Showing posts with label அளவீடு. Show all posts
Showing posts with label அளவீடு. Show all posts

Tuesday, 19 August 2014

அளவீடு....8

சிறுபொழுது


காலை - 6 முதல் 10 மணி வரை
நண்பகல் - 10 முதல் 2 மணி வரை
ஏற்பாடு - 2 முதல் 6 மணி வரை
மாலை - 6 முதல் 10 மணி வரை
இடையாமம் - 10 முதல் 2 மணி வரை
வைகறை - 2 முதல் 6 மணி வரை

பெரும்பொழுது


கார் - ஆவணி, புரட்டாசி
கூதிர் - ஐப்பசி, கார்த்திகை
முன்பனி - மார்கழி, தை
பின்பனி - மாசி, பங்குனி
இளவேனில் - சித்திரை, வைகாசி
முதுவேனில் - ஆனி, ஆடி

Monday, 18 August 2014

அளவீடு....7

நிறுத்தல் அளவுக்கான தராசு 

ஆறு வகைப்படும்.

  • மணித்தராசு - இது இரத்தினம் முதலியவற்றை நிறுக்கும் மிகச் சிறிய தராசு
  • பொன் தராசு - தங்கம் போன்றவைகளை நிறுக்கும் சிறு தராசு
  • உலோகத் தராசு - செம்பு, பித்தளை முதலியவற்றை நிறுக்கும் பெருந் தராசு
  • பண்டத் தராசு - பலசரக்குகளை நிறுக்கும் தராசு
  • கட்டைத் தராசு - விறகு அல்லது மூட்டைகளை நிறுக்கும் தராசு. இது இரு புறமும் சதுர மரப்பலகைகளைத் தட்டுக்களாகக் கொண்டிருக்கும்.
  • தூக்கு - காய்கறிகளை நிறுக்கும் தராசு. இது மரக்கம்பாலான துலாக் கோலின் ஒரு பக்கத்தில் மட்டும் தொங்கும் கூடைத் தட்டால் ஆனது.

Tuesday, 12 August 2014

அளவீடு....6

நெல் முதலியவற்றை படி, மரக்கால்களில் சொரிந்து அளப்பது பெய்தல் அளவை ஆகும்.


பெய்தல் அளவு


360 நெல் = 1 செவிடு
5 செவிடு = 1 ஆழாக்கு
2 ஆழாக்கு = 1 உழக்கு
2 உழக்கு = 1 உரி
2 உரி = 1 படி
8 படி = 1 மரக்கால்
2 குறுணி = 1 பதக்கு
2 பதக்கு = 1 தூணி
5 மரக்கால் = 1 பறை
80 பறை = 1 கரிசை
48=96 படி = 1 கலம்
120 படி = 1 பொதி
1 படிக்கு
அவரை = 1,800
மிளகு = 12,800
நெல் = 14,400
பயறு = 14,800
அரிசி = 38,000
எள் = 1,15,000

Monday, 11 August 2014

அளவீடு....5

விரல், சான், முழம் என நீளத்தை கை அல்லது கால்களால் அளப்பது நீட்டல் அளவை ஆகும்.



நீட்டல் அளவு


10 கோண் = 1 நுண்ணணு
10 நுண்ணணு = 1 அணு
8 அணு = 1 கதிர்த்துகள்
8 கதிர்த்துகள் = 1 துசும்பு
8 துசும்பு = 1 மயிர்நுனி
8 மயிர்நுனி = 1 நுண்மணல்
8 நுண்மணல் = 1 சிறு கடுகு
8 சிறு கடுகு = 1 எள்
8 எள் = 1 நெல்
8 நெல் = 1 விரல்
12 விரல் = 1 சான்
2 சான் = 1 முழம்
4 முழம் = 1 பாகம்
6000 பாகம் = 1 காதம் (1200 கஜம்)
4 காதம் = 1 யோசனை

Sunday, 10 August 2014

அளவீடு....4

பால், மோர், நெய் போன்ற நீரியல் பொருளை உழக்கு படிகளால் மொண்டு எடுத்து அளப்பது முகத்தல் அளவை ஆகும்.

முகத்தல் அளவு
5 செவிடு = 1 ஆழாக்கு

2 ஆழாக்கு = 1 உழக்கு

2 உழக்கு = 1 உரி

2 உரி = 1 படி

8 படி = 1 மரக்கால்

2 குறுணி = 1 பதக்கு

2 பதக்கு = 1 தூணி

Saturday, 9 August 2014

அளவீடு....3

கால அளவீடுகள்

60 தற்பரை 1 வினாடி.

60 வினாடி 1 நாழிகை.

