1)வேலை/தொழில்.
- பிடித்த/படித்த/கிடைத்த/ எதிர்காலத்தில் வாய்ப்பு அதிகமுள்ள என்று எதுவானாலும் வேலையைப் பற்றி எடுக்கும் முடிவுகளே வாழ்நாள் இறுதிவரை தொடர்ந்து கொண்டே இருக்கிறது.
- நாம் செய்யும் வேலை தான் நம்முடைய அடையாளம். எழுபது எண்பது வருடங்களுக்கு முந்தைய குடும்ப பிண்ணனி/பாரம்பரிய கதையெல்லாம் இப்போது எடுபடாது.
- முன்பெல்லாம் திருமணத்திற்குப் பிறகு பெண்கள் தான் வேலை விட்டு குடும்பத் தலைவியாக பொறுப்பேற்றார். இப்போது சில பெண்கள் விவரமாக கணவரின் வேலையை விடச் சொல்லி தன் நிலையை உறுதி படுத்தி உயர்த்திக் கொள்கிறார்கள். ஆண்கள் தான் எச்சரிக்கையாக தன் வேலையை கெட்டியாக பிடித்துக் கொள்ள வேண்டும்.
2)திருமணம்.
- ஒருவர் படித்திருந்தாலும், நல்ல வேலை அல்லது தொழிலில் இருந்தாலும் மூன்று தலைமுறைக்கு சொத்து இருந்தாலும் வாழ்க்கையில் மகிழ்ச்சியை துணையின் பங்களிப்பே நிர்ணயம் செய்யும்.
- ஒரு மணிநேர ரயில் பயணத்திலேயே அருகில் அமர்ந்து இருப்பவர் இடைஞ்சல் கொடுந்தால் அடுத்த ஸ்டேஷனில் இறங்கி விடலாமா என்று தோன்றும்; வாழ்நாள் முழுவதும் வரக்கூடிய துணை மனதுக்கு இணக்கமாக இருக்க வேண்டும்.:))
3) நிதி மேலாண்மை.
- நான்கு இலக்கமோ எட்டு இலக்கமோ... எவ்வளவு வருமானமானாலும் நிர்வாகிப்பதற்காக போடும் திட்டங்களும் எடுக்கும் முடிவுகளும் வாழ்கையை வளமாக்கும்.
4)உறவு/நட்பு.
- வேலை/கல்வி நிமித்தமாக யாரும் அவரவர் சொந்த ஊரிலேயே இப்போது வாழ்வதில்லை. தம்முடைய இயல்புக்கு எண்ணங்களுக்கு ஏற்ற உறவுகளுடன் தொடர்பும், நட்பை தேடிக்கொள்வதும் மன நிம்மதிக்கு வழி. நெட்வொர்க் தான் நெட்வொர்த்.:))
5)குழந்தைகள் படிப்பு, வேலை, திருமணம்.
- போட்டி நிறைந்த காலகட்டத்தில் படிக்க வேண்டிய துறை, வேலை, திருமணம் எல்லாவற்றையும் தானே முடிவு செய்யாமல், முழு பொறுப்பையும் குழந்தைகளின் விருப்பத்துக்கும் விட்டு விடாமல் கலந்து பேசி எடுக்கும் முடிவு.👍
6) பொழுதுபோக்கு.
- முப்பது ஆண்டுகளுக்கு முன்பு நாம் வசிக்கும் இடத்திற்கு தகுந்த அல்லது கிடைத்த பொழுதுபோக்கே போதுமானதாக இருந்தது. சுருங்கிவிட்ட உலகில் தேர்ந்தெடுக்க நிறைய வாய்ப்புகள் வசதிகள் இருப்பதால் கவனம் தேவை.
- கோராவிற்கு அறிவை பகிரும் தளம் என்று வந்துவிட்டு ஆதரவு வாக்குக்காக சண்டை போட்டுக் கொண்டவர்களே ஏராளம். சமூக வலைதளம் என்றான பிறகு பொழுதுபோக்கு இல்லாமல் வேற என்னவாம்.:))
7)உணவு பழக்கம்.
- வீட்டில் நான்கு பேர் இருந்தால் நான்கு வித/சுவை சமையல்; அவரவருக்கு பிடித்த/ஒத்துக் கொள்ளக்கூடிய என்று ஏகப்பட்ட காரணங்கள்.
- என் தட்டில் என்ன பரிமாறப்பட வேண்டும் என்பதை நான் தான் முடிவு செய்ய/சமைக்க வேண்டும்.
- பிறருக்காக சாப்பிட்டால் மருத்துவமனைக்கு துணைக்கு வேண்டுமானால் வரலாம்.
8)உடை.
- வாழும் இடத்திற்கு, கலாச்சாரத்திற்கு, வேலை பார்க்கும் இடத்திற்கு என்று பலவாறு இருந்தாலும்; தன் சௌகரியத்தையும் கணக்கில் கொண்டு முடிவு செய்ய வேண்டும்.
9)சமுதாய பங்களிப்பு.
- தேர்தல் நாளன்று ஓட்டு போடுவது. வாழ்ந்தவர் கோடி மறைபவர் கோடி மக்கள் மனதில் நிற்பவராக.:))
10)முடிவுகளை எப்படி எடுப்பது என்பதை முதலில் முடிவு செய்ய வேண்டும்.
- ஒரு முடிவு செஞ்சுட்டா அப்புறம் நானே கேட்க மாட்டேன் -
- மச்சான் நீ சொல்லு.... டேய் நீ சொல்லு.... என்று எல்லோரிடமும் கேட்டு, சொதப்பி, கடைசியில் உன்னாலதான்.... என்று யார் மேலயாவது பழியை தூக்கி போடுவது -
- தன்னுடைய நலம் விரும்பிகள் யார் என்று அறிந்து அவர்களிடம் ஆலோசனைகளையும் கேட்டு முடிவு செய்வது -
No comments:
Post a Comment