியறிவு பெற செய்யப்படுகின்ற (ஆத்மார்த்தமான) சிறிய உதவிகள், உங்களின் வாழ்க்கையை மேம்படுத்தும்
- பெரியோர்கள் — குறிப்பாக பெற்றவர்கள் — மனம் நோகாத வகையில் — அவர்களுக்குச் செய்ய வேண்டிய தங்களின் கடமைகள் மற்றும் அவர்களின் அந்திம காலத்தில் நீங்கள் செய்யும் பணிவிடைகள் காரணமாக, 'பெற்றவர்களின் ஆசி' எப்போதும் உங்களுக்கு கிடைக்கும் படி செய்யும்.
- இறைபக்தி கொண்டு, நம் வீட்டு முன்னோர்கள் / பெரியவர்கள் தலைமுறை தலைமுறையாகத் தொடர்ந்து வழிபட்டு வந்த குலதெய்வத்திற்கு, செய்ய வேண்டிய வழிபாட்டு முறைகளை, நீங்கள் தொடர்ந்து செய்து வந்தீர்களேயானால், அது உங்கள் வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக ஆக்கும்.
No comments:
Post a Comment