Saturday, 17 September 2022

உப வேதங்கள்

    தலைமுறை தலைமுறையாக வேதகால முனிவர்கள் காலம் முதல் கைமாற்றி அளிக்கப்படும் பல்வேறு துறை சார்ந்த பயனுள்ள தகவல்களே நான்கு உபவேதங்களாக அறியப்படுகின்றன. ரிக், யசுர், சாம, அதர்வணம் ஆகிய நூல்கள் நான்கும் முக்கியமான வேத நூல்கள் எனப்படுகின்றன. அவற்றிற்குத் துணையாக தோன்றிய நால்வகை நூல்கள் உபவேதம் எனப்படுகின்றன. 


அவை :

1.   ஆயுர்வேதம்:  உடலை  நோய்களிலிருந்து  காப்பாற்றி  ஆயுளை  அதிகரிக்கும்  மருத்துவம்.

2.   தனுர்  வேதம் :  தற்காத்துக்  கொள்ளும்  போர்ப்  பயிற்சிகளைக்  கற்றுத்  தருவது.

3.   காந்தர்வ  வேதம் :  மனதிற்கு  இன்பமூட்டும்  இசை,  நடிப்பு,  நடனம்  முதலியவை.

4.   அர்த்த  வேதம் :  பொருள்களைச்  சம்பாதிக்கும்  உபாயங்களைத்  தெரிவிப்பது.

மனிதத் தோல் போர்த்திய மிருகம்

 





ஏஷாம்  ந  வித்யா  ந  தபோ  ந  தானம்,

 ஞானம்  ந  ஷீலம்  ந  குணோ  ந  தர்ம;
 தே  மர்த்யலோகே  புவி  பாரபூதா
 மனுஷ்யரூபேண  ம்ருகாஸ்சரந்தி"
என்று  ஒரு  ஸ்லோகம்.



இதன்  விளக்கம் :

     பசுத்தோல்  போர்த்திய  புலியைப்  பற்ரி  நாம்  படித்திருக்கிறோம்.  மனிதத்  தோல்  போர்த்திய  மிருகங்கள்  எவை  என்றும்,  நம்  பெரியோர்களால்  குறிப்பிடப்படிருக்கிறார்கள்.

     படிக்காதவர்கள்,  தியானம்  செய்யாதவர்கள்,  தானம்  கொடுக்காத  கஞ்ச  மகா  பிரபுக்கள்,  நற்குணம்  இல்லாதவர்கள்,  நல்ல  பண்பாடு  இல்லாதவர்கள்,  தார்மீக  வழியில்  நடக்காதவர்கள்  ஆகியோரே  மனிதத்  தோல்  போர்த்திய  மிருகங்கள்  ஆவார்கள்.

Friday, 16 September 2022

நமது உடல் பற்றி சில விஷயங்கள் ....2



கடவுள் இலவசமாக கொடுத்த உறுப்புக்களின் இன்றைய விலை

* ஒரு செயற்கை பல் வைக்க ரூ.6,000/-
* செயற்கை இதயத்தின் விலை ரூ.80 லட்சம்
* ஒரு கிட்னி ரூ.30 லட்சம் (பொருத்த ஆகும் செலவு ரூ.20 லட்சம்)
* செயற்கை முடிவைக்க ரூ.2 லட்சம்
* செயற்கை விரல் வைக்க ரூ.ஒன்றறை லட்சம்
* செயற்கைக் கால் வைக்க ரூ.2 லட்சம்
* கண்ணுக்கு லென்ஸ் பொருத்த ரூ.50,000/-
* எலும்புக்குப் பதிலாக பிளேட் வைக்க ரூ.50,000
* கிட்னிக்குப் பதிலாக ஒருமுறை டயாலிசஸ் பண்ண ரூ.3,000
* இதயத்தை ஒருமணி நேரம் செயற்கையாக இயங்க வைக்க ரூ.45,000
* ஈரலை ஒருமணிநேரம் செயற்கையாக சுவாசிக்க வைக்க ரூ.50,000
* ரத்தம் ஒரு யூனிட் வாங்க ரூ.2,000
* மேலும் உயிருக்கு விலை மதிப்பே இல்லை.
கெட்டப் பழக்கங்களினாலும், பொறுப்பற்ற விபத்துக்களினாலும் ஆரோக்கியமான உறுப்புகளை சேதமாக்கிக் கொள்வதை இறைவனின் உதவியோடு தவிர்ப்போம். கோடி கோடியாக செலவழித்து செயற்கை உறுப்புகள் பொருத்தினாலும் இறைவன் வழங்கியதைப் போன்று இந்த உறுப்புகள் இயங்க முடியுமா?
சிந்திப்போம்! பொறுப்புடன் செயல்படுவோம்!!

