Showing posts with label Manavalakkalai. Show all posts
Showing posts with label Manavalakkalai. Show all posts

Saturday, 26 January 2013

பத்மஸ்ரீ S K M மயிலானந்தன் அவர்கள

இந்த ஆண்டு குடியரசு தின பத்மஸ்ரீ விருது உலக சமதாய சேவா சங்க தலைவர் அருள்நிதி SKM மயிலானந்தன் அவர்களுக்கு அவரின் சிறந்த 
சமூக சேவைக்காக வழங்கப்பட்டுள்ளது. 

அனைத்து மனவளக்கலைஞர்கள் சார்பாக 
அவரை வாழ்த்துவதில் பெரு மகிழ்ச்சி 
அடைகின்றோம்.

வாழ்க திரு  SKM  மயிலானந்தன் அவர்கள் !
வாழ்க அவர் புகழ்!
வாழ்க வளமுடன்!

(இவரைப் பற்றி விரிவான கட்டுரை விரைவில் )

Sri   with  Sri  SKM   2010




மாலா, ஸ்ரீ, திரு SKM  & JP



Friday, 7 December 2012

இரூர் கிராம நிகழ்ச்சிகள் 5-12-12

உலக சமுதாய சேவா சங்கம் திருச்சி மண்டலம் சார்பில் தத்தெடுக்கப்பட்ட  இரூர் கிராமத்தில் 
5-12-12 அன்று தலைவர்  SKM மயிலானந்தன் அவர்கள் 
வருகை புரிந்து கிராம மக்களின் வாழ்வில் மனவளக்கலை ஏற்படுத்தியுள்ள மாற்றங்களை நேரிடையாக தெரிந்து கொண்டார். அமைதி கிராமமாக மாறிவரும் இரூரில்  நடந்த பொது நிகழ்ச்சியில் எடுக்கப்பட்ட  போட்டோக்கள் சில -
இரூர் கிராமத்தை வழிநடத்தும் அருட்தொன்டர்கள்
கணேசன் - வெற்றிசெல்வி தம்பதியுடன்  

மண்டல தலைவி & WCSC தலைவர் 

மண்டல தலைவி மாலா உரை 

பயிற்சிகளால் பயன்பெற்ற விவசாயி
தான் அடைந்த நன்மைகளை சொல்கிறார் 

மாணவியின் feedback 

குடும்ப தலைவி பேசுகிறார் 

இரூர் கிராமபள்ளி  ஆசிரியர்  பேசுகிறார் 
WCSC தலைவரின் உற்சாக உரை 
தலைவர் விடைபெறுகின்றார்

Friday, 5 October 2012

வெண்டைக்காய்க்கு வாழ்த்து!

15 ஆண்டுகளுக்கு  முன்  திருச்சி BHEL ல் நடைபெற்ற காந்த தத்துவ
கருத்தரங்கில் மகரிஷி உரை நிகழ்த்த அருகில் Dr லெட்சுமணன் 
அறிவுத்திருக்கோவிலின் 2012 ம் ஆண்டு நிகழ்ச்சி நிரல் தயாரித்தபோது அக்டோபர் மாதம் முதல் சனி, ஞாயிறு ( 6th & 7th ) பேராசிரியர் லெட்சுமணன் (Retd Agri.Professor - பூச்சியியல் துறை வல்லுநர்.  மாயூரம், காரைக்கால், ஏற்காடு பகுதிகளில் பணியாற்றியவர்) அவர்களின் சிறப்பு  நிகழ்ச்சி திட்டமிட்டிருந்தோம். ஆனால்  அவர் ஜெர்மனியில் நடைபெறும் ஒரு கருத்தரங்கில் தனது ஆய்வினை சமர்ப்பிக்க செல்வதால்  அவருக்குப் பதிலாக  நான் 7 ம் தேதி ஞாயிறு மாத்திரம் Cosmology      என்ற தலைப்பில்  ஒரு நாள் நிகழ்ச்சியாக நடத்த இருக்கிறேன்.

