மகாபாரத யுத்தம் முன்னதாக அர்ஜுனன்கு கீதா உபதேசம் கிருஷ்ணர் வழங்கினார், இது எல்லார்க்கும் தெரிந்ததே.
உபதேசத்திற்கு பிறகு கொஞ்ச நாட்கள் கழித்து அர்ஜுனன் மனதில் ஒரு குழப்பம். கிருஷ்ணர் ஏன் கீதா உபதேசத்தையும், விஸ்வரூப தரிசனத்தையும் நமக்கு மட்டும் ஏன் வழங்கினார் ?
அண்ணனான தர்மரையும், பீமரையும்,தம்பிகளையும் தவிர்த்து விட்டு நமக்கு மட்டும் ஏன் விஸ்வரூபம் தரிசனம் வழங்கினார் என்று.
மனதில் இருந்த குழப்பத்தை கிருஷ்ணரிடம் கேட்டான் அர்ஜுனன். கிருஷ்ணர் அதற்கு பதில் அளித்தார், அர்ஜூனா உன் மூத்த அண்ணன் ஆன தர்மர்க்கு பகுத்து அறியும் சிந்தனை என்பது குறைவே. தர்மத்தை காக்க உன் அண்ணன் என்ன வேண்டுமானாலும் செய்வான். தர்மமே முக்கியம் என்ற சிந்தனை அவனிடம் மேலோங்கி உள்ளது.
உன் மற்றொரு அண்ணன் ஆன பீமன் அன்புக்கு அடிமை ஆனவன். அவன் அன்புக்காக என்ன வேண்டுமானலும் செய்வான். அவன் இடமும் பகுத்து அறியும் சிந்தனை என்பது சற்று குறைவே. உன் தம்பி நகுலன், சகாதேவனுக்கு இன்னும் மனம் பக்குவம் தேவை.
மேலும் நீ ( அர்ஜுனன்) எல்லா இடங்களிலும் பகுத்து அறியும் சிந்தனை உனக்கு அதிகமே. உன் பகுத்து அறியும் சிந்தனைக்கு ஒரு எடுத்து காட்டு வேண்டும் என்றால் நான் இதே உபதேசைத்தையும், தரிசனத்தையும் உன் இரு அண்ணன் மார்களுக்கும், தம்பதிகளுக்கும் தனியாக வழங்கி இருந்தால், ஏன் எனக்கு மட்டும் உபதேசத்தையும், தரிசனத்தையும் வழங்கினேர்கள் என்று கேட்டு வந்து இருக்க மாட்டார்கள். இது ஒன்றே போதும் உன் அறிவை பறைசாற்ற என்று சொல்லி கிருஷ்ணர் சென்று விடுவார்.
அதனால், அர்ஜுனன் தான் புத்திசாலி என்பது என் அபிப்பிராயம்.
No comments:
Post a Comment