சாபம்

சாஸ்திரத்தில் 13 வகையான சாபங்கள் இருப்பதாக கூறப்படுகிறது. சாபம் என்பது உண்மையில் பலிக்குமா? நாம் வாழ்ந்து கொண்டிருக்கிற 21ஆம் நூற்றாண்டிலும் இதுபோன்ற சாபங்கள் மற்றும் அதற்கான பலன்கள் உண்டாகின்றனவா என்கிற சந்தேகம் நம்மில் பலருக்கும் இருப்பதுதான். சாதாரணமாக அந்த நேரத்தில் ஏற்படும் கோபத்தினால் ஒருவர் கொடுக்கின்ற சாபமானது பலிப்பதில்லை. அதை அவரே சிறிது நேரத்தில் மறந்தே போய் விடுவார். ஆனால் மனம் நொந்து, வயிறு எரிந்து, ஆழமான உணர்விலிருந்து கொடுக்கப்படும் சபமானது பலிக்கக்கூடும் என்று கருதப்படுகிறது. 

பெண் சாபம்

பிரேத சாபம்

பிரம்ம சாபம்
சர்ப்ப சாபம்
பித்ரு சாபம்
கோ சாபம்
பூமி சாபம்
கங்கா சாபம்
விருட்ச சாபம்
தேவ சாபம்
ரிஷி சாபம்
முனி சாபம்
குலதெய்வ சாபம்

அவற்றை ஒவ்வொன்றாக பார்க்கலாம்.


*1) பெண் சாபம் 

இது எப்படி ஏற்படுகிற தென்றால், பெண்களை ஏமாற்று வதும், சகோதரிகளை ஆதரிக்காமல் இருப்பதாலும், மனைவியைக் கைவிடுவதாலும் வருகிறது.பெண் சாபம் ஏற்பட்டால் வம்சம் அழியும்.


*2) பிரேத சாபம் 

இறந்த மனிதனின் உடலை வைத்துக்கொண்டு அவரை இழிவாகப் பேசுவதும், அவருடைய உடலைத் தாண்டுவதும், பிணத்தின் இறுதி காரியங்களை செய்யவிடாமல் தடுப்பதும், இறந்தவரை வேண்டியவர்கள் பார்க்க அனுமதி மறுப்பதும் பிரேத சாபத்தை ஏற்படுத்தும்.பிரேத சாபத்தால் ஆயுள் குறையும்.


*3) பிரம்ம சாபம்

நமக்கு வித்தை கற்றுக்கொடுத்த குருவை மறப்பது,
வித்தையை தவறாக பயன்படுத்துவது,
மற்றவர்களுக்கு சொல்லிக் கொடுக்காமல் ஒரு வித்தையை மறைத்து வைப்பது,இவற்றான காரணங்களால், பிரம்ம சாபம் ஏற்படுகிறது.பிரம்ம சாபத்தால், வித்யா நஷ்டம் அதாவது, படிப்பு இல்லாமல் போகும்.


*4) சர்ப்ப சாபம்

பாம்புகளை தேவையின்றி கொல்வதாலும் அவற்றின் இருப்பிடங்களை அழிப்பதாலும்,சர்ப்ப சாபம் உண்டாகும்.
இதனால், கால-சர்ப்ப தோஷமும் ஏற்பட்டு திருமணத் தடை ஏற்படும்.


