Thursday, 30 August 2012

மனைவி நல வேட்பு நாள்


மனைவி நல வேட்பு நாள் (AUG 30) 

உலகில் இதுவரை தந்தை நாள் (Father's day), தாயார் நாள் (Mother's day) தனித்தனியே கொண்டாடுகிறார்கள். சுமங்கலி பூஜை என்றளவிலே கணவன் நல வேட்பு நாளும் கொண்டாடுகின்றார்கள். மனைவி நல வேட்பு நாள் எந்த ஊரிலேயும் இல்லை. இது ஒரு நன்றி கெட்டதனம் இல்லையா ? இது என் மனதை உறுத்திக் கொண்டே இருந்தது. ஆனாலும், ஒருவர் தலையிட்டுச் செய்தால் மட்டும் போதாது. இது நாடு முழுவதும் ஆண் மக்கள் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும்.

பெண்மையின் பெருமையை உணர வேண்டும் என்ற மனதோடு ஆராய்ச்சி செய்த போது இந்த ஆண்டு என் மனைவியினுடைய (அருள் அன்னை லோகாம்பாள்) பிறந்த நாள் 30.8.ல் வந்தது. அன்பர்களிடம் சொன்னேன். என் மனைவியின் பிறந்த நாளையே வைத்துத் தொடங்கி மனைவி நல வேட்பு நாள் கொண்டாடலாம். இதையே வைத்துக் கொண்டு, இது முதல் கொண்டு ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 30 ஆவது நாளை மனைவி நல வேட்பு நாளாகக் கொண்டாடுவது நம் சங்கத்தின் வழக்கமாக வரட்டும். பிறகு உலக நாடுகளிலும் பரவட்டும் என்றேன். ஆண்களும், பெண்களும் உற்சாகமாக அதை ஏற்றுக் கொண்டு பல இடங்களில் கொண்டாடுகிறார்கள். நீங்களும் 
உங்கள் வாழ்க்கைத் துணையை நன்றியோடு வாழ்த்தி இக்கவியைச் சொல்லி மகிழுங்கள்.

பெற்றோரைப் பிறந்தகத்தைப் பிறந்த ஊரை விட்டுப்
பிரிந்து வந்து, பெருநோக்கில் கடமையறம் ஆற்றப்,
பற்றற்ற துறவியெனக் குடும்பத்தொண்டேற்றுப்
பண்பாட்டின் அடிப்படையில் எனைப் பதியாய்க் கொண்டுஎன்
நற்றவத்தால் என் வாழ்க்கைத் துணையாகிப் பெண்மை
நல நோக்கில் அன்போடு கருணை இவை கொண்டு
மற்றவர்க்கும் தொண்டாற்றும் மாண்புமிக்க எந்தன்
மனைவியை நான் மதிக்கின்றேன் வாழ்த்தி மகிழ்கின்றேன்.


- யோகிராஜ் வேதாத்திரி மகரிஷி




கடந்த பல ஆண்டுகளாக மனைவி நல வேட்பு நாள் தமிழகமெங்கும் சிறப்பாக கொண்டாடப் பட்டு வருகின்றது.இந்த ஆண்டு BHEL  அறிவுத் திருக்கோவிலில் செப்டம்பர் 19 ம்  தேதி  இந்த விழாவினை நடத்துகின்றோம். பத்து நாட்கள் முன்னே திருச்சி நகரில் நடைபெற்றது. நாளை இரூர் கிராமத்திலும், வரும் ஞாயிற்றுக் கிழமை சேலத்திலும், அடுத்த ஞாயிறு மணப்பாறையிலும் நடைபெறும் நிகழ்சிகளில் நாங்கள் கலந்து கொள்கின்றோம்.

