Saturday, 15 November 2025
Saturday, 12 July 2025
பாவத்தின் தந்தை
பாவத்தின் தந்தை யார்..._
அரசன் ஒருவனுக்குத் திடீரென்று சந்தேகம் ஒன்று*_
வந்தது.
_பாவத்தின் தந்தை யார்?_
_*அரசவையில் இருந்த பண்டிதரை தனது நண்பன் போலவே அவன் நடத்தி வந்தான். அவரை நோக்கி, “பாவத்தின் தந்தை யார்? இதற்கான சரியான பதிலை நீங்கள் சொல்ல வேண்டும்.” என்றான்.*_
_பண்டிதருக்கோ பெரும் குழப்பம் ஏற்பட்டது._
_யார் பாவத்தை உருவாக்கினார்கள்?_ _யாரைப் பாவத்தின் தந்தை என்று சொல்வது?_
_*அவரது முகத்தில் நிலவிய குழப்பத்தைக் கண்ட அரசன், “சரி, இதற்கு உடனடியாகப் பதில் சொல்ல வேண்டாம். ஒரு வாரத்திற்குள் பதில் சொல்லுங்கள். ஆனால் சரியான பதிலைச் சொல்லாவிட்டால் தகுந்த தண்டனை உண்டு” என்று எச்சரித்தான்.*_
_வீடு திரும்பிய பண்டிதர் தனக்குத் தெரிந்த நூல்களை எல்லாம் புரட்டினார். சரியான பதிலைக் காணோம். தெரிந்தவர்களிடம் கேட்டுப் பார்த்தார். அவர்கள் உதட்டைப் பிதுக்கினர். நாட்கள் கழிந்தன._
_*ஊரில் ஓடும் நதிக்கரையின் ஓரமாக சோகமான முகத்துடன் அவர் நடந்து சென்று கொண்டிருந்தார்.*_
_*நாளைக்குள் பதில் சொல்ல வேண்டுமே!*_
_அவர் முகத்தில் நிலவிய குழப்பதைப் பார்த்த தாசி ஒருத்தி பண்டிதரை அழைத்தாள்._
_“என்ன பண்டிதரே!_ _எப்போதும்_ _உற்சாகமாகப் போவீர்கள். இன்று ஒரே சோகமாக இருக்கிறது முகம். என்ன விஷயம்?” என்று கேட்டாள்._
_*பண்டிதர், “பாவத்திற்குத் தந்தை யார் என்று தெரியாமல் தவிக்கிறேன்” என்று புலம்பினார்.*_
_“அட, இது தெரியாதா? எனக்குத் தெரியுமே” என்று அவள் லேசாகச் சொன்னாள்._
_*பண்டிதருக்குத் தூக்கிவாரிப் போட்டது.*_
_*இவ்வளவு நம்பிக்கையுடன் சொல்கிறாளே, பதில் தெரியும் என்று!!*_
_“பதிலைச் சொல்லேன்” என்று கெஞ்சினார் பண்டிதர்._
_“சொல்கிறேன்._ _ஆனால் இங்கல்ல,_ _எனது வீட்டிற்கு வாரும். அங்கு வர தட்சிணையாக ஒரு பொன் காசு_ _தருகிறேன்.” என்ற அவள் ஒரு பொற்காசைத் தந்தாள்._
_*அதை வாங்கிக் கொண்ட பண்டிதர் தன் மனதிற்குள் இதற்கு பிராயச்சித்தம் செய்து கொள்ளலாம் என்று தனக்குத் தானே சமாதானம் சொல்லிக் கொண்டார்.*_
_தாசியின் வீட்டை அடைந்த பண்டிதர், “இப்போது பதிலைச் சொல்லேன்” என்றார்._
_*“என் படுக்கை அறைக்கு வாருங்கள். இருபது பொற்காசு தந்து பதிலைச் சொல்கிறேன்” என்றாள் அவள்.*_
_பண்டிதர் அவளது படுக்கை அறைக்குச் சென்றார். அடடா, என்ன அற்புதமான சயன அறை!_