*5) பித்ரு சாபம்

முன்னோர்களுக்கு செய்யவேண்டிய திதி மற்றும் தர்ம காரியங்களை செய்யாமல் மறப்பதும், தாய்- தந்தை தாத்தா-பாட்டி போன்றோரை உதாசீனப்படுத்துவதும் , அவர்களை ஒதுக்கி வைப்பதும்,பித்ரு சாபத்தை ஏற்படுத்தும்.
பித்ரு சாபம் பாலாரிஷ்ட சாபத்தையும் ஏற்படுத்தி, வம்சத்தில் ஆண் குழந்தை பிறக்காமல் போவது, குழந்தைகள் இறந்துபோவது போன்றவற்றை ஏற்படுத்தும்.


*6) கோ சாபம்

பசுவை வதைப்பது, பால் மரத்த பசுவை வெட்டக் கொடுப்பது கன்றுடன் கூடிய பசுவைப் பிரிப்பது , தாகத்தால் பசு தவிக்கும் போது தண்ணீர் கொடுக்காதது போன்ற காரணங்களால் கோ சாபம் ஏற்படும்.இதனால், குடும்பத்திலோ வம்சத்திலோ எவ்வித வளர்ச்சியும் இல்லாமல் போகும்.


*7) பூமி சாபம்


ஆத்திரத்தில் பூமியை சதா காலால் உதைப்பதும், பாழ்படுத்துவதும், தேவையற்ற பள்ளங்களை உண்டு பண்ணுவதும், அடுத்தவர் பூமியைப் பறிப்பதும் பூமி சாபத்தை உண்டாக்கும்.பூமிசாபம் நரகவேதனையைக் கொடுக்கும்.


*8) கங்கா சாபம்

பலர் அருந்தக்கூடிய நீரை பாழ் செய்வதாலும், ஓடும் நதியை அசுத்தம் செய்வதாலும், கங்கா சாபம் வரும்.
கங்கா சாபத்தால் எவ்வளவு தோண்டினாலும் நீர் கிடைக்காது.


*9) விருட்ச சாபம்

பச்சை மரத்தை வெட்டுவதும், கனி கொடுக்கும் மரத்தை பட்டுப்போகச் செய்வதும், மரத்தை எரிப்பதும், மரங்கள் சூழ்ந்த இடத்தை, வீடு கட்டும் மனையாக்குவதும் விருட்ச சாபத்தை ஏற்படுத்தும்.விருட்ச சாபத்தினால், கடன் மற்றும் நோய் உண்டாகும்.


*10) தேவ சாபம்

தெய்வங்களின் பூஜையைப் பாதியில் நிறுத்துவது, தெய்வங்களை இகழ்வது போன்ற காரணங்களால், தேவ சாபம் ஏற்படும். தேவ சாபத்தால் உறவினர்கள் பிரிந்துவிடுவர்.


*11) ரிஷி சாபம்


இது கலியுகத்தில் ஆச்சார்ய புருஷர்களையும் உண்மையான பக்தர்களையும் அவமதிப்பது போன்றவற்றால் ஏற்படும்.
ரிஷி சாபத்தால், வம்சம் அழியும்.


*12) முனி சாபம்

எல்லைதெய்வங்கள், மற்றும் சின்னசின்ன தெய்வங்களுக்கு வழங்க வேண்டிய மரியாதைகளையும் பூஜையையும் மறப்பது முனி சாபத்தை ஏற்படுத்தும்.முனி சாபத்தால் செய்வினைக் கோளாறு எற்படும்.


*13) குலதெய்வ சாபம் 

இது நமது முன்னோர்கள் பூஜித்த தெய்வத்தை மறக்காமல் இருப்பது.குலதெய்வ சாபத்தால் குடும்பத்தில் ஒரு போதும் மகிழ்ச்சி ஏற்படாமல் போகும்.ஒருவித துக்கம் சூழ்ந்துகொள்ளும்.சாபம் என்பது நல்லவர்களுக்கு வரமாக மாறும்.தீயவர்களை அழிக்கும்.எவ்வளவு வரங்கள் பெற்றாலும், தாங்கள் பெற்ற வரத்தின் பலத்தால், நல்லவர்களை ஒரு போதும் அழிக்க முடியாது.ஆனால், ஆற்றாமல் அழுது பதறிய நெஞ்சிலிருந்து வந்த வார்த்தை சாபமாக மாறினால் எப்பேற்பட்ட வலிமையான மனிதனையும் உரு தெரியாமல் அழித்து விடும்.