Mala & Jp @ BHEL Temple of Consciouness  2010


சென்ற ஆண்டு  -









18-9-2011

உன்னை கரம் பிடித்தேன், 

வாழ்க்கை ஒளிமயம் 


ஆனதடி



THURSDAY THOUGHT


Wednesday, 29 August 2012

MIDWEEK INSPIRATION

60 tips for a stunningly great life
- Robin Sharma

 I want to shift gears from leadership to a pure focus on crafting an exceptional life. Ultimately, life goes by in a blink. And too many people live the same year 80 times. To avoid getting to the end and feeling flooded regret over a live half-lived, read (and then apply) these tips:


1. Exercise daily.
2. Get serious about gratitude.
3. See your work as a craft.
4. Expect the best and prepare for the worst.
5. Keep a journal.
6. Read “The Autobiography of Benjamin Franklin”.
7. Plan a schedule for your week.
8. Know the 5 highest priorities of your life.
9. Say no to distractions.
10. Drink a lot of water.
11. Improve your work every single day.
12. Get a mentor.
13. Hire a coach.
14. Get up at 5 am each day.
15. Eat less food.
16. Find more heroes.
17. Be a hero to someone.
18. Smile at strangers.
19. Be the most ethical person you know.
20. Don’t settle for anything less than excellence.
21. Savor life’s simplest pleasures.
22. Save 10% of your income each month.
23. Spend time at art galleries.
24. Walk in the woods.
25. Write thank you letters to those who’ve helped you.
26. Forgive those who’ve wronged you.
27. Remember that leadership is about influence and impact, not title and accolades.
28. Create unforgettable moments with those you love.
29. Have 5 great friends.
30. Become stunningly polite.
31. Unplug your TV.
32. Sell your TV.
33. Read daily.
34. Avoid the news.
35. Be content with what you have.
36. Pursue your dreams.
37. Be authentic.
38. Be passionate.
39. Say sorry when you know you should.
40. Never miss a moment to celebrate another.
41. Have a vision for your life.
42. Know your strengths.
43. Focus your mind on the good versus the lack.
44. Be patient.
45. Don’t give up.
46. Clean up your messes.
47. Use impeccable words.
48. Travel more.
49. Read “As You Think”.
50. Honor your parents.
51. Tip taxi drivers well.
52. Be a great teammate.
53. Give no energy to critics.
54. Spend time in the mountains.
55. Know your top 5 values.
56. Shift from being busy to achieving results.
57. Innovate and iterate.
58. Speak less. Listen more.
59. Be the best person you know.
60. Make your life matter.

WEDNESDAY WISDOM


Tuesday, 28 August 2012

சித்திரம் -1


ஆனந்த விகடனில் அந்தகாலத்தில் கோபுலு வரைந்த சித்திரம் -

குழந்தைகளுக்கு விளக்கெண்ணை கொடுப்பதை மிகவும் ரசிக்கக் தக்க வகையில்  வரைந்திருக்கின்றார்.


சிறுவயதில் விளக்கெண்ணை சாப்பிட்டவர்களுக்கு இந்த சித்திரத்தால்
நிலாக்கால நினைவுகள் நிச்சயம் மலரும்! 

Thanks - Vikatan

உயிர் காத்த பருந்து

From Paulo Coelho's book -

செங்கிஸ்கான் , உலகையே ஆட்டுவித்த மங்கோலிய அரசன்,மிக சிறந்த வீரன் . ஒரு முறை தன் பரிவாரங்களுடன் காட்டு வழியே சென்று கொண்டிருந்தான் . அப்போது அவனுக்கு வேட்டையாடும் ஆசை ஏற்பட்டது மேலும் வேட்டையாடியவற்றை தன் வீரர்களுக்கு உணவாக கொடுக்கலாம் என்ற எண்ணமும் ஏற்பட்டதால் , சில குதிரை வீரர்களை அழைத்துக்கொண்டு அடர்ந்த காட்டுக்குள் நுழைந்தான். 

வெகு நேரம் திரிந்தும் அவ்வீரர்களுக்கு எதுவுமே கிடைத்த பாடில்லை. பசியும் தாகமும் வாட்ட ஆரம்பித்தது . வெறும் கையுடன் திரும்புவதில் மன்னனுக்கு இஷ்டமில்லை . எனவே வீரர்களை திரும்ப அனுப்பிவிட்டு தான் மட்டும் காட்டுக்குள் சுற்றிகொண்டிருந்தான். நேரம் ஆக ஆக தாங்கமுடியாத தாகம் வாட்டியது . எனவே ஏதாவது நீர் நிலைகள் தென்படுகிறதா என்று தேட ஆரம்பித்தான்  செங்கிஸ்கான் .