_“சரி, இப்போது பதிலைச் சொல்லேன்” என்றார் பண்டிதர்._
_*“வந்தது வந்தீர்கள். என் மடியில் அமரந்து கொண்டு பதிலைக் கேளுங்கள். வாயில் கொஞ்சம் சுவையான மாமிசத்தை வேறு சாப்பிடலாம்” என்றாள் அவள்.*_
_“சும்மா உட்கார வேண்டாம். நூறு பொற்காசுகள் தருகிறேன். என் மார்பை அலங்கரிக்கும் வைர மாலையையும் கூடவே தருகிறேன்” என்றாள் அவள்._
_*பண்டிதருக்கு, அவள் மார்பில் அலங்கரிக்கும் வைர மாலை கண்களைக் கவர்ந்தது.*_
_“சரி, பெரிதாக பிராயச்சித்தம் செய்து கொள்ள வேண்டியது தான்!” என்று அவர் மனதை சமாதானப் படுத்திக் கொண்டு அவள் மடியில் படுத்தார்._
_*ஒரு மாமிசத் துண்டை கையில் எடுத்து வாயில் போட இருந்த தருணம், அந்த தாசி திடீரென் எழுந்தாள். பண்டிதரைத் தூக்கித் தள்ளியதோடு பளார் என்று ஒரு அறை அவரது கன்னத்தில் விட்டாள்.*_
_பண்டிதர் துடிதுடித்துப் போனார்._
_*“இப்போது தெரிந்ததா, விடை? பாவத்தின் தந்தை ஆசை. பண்டிதரே, பேராசை. தெரிந்ததா, பதில்?”"*_
_தாசியின் குரல் பண்டிதரின் மனதில் ஆழப் பதிந்தது._
_அவருக்கு க்ஷண நேரத்தில் ஞானம் கிட்டியது._
_கையில் இருந்த பொற்காசுகளை எல்லாம் தூக்கி எறிந்தார்._
_*சாலை வழியே “விடை தெரிந்து விட்டது, விடை தெரிந்து விட்டது” என்று கத்திக் கொண்டே ஓடலானார். நேராக அரண்மனைக்குச் சென்ற பண்டிதர் மன்னரைச் சந்தித்தார். மக்கள் கூட்டமும் பெருகி விட்டது.*_
_“மன்னா! விடை தெரிந்து விட்டது. பாவத்தின் தந்தை யார் என்று எனக்குத் தெரிந்து விட்டது” என்று சொல்லி விட்டு நடந்ததை அனைத்தும் அப்படியே சொன்னார்._
_*“மன்னா! எனக்குத் தகுந்த தண்டனை கொடுத்து விடுங்கள். பண்டிதராய் இருந்தும் ஒரு இழிவான காரியத்திற்கு இணங்கினேன்.*_ _*என்னை தேச பிரஷ்டம் செய்து விடுங்கள்” என்று உருக்கமாக வேண்டினார்.*_
_“ஆஹா! பாவத்தின் தந்தை பேராசையா. சரியான பதில்” என்று மகிழ்ச்சியுடன் கூவிய மன்னன் பண்டிதரை நண்பன் என்ற முறையில் கட்டிக் கொண்டார்._
_*“நாட்டை விட்டு வெளியேறுவதா? ஒருக்காலும் இணங்க மாட்டேன் அதற்கு! உங்களுக்கு ஞானம் வந்து விட்டதை உணர்கிறேன். இந்தக் கணம் முதல் நீங்களே எனது குரு. ஒரு நாளும் தவறான வழியில் செல்ல முடியாத நீங்களே எனக்குத் தகுந்த வழிகாட்டி. என்னை சீடனாக ஏற்றுக் கொள்ளுங்கள்” என்றான் மன்னன். பண்டிதரை அடி பணிந்து வணங்கினான்.*_
_ஆமாம், *பாவத்தின் தந்தை பேராசை தான்...