Thursday, 15 September 2022

மழை வரும் சகுனங்கள்

 



கீழ்கண்ட சகுனங்கள் தோன்றினால் மழை வரும்.
1. தும்பி பறந்தால் தூரத்தில் மழை


2. தட்டான் தாழப் பறந்தால் மழை


3. அந்தி ஈசல் அடை மழை


4. எறும்பு முட்டை கொண்டு திட்டை ஏறினால் மழை.


5. தவளை கத்தினால் மழை


6. மாடு மயங்கி வானம் பார்த்தால் மழை


7. கொக்கு மேடேறினால் மழை


8. பகற்பொழுதில் சேவல் கூவி வானத்தைப்

பார்த்தால் மழை


9. கழுதை காதை உயர்த்தினால் மழை


10. ஈசல் பறந்தால் மழை


11. புற்றிலே ஈசல் பறந்தாலும், மண்ணிலே கரையான் கூடினாலும் மழை


12. பாம்புகள் மரத்தில் ஏறினாலோ அல்லது

திறந்த வெளியில் புணர்ச்சியில் ஈடுபட்டாலோ மழை


13. பசு மாடுகள் கன்றைத் தேடி வீட்டிற்கு ஓடினால் மழை.


14. பூனைகள் நிலத்தை பிராண்டினால் மழை


15. குழந்தைகள் அணைக்கட்டி விளையாடினால் மழை





16. மலைகள் நீல நிறமாக காட்சியளித்தால் மழை


17. குகைகள் பனிமூட்டத்தால் மறைக்கப்பட்டிருந்தால் மழை


18. ஓணான்கள் வானத்தைப் பார்த்தால், மரத்தில் ஏறி விளையாடினால் மழை


19. பூனை, எலி, பாம்பு முதலிய பிராணிகள் காரணமின்று அங்குமிங்கும் ஓடினால் மழை.


20. மயில்கள் நடனமாடினால் மழை


21. பசுக்கள் சூரியனையும் ,வானத்தையும் பார்த்தால் மழை


22. பச்சோந்திகள் மரத்தின் மீது அமர்ந்து தன் நிறத்தை மாற்றிக்கொண்டால் மழை


23. பசுக்கள் நிழலிடங்களை விட்டு நகர மறுத்தால் மழை


24. நாய்கள் வீட்டிற்கு வெளியே செல்ல மறுத்தால், வானத்தைப் பார்த்து குரைத்தால் மழை


25. சிட்டுக்குருவிகள் மண்ணில் புரண்டு விளையாடினால் மழை


26. மீன்கள் நீரில் துள்ளி விளையாடினால் மழை.


27. பறவைகள், மிருகங்கள் நுனிப்புல் உண்பதைக் கண்டால் மழை.


28. நீரின் சுவை மாறுதல், உப்பு நீர்த்துப் போதல், மோர் புளித்து போதல் நடந்தால் மழை.


29. இரும்பு பொருட்களிலிருந்து மாமிச வாடை வந்தால் மழை


30. சந்திரனை சுற்றி சிவப்பு நிற வளையம் காணப்பட்டால் அல்லது சந்திரனின் நிறம் கோழியின் கண் போன்று காணப்பட்டால் மழை.


31. வட கிழக்கில் மின்னல் தோன்றினால் மழை


32. மேகங்களால் மறைக்கப்பட்ட சந்திரனிலிருந்து பிரதி சந்திரன் தோன்றினால் மழை


33. இரவு நேரங்களில் இடி முழங்கினால், பகல் நேரத்தில் மின்னல் அடித்தால், கிழக்கு திசையிலிருந்து குளிர்ந்த காற்று வீசினால் மழை.


மௌனம் - ஓஷோ

கேள்வி: பிரிய ஓஷோ !

மௌனத்திற்கும் பேரானந்தத்திற்கும் இடையே உள்ள உறவைப் பற்றி நீங்கள் பேசுவீர்களா?

