Showing posts with label bio. Show all posts
Showing posts with label bio. Show all posts

Friday, 28 February 2025

BIOCLOCK

Bioclock என்றால் என்ன?

நாம் வெளியூர் செல்ல வேண்டும் என்றால் அதிகாலை 4.00 மணிக்கு அலாரம் செட் பண்ணிவிட்டு தூங்கி விடுவோம். ஆனால் அலாரம் அடிப்பதற்கு முன் எழுந்து விடுவோம். இது தான் Bioclock.

நமக்கு தெரிந்த வட்டத்தில் எல்லோரும்

60 - 70 வயதில் இறந்து விடுகிறார்கள். எனவே நாமும் 60-70 வயதில் இறந்து விடுவோம்.

50 வயதில் எல்லா நோய்களும் வந்து விடும் என்று நம்பி நமது Bioclock இல் செட் செய்துவிடுகிறோம்.

அதனால்தானோ என்னவோ 50 வயதில் நோய் வருகிறது.

70 வயதில் செத்து விடுகிறோம். நமக்கு தெரியாமலே நமது Bioclock ஐ தவறாக செட் செய்து விடுறோம்.

உதாரணம் 1: மனநிலை சரியில்லாதவர்களுக்கு வயதாவதில்லை.

அவர்கள் தோற்றத்தில் பெரிதாக எந்த மாறுபாடும் இருக்காது என்ற உண்மை தெரியுமா?

(இப்ப சொல்லுங்க, யார் மன நோயாளி என்று?)

2. சீனாவில் பெரும்பாலோனார் 100 வயது வாழ்கிறார்கள். அவர்களது Bioclock அப்படி செட் செய்யப் பட்டுள்ளது.

எனவே நண்பர்களே,

1. நாம் குறைந்தது 100 வயது வரை வாழ்வோம் என்று Bioclock ஐ மாற்றி அமைப்போம்.

2. நமக்கு இந்த சின்ன வயதில் (40 இலிருந்து 60 வயதுக்குள்) எந்த நோயும் வர வாய்ப்பே இல்லை என நம்புவோம்.

3. டை அடியுங்கள் (முடி இருந்தால் ). இளமையாக தோற்றம் அளியுங்கள் . வயதான தோற்றத்தை அனுமதிக்காதீர்கள்.

4. சுறுசுறுப்பாக இருங்கள். வாக்கிங் போகாதீர்கள். ஜாகிங் போங்கள்.

5. வயதாக வயதாக ஆரோக்கியம் கூடும் என்று நம்புங்கள். (அது தான் உண்மை).

6. எல்லாத்துக்கும் இந்த மனசு தான் காரணம். Never, ever allow the bioclock set your ending.

Friday, 10 November 2023

பயோக்ளாக்

 


நாம் வெளியூர் அல்லது ஏதாவது அவசரமாக அதிகாலை செல்ல வேண்டுமென்றால் அலாரம் செட் செய்துவிட்டு தூங்குவோம். ஆனால் அலாரம் அடிக்கும் முன்பு எழுந்து விடுவோம். இதுதான் பயோகிளாக் (Bio Clock). நாம் குறைந்தது நூறு வயது வரை வாழ்வோம் என்று Bio Clockஐ மாற்றி அமைக்க வாழ்க்கையில் சுறுசுறுப்பாக இருக்க வேண்டியது அவசியம். தினமும் சுறுசுறுப்பாக இருக்க தினமும் வாக்கிங் போவது அவசியம். வயதாக, வயதாக ஆரோக்கியம் கூடும் என்று நம்புங்கள். எல்லாவற்றிற்கும் இந்த மனசுதான் காரணம். எண்ணங்களே வாழ்க்கை.

முதுமை என்பது பாதத்திலிருந்து மேல் நோக்கித் தொடங்குகிறது. உங்கள் கால்களை எப்போதும் செயல்பாட்டிலும் , வலுவாகவும் வைத்திருங்கள். தினமும் வயதாகிக் கொண்டே இருக்கும்போது நமது கால்கள் எப்போதும் சுறுசுறுப்பாகவும், வலுவாகவும் இருக்க வேண்டும். வயதாகும்போது நம் சருமம் வறண்டு,  தலைமுடி நரைத்து முகத்தில் சுருக்கங்கள் வருவதற்காக நாம் பயப்படக் கூடாது. வாழ்க்கைக்கு வலுவான கால் தசைகள் இன்றியமையாத ஒன்றாகும். அதனால் தினமும் நடைபயிற்சி செய்வது முக்கியம்.

உங்கள் கால்களை இரண்டு வாரங்கள் அசைக்கவில்லை என்றால் , உண்மையான கால் வலிமை பத்து வருடங்கள் குறையும் என டென்மார்க் பல்கலைக்கழகத்தின் ஆய்வு ஒன்று கூறுகிறது. முதியவர்கள், இளைஞர்கள் இரண்டு வாரங்கள் செயலற்ற நிலையில் இருந்தால் கால் தசையின் வலிமை மூன்றில் ஒரு பங்கு பலவீனமடையலாம். இது முதுமை அடைவதற்குச் சமம்.

நமது முழு உடல் எடையும் கால்களே தாங்குகின்றன. கால்கள் ஒரு வகையான தூண்கள். மனித உடலில் மிகப்பெரிய வலுவான எலும்புகள், வலுவான தசைகள் மற்றும் நெகிழ்வான மூட்டுக்கள் உடலின் இரும்பு முக்கோணத்தை உருவாக்கி மனித உடலைச் சுமக்கிறது. கால்களுக்கு உடற்பயிற்சி செய்வது அறுபது வயதிற்கு பிறகும் கூட தாமதமல்ல . கால்களை அடிக்கடி வலுப்படுத்துவதன் மூலம், ஒருவர் தமக்கு வயதானதைத் தடுக்கலாம். உங்கள் கால் தசைகள் ஆரோக்கியமாக இருப்பதை உறுதி செய்வதற்கு தினமும் 30 முதல் 40 நிமிடங்கள் நடக்க வேண்டும். கால்களுக்கு வலு கொடுக்க தினசரி நடைப்பயிற்சி செய்வது அவசியம்.