ஜென் வாழ்க்கையின் நடைமுறைகள
தலையில், மூளைக்கு கீழே வேகஸ் நேர்வ் என்பது தொடங்குகிறது. இந்த வேகஸ் நேர்வ் என்பது, பேரா சிம்பதெடிக் நேர்வஸ் சிஸ்டத்தின் ஒரு பகுதி.
சுவாசத்திற்கும் இந்த வேகஸ்கும் தொடர்பு உள்ளது. நீங்கள் சீரான சுவாசத்தை மேற்கொண்டாலும் அல்லது ஒரு விடயம் செய்யும்பொழுது அதில் மாத்திரமே கவனமாக செய்தாலோ உங்கள் மன அழுத்தம் குறையும் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
ஜென் வாழ்க்கை முறை இதைத்தான் mindfulness" என்று போதிக்கிறது.
இது ஒழுக்கமான சுவாசத்தில் தொடங்குகிறது.
The practice of Zen is forgetting the self in the act of uniting with something."
இது தான் ஜென் அடிப்படை தத்துவம்.
நீங்கள் எங்கிருந்தாலும், மனதளவில் அங்கேயே இருங்கள்" என்பது.
உங்களிடம் 99 வகை பலவீனங்கள் இருக்கலாம், ஆனால் உங்களிடம் உள்ள ஒரே ஒரு வலிமையில் கவனம் செலுத்துங்கள். ஒரு நாள் அது அந்த 99 பலவீனங்களை இந்த ஒரு வலிமை ஆதிக்கம் செலுத்தும்
மீண்டும் மீண்டும் சொல்லுங்கள்…என் எல்லா தோல்விகளும், இறுதியில், எனது வெற்றியில் சேரும் என்று.
அனைவரிடத்திலும் ஆர்வமாக இருங்கள். ( இதை நான் தற்போது முயற்சிக்கிறேன்.)
"ஒவ்வொரு உயிரினமும் உலகியல் உண்மையை தேடுகின்றன, ஆனால் சிறிய பயத்தால் நீங்களே உங்களைத் தடுத்து கொள்கிறீர்கள்.
"உங்களுக்கு ஏற்கனவே தெரியாத எந்த ஆன்மீக உண்மையையும் என்னால் சொல்ல முடியாது. நான் என்ன செய்ய முடியும் என்பது நீங்கள் மறந்துவிட்டதை உங்களுக்கு நினைவூட்டுவதை தவிர.
"நான் நடனமாட வேண்டும் என்று நினைக்கும் போது, நான் நடனமாடுகிறேன். வேறு யாராவது நடனமாடுகிறார்களா அல்லது எல்லோரும் என்னைப் பார்த்து சிரிக்கிறார்களா என்று எனக்கு கவலையில்லை. நான் நடனமாடுகிறேன் அவ்வளவு தான்..
சேற்று நீரை தனியாக விட்டுவிட்டால் போதும்…தெளிந்து விடும்.
"மிகப்பெரிய முயற்சி என்பது முடிவுகளை நோக்கியது மட்டும் இல்லை."
வாழ்க்கையின் பொருள் உயிருடன் இருப்பது. இது மிகவும் தெளிவானது மற்றும் மிகவும் வெளிப்படையானது மற்றும் மிகவும் எளிமையானது என்றாலும், எல்லோரும் தங்களைத் தாண்டி ஏதாவது சாதிக்க வேண்டியது அவசியம் என்று ஒரு பெரிய பீதியில் ஓடுகிறார்கள். "
மகிழ்ச்சியைத் தேடுவது என்பது மகிழ்ச்சியின்மையின் முக்கிய காரணிகளில் ஒன்றாகும். "
"முழு நிலவும் முழு வானமும், ஒரு சிறிய புல் மீது உள்ள ஒரு பனித்துளியில் பிரதிபலிக்கின்றன."
No comments:
Post a Comment