மௌனம் மட்டுமே போதுமானதா?

மற்ற அனைத்தும் அதைத் தொடர்ந்து வந்துவிடுமா?


ஓஷோ  :

மௌனத்திற்கும், பேரானந்தத்திற்கும் 

எந்த உறவும் இல்லை.

அவை ஒரே விஷயத்தின் இரண்டு பெயர்கள்.

🌸 மௌனமே பேரானந்தம்.

இது அகராதிப் பொருளல்ல.

இது உண்மை நடப்பு அனுபவம்.


அனுபவத்தில் இது,

வேறு வேறு மனிதர்களுக்கு 

இது வேறு வேறாக இருப்பதில்லை.

🌸 நீ மௌனமாக மாறினால்...

உன்னால் கவலைப்பட முடியாது.

உன்னால் இறுக்கமாக முடியாது.

உன்னால் துயரப்பட முடியாது.

நீ சத்தம் போடவும் முடியாது.

உன்னால் தொடர்ந்து படபடக்கவும் முடியாது.

இல்லாவிட்டால்,

எப்படி நீ மௌனத்தில் இருக்க முடியும்?

🌸 இந்த அனைத்து முட்டாள்தனமான வேலைகளும் போய்விட்டால்...

"பேரானந்த நிலையைக் கண்டுணரத் தேவையான இடத்தை...

மௌனம் சுத்தம் செய்து வைக்கிறது."

இவை கிட்டத்தட்ட ஒரே விஷயங்கள்.

ஏனெனில், 

அவை ஒரே சமயத்தில் நடக்கின்றன.


🌸 "நீ மௌனமானால்...

ஒரு குறிப்பிட்ட இனிமை,

ஒரு இனிய மணம்,

ஒரு இனிய எழில்,

இயல்பாகவே உனக்குள் தானாக எழும்."

🌸 ஆனால், உன் மௌனம்

அடக்கப்பட்ட அமைதியாக இருக்கக் கூடாது...

உன் கட்டாயத்தால், 

நீ மௌனமாக இருக்கக் கூடாது...

நீ கட்டாயப்படுத்தி மௌனமானால்...

நீ தியானம் செய்வதற்குப் பதிலாக, 

உன் மனதை அடக்கி அழுத்தி

மௌனமானால்...

நீ உன் மனதுடன் சண்டையிட்டு 

ஜிம்னாஸ்டிக்ஸ் செய்கிறாய்.

🌸 உன் மனதை அமைதியாய் இருக்க கட்டாயப்படுத்துவது சாத்தியமே.

ஆனால், இப்போது பேரானந்தம் கிடைக்காது.

அந்த அமைதி மயான அமைதியாக, 

காலியாக இருக்கும்.

பூஞ்சோலையின் அமைதியாய்,

அது இருக்காது.

அந்த அமைதியில், 

எதுவும் நிரம்பி வழியாது.

வெற்றிடமாக இருக்கும்.

🌸 "தியானத்தின் மூலம் வரும் 

மௌனம் காலி அனுபவமல்ல;

'அது மிகவும் இருப்பது.

நிரம்பி வழியும் அளவு இருப்பது.'

மௌனத்தில் நிரம்பி 

வழியக் கூடியது 

எதுவாக இருக்கமுடியும்?

'பேரானந்தம்தான்.'

🌸 ஆகவே தயவு செய்து 

சரிபார்த்துக் கொள்ளுங்கள்...

உங்கள் மௌனம் 

பேரானந்த நிலையைத் தராவிட்டால்...

நீங்கள் ஒரு தவறான வகை 

அமைதியை அடைய முயற்சிக்கிறீர்கள்.

"பேரானந்த நிலைதான் அளவுகோல் -- நீங்கள் செய்ய முயல்வதை உடனே நிறுத்துங்கள்."

🌸 தியானத்தில் மௌனம் தன்னால் வரும்....

நீங்கள் எந்த தடையுமின்றி,

எந்த அடக்குமுறையின்றி,

மனதை கவனித்துக் கொண்டிருந்தால்...