செங்கிஸ்கானை பொருத்தமட்டில் எப்போதுமே ஒரு பருந்து அவனிடம் இருந்து வந்தது . அந்த பருந்தை தன் நண்பனாகவே பாவித்து வந்தான் . பல போர்களங்களில் , திக்கு தெரியாத காடுகளில் ,இந்த பருந்து ஒரு வழிகாட்டியாக உதவி செய்து வந்தது . அதனால் சக்கரவர்த்தியின் தோளோடு இருக்கும் பாக்கியம் அந்த பறவைக்கு வாய்த்திருந்தது.
நெடுநேர தேடுதலுக்கு பிறகு , ஒரு பாறையின் இடுக்கு வழியே சிறிது சிறிதாக தண்ணீர் கசிவதை பார்த்தான் செங்கிஸ்கான் . உடனே தன் இடுப்புபையில் வைத்திருக்கும் ஒரு வெள்ளி குவளையை எடுத்து ஒழுகும் தண்ணீரை பிடித்தான் .குவளை நிறைந்தவுடன் அதை குடிப்பதற்காக கையில் ஏந்தினான் . ஐயோ பரிதாபம், ஓடி வந்த பருந்து அவன் மீது அமரும் முயற்ச்சியில் தண்ணீரை கொட்டிவிட்டது . 


அடக்கமுடியாத கோபம் வந்தாலும் , அடக்கிக்கொண்டு மறுபடியும் சொட்டு சொட்டாக விழும் நீரை பிடிக்க ஆரம்பித்தான் . இம்முறை அதை குடிக்க முயலும் போது மீண்டும் அந்த பருந்து அவனுடன் விளையாட ஆரம்பித்தது , முடிவில் தண்ணீர் கீழே கொட்டியது . 

என்னதான் இருந்தாலும் ஒரு பறவை தன்னுடைய அவசரம் தெரியாமல் விளையாடுவதா ? இதை யாரேனும் பார்க்க நேரிடில் நாடாளும் மன்னன் ஒரு பறவையை சமாளிக்கமுடியாமல் திணறுவதை கண்டு சிரிக்கமாட்டார்களா ? கோபம் தளைக்கேற வாளை உருவினான் , இம்முறை தண்ணீரை பிடித்துக்கொண்டே பருந்தை கவனித்தான் , மீண்டும் குடிக்கும் நேரத்தில் பருந்து அவனை நோக்கி வந்தது , ஒரே வெட்டில் அதை இரண்டாக பிளந்தான் ஆனாலும் தண்ணீர் குவளை கீழே விழுந்ததது. பாறை வழியே வந்து கொண்டிருந்த தண்ணீரும் நின்றுவிட்டிருந்த நிலையில் அந்த பாறையின் மீது ஏறினால் தண்ணீர் கிடைக்குமென்று நினைத்து ஏறினான் .

அய்யகோ ! என்ன விபரீதம் !இந்த சின்ன நீர்குட்டையில் செத்து மிதப்பது பயங்கர விசமுள்ள நாகமல்லவா ! இதை குடித்திருந்தால் நான் அடுத்தகணமே மரணித்திருப்பேனே ! என்னை காப்பாற்ற அல்லவோ இந்த பருந்து தன் உயிரை விட்டிருக்கிறது ,அத்தகைய நண்பனையா நான் வெட்டி கொன்றேன் ! என்றெல்லாம் அவன் மனது பதறி அழுதது !

பருந்தின் உடலை கையில் எடுத்துகொண்டான் , அதை பொன்னால் வேய்ந்து தனது சிம்மாசனத்தின் மேல் வைத்து மிக பெரிய மரியாதை கொடுத்த செங்கிஸ்கான் , அதன் இரண்டு சிறகுகளிலும் பொன்னால் எழுதிய வாசகங்கள் வருமாறு

 கோபத்தில் எடுக்கப்படும் முடிவுகள் , எக்காலத்திலும் தோல்வியை மட்டுமே தருபவை

" என்ன குற்றம் செய்தாலும் , என்ன துரோகம் இழைத்தாலும் ,நண்பன் என ஒருவனை நினைத்தபட்சத்தில் அவன் நண்பனாகவே தொடருவான் "

THOUGHT FOR TUESDAY