Monday, 8 December 2014
ஆசை....9
Sunday, 23 November 2014
ஆசை....8
நீ எதிர்பார்த்தது, எதிர்பார்த்தபடி பிறர் மூலமாகக் கிடைக்காது. ஒவ்வொரு மாற்றத்திலும் பிணக்குற்று, பிணக்குற்று ஏமாற்றத்திற்கு ஆட்பட்டு அதனாலே துன்பமானது பெருகிக் கொண்டே போகிறது. இந்த அடிப்படையைத் தெரிந்து கொண்ட பின்னர் "எதிர்பார்த்தல்" என்பதை விட்டு விடுவது நல்லது எனத் தெரிகிறதல்லவா? தொடக்கத்தில் ஒரு வார காலம் யாரிடமிருந்தும் எதையும் எதிர்பார்ப்பதில்லை என்ற முடிவினை எடுத்துக் கொள்ளுங்கள். பின்னர் அதை ஒரு மாத காலத்திற்கு நீட்டித்துக் கொள்ளுங்கள். (Do not expect anything from anyone for one week to start with and then extend the period to one month).
அதற்குரிய விளைவு நிச்சயமாக உண்டு. நீ எதிர்பார்த்தாலும், எதிர் பார்க்காவிட்டாலும் நீ என்ன செயல் செய்கிறாயோ, அந்தச் செயலுக்குத் தக்க விளைவு வந்துதான் ஆக வேண்டும். நல்லதை எண்ணி, நல்லதை விளங்கிக் கொண்டு, பயனை உணர்ந்து கொண்டு இப்பொழுது செய்கிறேன்; வருவதை ஏற்றுக் கொள்ளச் சித்தமாயிருக்கிறேன் - இந்த அளவு வரும் எனக்கூட எதிர்பாராது நல்லதைச் செய்யும்போது நிச்சயமாக நன்மை பிறக்கும் என்று செய். அவ்வாறு செய்வதற்கு முன்னதாக இன்னொரு ஆராய்ச்சியும் தேவை. அதாவது உன்னைப் பற்றித் தெரிந்து கொள்ள வேண்டும்.
நீ எங்கே இருக்கிறாய், என்னவாய் இருக்கிறாய்? (What you are, where you are and how you are?) உடல் நலத்திலே, வலுவிலே, வயதிலே, அறிவாற்றலிலே அல்லது விஞ்ஞான வளர்ச்சியிலே, பொருள் உற்பத்தி செய்யும் திறமையிலே, அதிகாரத்திலே, சூழ்நிலையிலே உள்ள ஒரு வாய்ப்பிலே நீ எங்கே இருக்கிறாய், எப்படி இருக்கிறாய்? இந்த நிலையில் இருந்து கொண்டு உனக்கு, குடும்பத்திற்கு, சுற்றத்தாருக்கு, ஊருக்கு, உலகுக்கு எந்த அளவிலே நான் நன்மை செய்ய வல்லவன். செய்ய முடியும் என்று கணித்துக் கொள். அதைச் செய்ய எப்பொழுதும் தயாராக இரு; செய்து கொண்டே இரு; வாய்ப்புக் கிடைக்கும்போதெல்லாம் அளவு மீறிப் போகாமல் இந்த வழியிலே ஒரே ஒரு வாரம் பயிற்சி செய். இன்னும் சரியாக ஊறி வரவில்லை என்றால் இன்னும் ஒரு மாத காலத்திற்கு அந்தப் பயிற்சியை நீடித்து வா அப்போது பார்க்கலாம் - உனக்கு என்ன வேண்டுமோ அவ்வளவும் கிடைக்கும், அதற்கு மேலேயும் கிடைக்கும்
Sunday, 16 November 2014
ஆசை....7
ஆசைநிறைவேறும்
ஆசை எழும்போது, அதாவது ஏதோ ஒரு பொருளை நாம் விரும்பும் போது அறிவிலே விழிப்போடு இருக்கவேண்டும். தவறினால் பல தீய விளைவுகள் உண்டாகும். வாழ்க்கையில் எளிதில் தீர்க்கமுடியாத பல சிக்கல்கள் தோன்றிவிடும். ஒரு பொருள் மீது ஆசை எழும் போது அதனோடு உறவுகொண்டு, கண்டமுன்அனுபவம், தற்காலச்சூழ்நிலை, எதிர்கால விளைவு இம்மூன்றையும் ஒன்றிணைத்து நோக்கவேண்டும். அப்போதுதான் அறிவு தனது நிலை பிறழாது, மயக்க முறாது, நலம் என உணர்ந்தால் அளவோடு, முறையோடு அப்போருளைப் பெறவும், துய்க்கவும் முயலவேண்டும். அறிவில் விழிப்போடு இருக்கும் வரையில் மாணாமன நிலை என்பது எது?
