Saturday, 19 September 2026

சிறைக்கைதிகளுக்கு மனவளக்கலைப் பயிற்சிகள்

கடந்த 10ம் தேதி திருமண நாளையொட்டி வெகு சிலரே வருத்தத்துடன் எனக்கு தைரியம் அளித்து மாலா உங்களுடன்தான் இருக்கிறாள் என்று கூறி வாழ்த்தினார்கள். எங்களால் நலமடைந்த ஒரு தம்பதியினர் ஆண்டுதோறும் எங்கள் திருமண நாளன்று எங்கள் பெயரில் நிதி அளிப்பார்கள்.

எப்படி celebrate பண்ணினீர்கள் என்று கேட்டவர்களும் உண்டு.

மாலாவைக் காப்பாற்றமுடியாத குற்ற உணர்வு தினமும் என்னை வதைக்கும். கண்ணீர் விட்டுக்கொண்டு குற்றவாளியாக நிற்கும் எனக்கு விமோசனம் கிடையாதா என்று ஏங்கிய நிலையில் ஓர் எண்ணம் தோன்றியது. திருச்சி மத்திய சிறையில் உள்ள கைதிகளுக்கு மனவளக்கலை பயிற்சிகள் கொடுத்து அவர்களுக்கு நல்வாழ்வு அளிக்க வேண்டும் என்ற அந்த எண்ணம் வலுப்பெற்று 15ம் தேதி திருச்சி மத்திய சிறைச்சாலைக்குச் சென்று Superindent of Police ( Prison ) அவர்களை சந்தித்து எனது திட்டத்தினைக் கூறினேன். SP அவர்கள் ஒரு பெண்மணி. 2300 ஆண் கைதிகளை வெற்றிகரமாக சமாளித்துக் கொண்டிருப்பவர். காந்தி ஜெயந்தியன்றே துவங்கிவிடலாம் என விருப்பப்பட்டார். தமிழ்நாடு முழுதும் உள்ள சிறைச்சாலைகளுக்கு இப்பயிற்சி அவசியம் தேவை என்றும் கூறினார்.

அதற்கு நான் எங்கள் தலைவரிடம் பேசி அனுமதி பெற்று இம்மாத இறுதிக்குள் திட்ட அட்டவணை சமர்ப்பிக்கின்றேன் எனக் கூறி 17ம் தேதி அவர்களை அறிவுத்திருக்கோயிலுக்கு வருகை தர அழைத்திருந்தேன்.

இந்த செய்தியினை ஆழியாறில் உள்ள கிராமீய சேவைத் திட்ட இயக்குனர் அவர்களுக்கும் தெரிவித்து 17ம் தேதி அவரையும் அழைத்தேன்.

என் அழைப்பினை ஏற்று SP அவர்கள் அறிவுத்திருக்கோயிலுக்கு வந்திருந்தார்கள். ஆழியாரிலிருந்து இயக்குனரும் வந்துவிட்டார். அறிவுத்திருக்கோயிலின் மற்ற நிர்வாகிகள் அனைவரும் கலந்துகொண்ட இக்கூட்டத்தில் நல்ல முடிவுகள் எடுக்கப்பட்டன.வரும் 27ம் தேதி ஆழியாறில் நடைபெற உள்ள பொதுக்குழு கூட்டத்தில் சிறைக்கைதிகளுக்கான பயிற்சிகள் பற்றி முடிவுகள் எடுக்கப்பட்டு வரும் நவம்பருக்குள் பயிற்சிகள் துவங்கப்படும் என நம்புகின்றேன். இதற்கான செலவுகளுக்கு மாலா பெயரில் ரூ 2 லட்சம் முதல் தவணையாக கொடுத்துள்ளேன்.

இங்குள்ள சிறைச்சாலைப் பற்றி இன்னொரு பதிவில் தெரிவிக்கின்றேன்.


VSP Director & SP ( Prison ) Ms Rukmani Priyadharshini




I am handing over a cheque ( Rs 2 Lakhs ) to VSP Director

 

No comments:

Post a Comment