மௌனம் திடீரென்று, 

ஒரு தென்றல் போல வரும்...

அந்த மௌனத்துடன், 

மலர்களின் நறுமணமும் வரும்...

அதுவே பேரானந்த நிலை.

Wednesday, 14 September 2022

நமது உடல் பற்றி சில விஷயங்கள் ....1

*கல்லீரல்: ஒரு வருடத்தில் ஒரு மனிதனின் கல்லீரல் 23 தண்ணீர் லாரியில் நிரப்பக்கூடிய அளவுக்கு ரத்தத்தை வடிகட்டுகிறது.

*நமது மூக்கினால் 50,000 வகையான வாசனைகளை நினைவில் கொள்ள முடியும்.

*ஏறத்தாழ ஓர் முதிர்ச்சியான மனிதனின் உடல் 7,000,000,000,000,000,000,000,000,000 அணுக்களால் உருவாகியிருக்கிறதாம்

*குழந்தையின் உடலில், வளர்ந்த நபர்களை விட 60 எலும்புகள் அதிகமாக இருக்கும். வளர, வளர சில எலும்புகள் ஒன்றோடு ஒன்றாக இனனைந்து விடுகிறது.

*ஓர் மனித உடலில் இருக்கும் இரத்த நாளங்களை இணைத்தால் அது ஒரு லட்சம் மைல் தூரம் இருக்குமாம்.

*ஒரு மனிதன் தனது வாழ்நாளில் ஏறத்தாழ 23.65 லிட்டர் எச்சிலை சுரக்கிறான். இது ஓர் நீச்சல் குளத்தை நிரப்புவதற்கு போதுமான நீர் அளவு ஆகும்.

*நமது உடலில் இருக்கும் இரும்பின் அளவை கொண்டு, மூன்று இன்ச் நீளமுள்ள ஓர் ஆணியை உருவாக்கலாம்.

*உண்மையில் வியர்வை வாசனை அற்றது. அது உடல் சருமத்தில் இருக்கும் பாக்டீரியாக்களோடு இணையும் போது தான் துர்நாற்றம் வீச ஆரம்பிக்கிறது.


*ஓர் மனிதனின் உடலில் கடைசி வரை வளர்ந்துக்கொண்டே இருக்கும் உடல் பாகம் மூக்கும், காதும் தான்.

*மனிதர்களின் எலும்பு இரும்பை விட உறுதியானது, வலிமையான

*மனிதனின் கண்கள் 10 மில்லியன் வண்ணங்களை பிரித்து காணும் திறன் கொண்டது.

*ஒருவேளை மனித கண்கள் டிஜிட்டல் கேமராவாக இருந்தால் அதன் திறன் 576 மெகா பிக்சல் திறன் கொண்டிருக்கும்.

*மனித உடலில் இருக்கும் பாக்டீரியாக்களின் ஒட்டுமொத எடை ஏறத்தாழ 1.82 கிலோ வரை இருக்கும்.

*ஓர் நாளுக்கு ஒரு லிட்டர் அளவு வரை சளியை உருவாக்குகிறதாம் மனித உடல்.

*எலும்பின் 31% தண்ணீரின் பங்கு இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
 உடலின் கனமான உறுப்பு மூளை. இதன் எடை சுமார் ஒன்றேகால் கிலோ 

 *மனித உடலில் 60 சதவிதம் நீர் தான் உள்ளது. இது சுமார் 50 லிட்டர் இருக்கும். அதாவது நூறு கிலோ மனிதனின் உடலில் 60 லிட்டர் தண்ணீர் தான் இருக்கிறது. 

 *இதயம் 24 மணிநேரத்தில் 14 ஆயிரம் லிட்டர் ரத்தத்தை 1.68 கோடி மைல் நீள ரத்தகுழாய்களின் வழியே பரவச்செய்கிறது. இது உண்டாகும் சக்தி 80 ஆயிரம் கிலோ எடை உள்ள பொருளை பூமியில் இருந்து ஓரடி உயரம் தூக்க போதுமானது. இதயம் ஒரு நாளில் லட்சம் தடவை சுருங்கி விரிகிறது. 