ஒருவருக்குப் பலபொருட்கள் மீது விருப்பம் எழலாம். அவற்றை வரிசையாகக் குறித்துக் கொள்ள வேண்டும். குறிப்பிட்ட ஒரு பொருளின் தேவை இன்றியமையாததா, அதனை அடையத் தனது ஆற்றலும், சூழ்நிலைகளும் ஒத்து இருக்கின்றனவா? கணிக்கும் அல்லது எதிர் பாக்க்கும் விளைவுகள் என்ன? இவற்றைக் கொண்டு சிந்தனை செய்யுங்கள்.
தேவையும், ஆற்றலும், சூழ்நிலையும், விளைவாகக் காணும் நலனும் ஒத்திருந்தால் அதனை அடைய முறையான முயற்சியை உருவாக்கிக் கொள்ளுங்கள். செயலாற்றி வெற்றி பெறுங்கள். இல்லையெனில், ‘இன்னின்ன நிலைமைகளால் இந்தப் பொருள் மீது ஆசை கொள்ளுதல் தவறு, எனவே இந் தஆசையை நான் நீக்கிக் கொள்கிறேன்’ என்று பல தடவை காலை, மாலை அதற்கென உட்கார்ந்து தானே மனதிற்குள் உறுதி கூறிக் கொள்ள வெண்டும்.சில குறிப்பிட்ட பொருட்களைப் பற்றி இவ்வாறு முடிவு செய்து கொண்டால் மீண்டும் பிற பொருள் மீது முறையற்ற அவா எழாது. நலம் தரும் பொருட்களைப் பெறத் தேவையான ஆற்றலும் நன்கு வளர்ச்சி பெறும். அடுத்தடுத்து வாழ்வில் வெற்றிகள் பல கிட்டும். வாழ்வில் முழு அமைதியும் பெறலாம். இவ்வழியில் ஆசையை முறைப் படுத்திக் கொள்ள வேண்டும்.
Thursday, 7 August 2014
ஆசை....6
அதே போல் தேவை என்று கண்டவிடத்தும், நிறைவு செய்ய வசதி இல்லை என்றாலும் முன் சொன்னது போலவே ஆராய்ச்சியும் சங்கற்பமும் கூட பின் விளைவு தீங்கு தருவதென்றால், அந்த ஆசையையும் முன் சொன்ன அதே முறையில் சமம் செய்து கொள்ள வேண்டியது தான். நிறைவும் செய்யாமல் மாற்றவும் செய்யாமல் ஆசைகளை மனதில் சுமந்து கொண்டிருந்தால் மன அமைதி கெடும். உடலில் குன்மம் முதலிய நோய்கள் உண்டாகும்.
ஒரு ஆசையை இம்மாதிரி மனதில் வைத்திருக்கும் காலத்தில் எடுத்த காரியங்களிளெல்லாம் செயல் வேகம் குன்றி, திறமை மழுங்கி, தோல்வி ஏற்பட்டுக் கொண்டே இருக்கும். ஆசை, திட்டமிடல், செயல் (desire, approach, achievement) மூன்றும் சரியாக இருந்தால் வெற்றி மேல் வெற்றி வந்து கொண்டேயிருக்கும்.