பேராசிரியர் லெட்சுமணன் ஆழியாரில் மேற்கொண்ட ஆய்வினைப் பற்றி சுருக்கமாக கீழே தந்துள்ளேன் –

மனவளக்கலையில் வாழ்த்தின் மேன்மை பற்றி எல்லோருக்கும் தெரியும்.

வாழ்த்தி, வாழ்த்தி பயிர்களையும் செழிப்பாக விளைச்சலைக் கொடுக்க வைக்கமுடியும் என்பார்கள் மகரிஷி. இப்படி விளைச்சல்களை அதிகரித்தவர்கள் நிறையபேர்கள் இருந்தாலும், விஞ்ஞான முறைப்படி, சோதனை அளவுகோல்களின்படி பேராசிரியர் லெட்சுமணன் ஆழியாரில் தனது ஆய்வினை மேற்கொண்டார்.

அவர் எடுத்துக்கொண்டது வெண்டை பயிர் . விதைத்த 80 - 90 நாட்களில் விளைச்சலைக் கொடுப்பதால் வெண்டையை தேர்ந்தெடுத்தார். ஆழியாரில் இரண்டு பாத்திகளில் வெண்டை பயிரிட்டு இரண்டுக்கும் ஒரே மாதிரி உரம், நீர் விட்டு ஒரு பாத்தியில் உள்ள வெண்டை பயிர்களை மாத்திரம் தியானம் செய்து வாழ்க வளமுடன் என வாழ்த்தி வந்தார். வாழ்த்திய செடிகள் மற்ற செடிகளைவிட மூன்று மடங்கு விளைச்சல்  தந்தது. எந்த சோதனையுமே பலமுறை செய்து விளைவை ஒப்பிட்டு பார்க்கவேண்டும். அதன்படியே செய்து பார்த்ததில் வாழ்த்திய பயிர்கள் நல்ல விளைச்சலைத் தருகின்றன என்பது உறுதி செய்யப்பட்டது.


ஓரறிவு தாவரங்களே வாழ்த்தினால் வளம் பெறும்போது 
ஆறறிவு படைத்த மனிதனால் வாழ்த்தின்  மூலம்  நிச்சயம் நிறைய சாதிக்கமுடியும்! 


இந்த ஆய்வின் முடிவுகள் சில மாதங்களுக்கு முன் அமெரிக்க பல்கலைக்கழக கருத்தரங்கில் முன் வைக்கப்பட்டது. தற்போது ஜெர்மனிக்கு செல்கின்றது.


இந்த ஆய்வுகள் பற்றி  பேசிக்கொண்டிருந்தபோது நான் லெட்சுமணன் அவர்களிடம் சொன்னேன் -


" உங்களுடைய அடுத்த ஆய்வு வாழ்த்தி விளைந்த வெண்டைக்காய்களை  சாப்பிட்டவர்கள் மனோபாவம் எப்படி  நல்லபடியாக  மாறுகின்றது என்பதாக  இருக்கட்டும்!"





Wednesday, 26 September 2012

பல்கலைக்கழகங்களில் மனவளக்கலை


Yoga for Human Excellence ( யோகமும் மனித மாண்பும் ) என்ற படிப்பு பல பல்கலைக்கழகங்களில் சொல்லித் தரப்படுகின்றது.
சமீபத்தில் பாரதிதாசன் மற்றும் தஞ்சை தமிழ் பல்கலைக்கழகங்களில் புதிய படிப்புக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் (MOU ) கையெழுத்தான நேரத்தில் எடுத்த போட்டோக்கள் -



பாரதிதாசன் பல்கலைக்கழக துணைவேந்தர் Dr மீனாவுடன்  

தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்தில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்படுகின்றது  
தஞ்சை தமிழ் பல்கலைக்கழக துணைவேந்தருடன்