*மூளையின் அடிப் பகுதியில் இருக்கும் பிட்யூட்டரி சுரப்பி தான் உடல் வளர்ச்சியையும், பாலின தன்மையையும் கட்டுப்படுத்துகிறது. ஒரு சிறு பட்டாணி அளவே உள்ள இது, உடலின் பல்வேறு பகுதிகளுடன் 50 ஆயிரம் நரம்புகளால் தொடர்பு கொண்டுள்ளது. 

 *ஒரு மனிதனின் 25 வயதில் முழுவளர்ச்சி பெற்றுவிடுகிறான். 40 வயதுக்கு மேல் வளர்ச்சி நின்றுவிடுவது மட்டுமல்லாமல் மெதுவாக குறையவும் தொடங்கும். 10 ஆண்டுகளுக்கு 4/10 அங்குலம் என்ற அளவில் உயரம் குறைய தொடங்கும். இது குறுத்தெலும் புகள் காய்ந்து போவதால் தான் நேர்கிறது. நாம் பகலை விட இரவில் தான் அதிகம் வளர்கிறோம். குழந்தைகள் கோடை காலத்தில் மழைகாலத்தை விட வேகமாக வளர்கிறார்கள். 

 *ஒருவரது வாழ்நாளில் இதயம் சுமார் 200 கோடி தடவை துடிக்கிறது. அப் பொழுது 50 கோடி லிட்டர் ரத்தத்தை உடலுக்குள் பாய்ச்சு கிறது. உறங்கும் போதும் கூட மணிக்கு 340 லிட்டர் ரத்தத்தை பாய்ச்சுகிறது. வளர்ச்சி அடைந்த ஒரு ஆண் ஓய்வில் இருக்கும் போது அவனது நாடித்துடிப்பு நிமிடத்துக்கு 70 முதல் 72 வரை இருக்கும். அதுவே முழுமையாக வளர்ந்த பெண் என்றால் 78 முதல் 82 வரை அவளது நாடித்துடிப்பு இருக்கும். கடுமையான உடல்பயிற்சி செய்யும் போது இது 200 வரை உயரும். நாடித்துடிப்பு என்பது இதயத்தின் துடிப்பு என்பதையே குறிக்கிறது. 

 *மனித உடலில் மிகப்பெரிய உறுப்பு எதுவென்றால், அது சருமம் தான். வளர்ந்த ஒரு ஆணின் சருமத்தின் பரப்பளவு 20 சதுர அடி இருக்கும். இதுவே பெண் என்றால் 17 சதுர அடி இருக்கும். ஒவ்வொரு இரவிலும் தூங்கும் பொழுது, உடல் சுமார் 8 மில்லி மீட்டர் வளர்ச்சி அடைகிறது. பகலில் இந்த உடல் வளர்ச்சி சுருங்கி விடும். உட்காரும் பொழுதும், நிற்கும் பொழுதும், முதுகில் உள்ள குறுத்தெலும்புகள் அழுத்தப்பட்டு சுருக்கம் ஏற்படுகிறது. தூங்கும் பொழுது அழுத்தம் இல்லாததால் நீண்டு வளர்கிறது. 

*சராசரியாக உடலில் 50 லட்சம் ரோமங்கள் இருக்கும். உடலில் கருத்த ரோமமுடையவர்களுக்கு சற்று கூடுதலாக இருக்கும். உள்ளங்கை, உள்ளங்கால் விரல்களில் உட்புறம் ஆகிய இடங்களில் மட்டுமே ரோமம் வளர்வதில்லை. 



*குழந்தை பிறக்கும் பொழுது 300 எலும்புகள் இருக்கும். இவற்றில் 94 எலும்புகள் இளகி மற்றவற்றுடன் இணைந்து வளர்ந்த பருவத்தில் 206 ஆகிறது. எடையை தாங்குவதில் எலும்புகள் கருங்கல்லை விட உறுதியானவை. ஒரு தீப்பெட்டி அளவு உள்ள எலும்பு 9 டன் எடையை தாங்கும் அதாவது கருங்கல்லை போல நான்கு மடங்கு அதிகம்.