Friday, 1 August 2014
ஆசை....5

நமக்கு எண்ணி முடியாத ஆசைகள் இருக்கின்றன. ஆனாலும் என்றோ ஒரு நாள் நாம் ஆசாப்படும் வஸ்துக்கள் நம்மை விட்டுப் பிரிவது நாம் அவற்றைவிட்டுப் பிரிவது சர்வ நிச்சயம். சாவின் மூலம் இந்தப் பிரிவு ஏற்படாமல், அதற்கு முந்தி நாமாக ஆசைகளை ராஜினாமா செய்து விட்டுவிட்டால், அத்தனைக் கத்தனை ஆனந்தமாக இருக்கலாம். நமக்கு எத்தனை ஆசைகள் இருக்கின்றனவோ அத்தனை முளைகளை
துக்கத்துக்கு அடித்துக்கொண்டு நம்மைக் கட்டிப்போட்டுக் கொள்கிறோம்.
ஆசைகளை குறைக்கக் குறைக்க துக்கஹேதுவுங் குறையும். இந்தப்
பிறவி முடியுமுன் நாம் சகல ஆசைகளையும் விட்டுவிட்டால் மறுபடியும்
பிறந்து அவஸ்தைப்படவே வேண்டாம். அப்படியே பரமாத்மாவில்
கரைந்து ஆனந்தமாகி விடலாம்.
Thursday, 24 July 2014
ஆசை....4

ஆசை சீரமைத்தல்
ஆசைகளை நிறைவேற்றிக் கொள்ள வேண்டுமானால், எம்மாதிரியான ஆசைகளை நிறைவேற்ற இயலும் என எண்ணிப் பார்த்து ஆசைகளை ஒழுங்குபடுத்திக் கொள்வதற்கான முறையான பயிற்சியே ஆசை சீரமைத்தல் என்பதாகும்.
தியானம் கற்றுக்கொள்ள வந்த ஒருவர் மகரிஷியிடம் சொன்னாராம் -
‘அய்யா, எனக்கு தியானம் கற்றுக் கொள்ளவும் ஆசையாயிருக்கிறது. அசைவ உணவை சாப்பிடுவதிலும் ஆசை இருக்கிறது. நான் என்ன செய்வது?’
அதற்கு மகரிஷி அவர்கள் இப்படி பதில் சொன்னாராம். ‘ஒன்றும் கவலைப் படவேண்டாம். இரண்டையுமே தொடர்ந்து செய்து வாருங்கள். உங்களுக்கு எதில் அதிக விருப்பம் ஏற்படுகிறதோ, மற்றது தானாகவே உங்களிடமிருந்து போய் விடும்’ என்றாராம்.
அதாவது தியானத்தில் விருப்பம் அதிகமானால் அசைவ உணவு சாப்பிடுவதில் ஆசை போய்விடும். அசைவ உணவு சாப்பிடுவதில் ஆசை அதிகமானால் தியானத்தில் விருப்பம் போய்விடும் என்று அர்த்தம்.
Wednesday, 23 July 2014
ஆசை....3
விட்டதடா ஆசை விளாம் பழத்து ஓட்டோட
ஆசையில்லாத கோயிலில் பூசை எதுக்கு?
இருக்கறதை விட்டுவிட்டுப் பறக்கிறதுக்கு ஆசைப்படலாமா?
ஆசை இருக்கு தாசில் பண்ண... அதிர்ஷ்டம் இருக்கு மாடு மேய்க்க.
பேராசை பெரு நஷ்டம்.
ஏகாதசி தோசை, இளையவள் மேலே ஆசை
ஆசை அறுபது நாள்; மோகம் முப்பது நாள்.
கூழுக்கும் ஆசை; மீசைக்கும் ஆசை.
ஆசையில்லா மனமும் ஓசையில்லாக் கடலும் உலகில் இல்லை
ஆசை வெட்கமறியாது.
ஆசை இருக்கு ஆனை மேல் ஏற; அம்சம் இருக்கு மண் சுமக்க!
ஆசை உள்ளளவும் அலைச்சலும் உண்டு
ஆசை வெட்கம் அறியாது





