Sunday, 19 October 2025

திருமணம் பற்றிய உண்மைகள்

 

திருமணம் பற்றிய மிகவும் மோசமான உண்மைகள் என்னென்ன?

11ஆம் தேதி செம மழை, நான் பாட்டுக்கு சிவனேன்னு என் வேலைய பாத்துக்கிட்டு இருந்தேன். அன்னைக்கு கிளைமேட் வேற செமையா இருந்துச்சு. எங்க வீட்ல எல்லாம் பகல் பொழுதுலேயே பயங்கரமா தூங்கிகிட்டு இருந்தாங்க.

கொஞ்ச நேரம் கழிச்சு எங்க அப்பா என் ரூமுக்கு வந்தாரு. ஆஹா இவரு வந்தாலே என்னமோ கேட்கப் போறார்னு அர்த்தமாச்சேன்னு மனசுக்குள்ள நெனச்சுகிட்டே அமைதியா இருந்தேன்.

நெனச்சது போலவே "என்னப்பா இப்போல்லாம் வீடியோவே சரியா பண்றது இல்ல" என்றார்.

நான்- இல்ல, இப்போ இன்னொரு stream-ல கவனம் செலுத்திகிட்டு இருக்கேன். யூடியூப்ல எப்ப வேணும்னாலும் வீடியோ போடலாம் அது எங்கேயும் போயிடாது. அதுமட்டுமில்லாம YouTube-அ விட இங்க எங்கேஜிமெண்ட் கொஞ்சம் நல்லா இருக்கு, Competition-னும் கம்மி. அதனால இதையும் கொஞ்சம் செட் பண்ணிகிட்டா எதிர்காலத்துக்கு யூஸ்ஃபுல்லா இருக்கும்.

அவர்- எவ்ளோ காசு வருது?

நான்- இப்போதான் ஏதோ கொஞ்சம் வருது. ஒண்ணுமே இல்லாததுக்கு இது எவ்வளவோ பரவாயில்ல.

அவர்- இதையே தான் இனி பண்ண போறியா? இல்ல வேலைக்கு போற ஐடியா ஏதாச்சும் இருக்கா?

நான்- இதுவே நல்லா தானே இருக்கு. நீங்களே பார்க்குறீங்கல்ல இதோட வளர்ச்சிய, அப்புறம் என்ன? இது எல்லாத்தையும் ஓரளவுக்கு செட் பண்ணிட்டு, வேலைக்குப் போக நேரம் இருந்தா போறேன். உங்களுக்கு காசு தானே சம்பாதிக்கணும். அதான் சம்பாதிக்கிறேனே, அப்ரம் என்ன பிரச்சன?

அவர்- இல்ல, நாள பின்ன பொண்ணு கேட்டு போனா, வீட்லேயே இருந்து பையன் சம்பாதிக்கிறான்னு சொன்னா-லாம் எவனும் பொண்ணு தர மாட்டான். வேலைக்குன்னு போகணும் அதான் சொன்னேன்.

( எனக்கு கண்ணம் துடிக்குது, கண்ணு சிவக்குது, கரண்ட் பாக்ஸ் வெடிக்குது)

நான் தெளிவா இருக்கேன். என்ன போட்டு கொழப்பாதீங்க சரியா? எனக்கு கல்யாணமே ஆகலனாலும் பரவாயில்லை. இந்த மாதிரி ஏதாச்சும் சொல்லி என் வேலைய கெடுக்காதீங்க, போய் தூங்குங்க.


ஒரு பொண்ணுக்கு கல்யாணம் ஆகணும்னா,

பொண்ணு கொஞ்சம் அழகா இருக்கணும்.

இல்ல சொத்து நிறைய இருக்கணும் (வரதட்சனை)

படிச்சிருக்கணும் (Optional).

வேலைக்கு போகணும் (Optional).

ஆனா ஒரு பையனுக்கு கல்யாணம் ஆகணும்னா,

படிச்சிருக்கணும். (அதுவும் குறிப்பா இந்த படிப்புதான் படிச்சிருக்கணும்).

வேலைக்கு போய் சம்பாதிக்கணும். (Mandatory).

வேலை நிரந்தரமா இருக்கணும்.

இத்தனை ஆயிரத்துக்கு மேல சம்பாதிக்கணும். (அதுவும் குறிப்பா இந்த மாதிரி தான் சம்பாதிக்கணும்)

சொந்த வீடு வேணும் (ஓட்டு வீடுலாம் வேணா, தளம் போட்ட வீடு தான் வேணும்)

சொத்து நிறைய இருக்கணும். (நிறைய பணம் சம்பாதிச்சா இது Optional).

சொந்த நிலம் இருக்கணும் (Optional).

சிலர் Western toilet இல்லனு சொல்லிலாம் பையன Reject பண்ணி இருக்குறத நான் பார்த்திருக்கேன்😅😅😅…


இங்க எல்லாம் பொண்ணுங்க சொகுசா இருக்கணும்னுதான் நினைக்கிறாங்களே தவிர, பசங்க எக்கேடு கெட்டாலும் யாருக்கும் கவலை இல்ல.

  1. இப்ப சொல்லுங்க, யாருக்கு இங்க வரதட்சனை கொடுமை நடக்குதுன்னு? 

என்னங்க சார் உங்க சட்டம்?

No comments:

Post a Comment