எண் அரும் நலத்தினாள் |
இனையள் நின்றுழி, |
கண்ணொடு கண் இணை |
கவ்வி, ஒன்றை ஒன்று |
உண்ணவும், நிலை பெறாது |
உணர்வும் ஒன்றிட, |
அண்ணலும் நோக்கினான்! அவளும் நோக்கினாள். |
அழகின் எல்லை இது தான் என்று நினைப்பதற்கும் அரிய அழகுடைய சீதை, நின்ற பொழுது, ஒருவர் கண்களோடு, மற்றொருவர் கண்கள் கவர்ந்துப் பற்றிக் கொண்டு, ஒன்றை ஒன்று கவர்ந்து உண்ணவும்,இருவரது அறிவும், நிலைப் பெற்று இருக்காமல் ஒன்றை ஒன்று கூடி ஒன்று படவும், ராமனும், சீதையைப் பார்த்தான்.சீதையும், ராமனைப் பார்த்தாள்.
No comments:
Post a Comment