60 நாழிகை 1 நாள்.

3 3/4 நாழிகை 1 முழுத்தம்.

2 முழுத்தம் 1 யாமம்.

8 யாமம் 1 நாள்.

7 நாள் 1 கிழமை.

15 நாள் 1 பக்கம்.

2 பக்கம் 1 மாதம்.

2 மாதம் 1 பருவம்.

3 பருவம் 1 செலவு.

2 செலவு 1 ஆண்டு.

( 365 நாள் 15 நாழிகை 31 வினாடி 25 தற்பரைகல் கொண்டது ஓர் ஆண்டு )
-

அளவீடு....2 ( குன்றிமணி )

' குன்றிமணி ' அளவாவது தங்கம் இருக்கிறதா?

      குன்றி என்னும் செடியின் கொத்துக்கொத்தான விதைகள்தான் குன்றிமணி.  இந்த விதைகள் முழுவதும் சிவப்பாகவோ,  பாதி சிவப்பாகவும் பாதி கறுப்பாகவோ இருக்கும்.  'குன்றி '  என்று இந்தச் செடியைச் சொல்லும் வழக்கம் இன்று மறைந்துவிட்டது.  செடியையும் அதன் விதைகளையும் குன்றிமணி என்றுதான் தற்காலத்தில்  அழைக்கிறார்கள்.

தங்கத்தை நிறுக்க குன்றிமணி என்ற அளவு முன்பு பயன்படுத்தப்பட்டது என்பது இப்போது எவ்வளவு பேருக்குத் தெரியும்?  குன்றிமணி என்பது 33.33 மில்லி கிராம் அளவு.  சர்வதேச அளவை முறைகளின் ஆதிக்கத்தால்,  இது போன்ற தமிழ் அளவை முறைகள் வழக்கொழிந்துவிட்டன.   

இருந்தாலும், கிராமப்புறங்களில் பேச்சு வழக்கில் ' வீட்டுல ஒரு குன்றிமணி அளவுகூடத் தங்கம் இல்லைன்னா எப்படி? ' என்று சொல்வதுண்டு.  அந்த வகையில் குன்றிமணி என்ற நிறுத்தல் அளவை இன்னும் உயிரைப் பீடித்துக்கொண்டிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது.  

நம் வீடுகளில் குன்றிமணி அளவாவது தங்கம் இருக்கும்.  ஆனால், குன்றிமனி என்ற அளவு இல்லாமல் போய்விட்டது வருத்தம்தான்.

     பொன்னை நிறுப்பது தொடர்பான வேறு சில சொற்கள் :

நெல்
( நெல்லெடை ) .............. 8.3 மி.கி.

மஞ்சாடி .......................... 66.67  மி.கி.

பணம் ( பனவெடை ) .....133.33  மி.கி.

வராகன் ........................... 1.067 கிராம்

அழஞ்சு ............................ 5.33 கிராம்.

கஃக ................................. 10.4 கிராம்.

பலம் ................................ 41.6 கிராம்.

Friday, 8 August 2014

அளவீடு....1

மனையும்  அளவீடும்

சில ஊர்களில் நிலத்தின் அளவீடுகளை சென்ட், குழி எனக் குறிப்பிடுவார்கள்.  

ரியல் எஸ்டேட் துறையில் பயன்படுத்தப்படும் அளவீடுகளை தெரிந்துகொள்வது நல்லது.

1  ஹெக்டேர் ......................... 2 ஏக்கர் 47 சென்ட்.
1  ஹெக்டேர் ......................... 10,000 சதுர மீட்டர்.
1  ஏக்கர் .................................  0.405 ஹெக்டேர்.
1  ஏக்கர் .................................  4,046. 82 சதுர மீட்டர்.
1  ஏக்கர் .................................  43.560 சதுர அடி.
1  ஏக்கர் ..................................  100 சென்ட்.
1  சென்ட் ................................  435. 60 சதுர அடி.
1  சென்ட் ........................  40.5 சதுர மீட்டர்(5.52 சென்ட் ).
1  கிரவுண்ட் ............................ 2400 சதுர அடி.
1  மீட்டர் .................................  3.281 அடி.
1  குழி ......................................  144 சதுர அடி.
3  குழி ......................................  1 சென்ட்.
300 குழி ...................................  1 மா.
1  காணி ...................................  1.32 ஏக்கர்.
1  அடி .......................................  12 இஞ்ச்   (  30.48 செ.மீ. )
1 செயின் ...................................  66 அடி (  100 லிங்க் ).
1  லிங்க் ................................. 0.66 அடி  (  7.92 அங்குலம் ).