நாம் வெளியூர் அல்லது ஏதாவது அவசரமாக அதிகாலை செல்ல வேண்டுமென்றால் அலாரம் செட் செய்துவிட்டு தூங்குவோம். ஆனால் அலாரம் அடிக்கும் முன்பு எழுந்து விடுவோம். இதுதான் பயோகிளாக் (Bio Clock). நாம் குறைந்தது நூறு வயது வரை வாழ்வோம் என்று Bio Clockஐ மாற்றி அமைக்க வாழ்க்கையில் சுறுசுறுப்பாக இருக்க வேண்டியது அவசியம். தினமும் சுறுசுறுப்பாக இருக்க தினமும் வாக்கிங் போவது அவசியம். வயதாக, வயதாக ஆரோக்கியம் கூடும் என்று நம்புங்கள். எல்லாவற்றிற்கும் இந்த மனசுதான் காரணம். எண்ணங்களே வாழ்க்கை.
முதுமை என்பது பாதத்திலிருந்து மேல் நோக்கித் தொடங்குகிறது. உங்கள் கால்களை எப்போதும் செயல்பாட்டிலும் , வலுவாகவும் வைத்திருங்கள். தினமும் வயதாகிக் கொண்டே இருக்கும்போது நமது கால்கள் எப்போதும் சுறுசுறுப்பாகவும், வலுவாகவும் இருக்க வேண்டும். வயதாகும்போது நம் சருமம் வறண்டு, தலைமுடி நரைத்து முகத்தில் சுருக்கங்கள் வருவதற்காக நாம் பயப்படக் கூடாது. வாழ்க்கைக்கு வலுவான கால் தசைகள் இன்றியமையாத ஒன்றாகும். அதனால் தினமும் நடைபயிற்சி செய்வது முக்கியம்.
உங்கள் கால்களை இரண்டு வாரங்கள் அசைக்கவில்லை என்றால் , உண்மையான கால் வலிமை பத்து வருடங்கள் குறையும் என டென்மார்க் பல்கலைக்கழகத்தின் ஆய்வு ஒன்று கூறுகிறது. முதியவர்கள், இளைஞர்கள் இரண்டு வாரங்கள் செயலற்ற நிலையில் இருந்தால் கால் தசையின் வலிமை மூன்றில் ஒரு பங்கு பலவீனமடையலாம். இது முதுமை அடைவதற்குச் சமம்.
நமது முழு உடல் எடையும் கால்களே தாங்குகின்றன. கால்கள் ஒரு வகையான தூண்கள். மனித உடலில் மிகப்பெரிய வலுவான எலும்புகள், வலுவான தசைகள் மற்றும் நெகிழ்வான மூட்டுக்கள் உடலின் இரும்பு முக்கோணத்தை உருவாக்கி மனித உடலைச் சுமக்கிறது. கால்களுக்கு உடற்பயிற்சி செய்வது அறுபது வயதிற்கு பிறகும் கூட தாமதமல்ல . கால்களை அடிக்கடி வலுப்படுத்துவதன் மூலம், ஒருவர் தமக்கு வயதானதைத் தடுக்கலாம். உங்கள் கால் தசைகள் ஆரோக்கியமாக இருப்பதை உறுதி செய்வதற்கு தினமும் 30 முதல் 40 நிமிடங்கள் நடக்க வேண்டும். கால்களுக்கு வலு கொடுக்க தினசரி நடைப்பயிற்சி செய்வது அவசியம்.
No comments:
Post a Comment