Friday, 1 December 2023

வெற்றியாளர்கள்

 ஜெயிப்பது நிஜம்

வெற்றியாளர்களின் மிக முக்கியமான 12 சூத்திரங்கள்

1. வெற்றியாளர்கள் உலகின் மிகப்பெரிய, அறிவு சார்ந்த சொத்தான, மூளையை (Intellectual Property Brain) பயன்படுத்தி, அதாவது சிந்தித்து, பிரச்சனைகளுக்குத் தீர்வு கண்டுபிடித்து வெற்றி பெற்றுள்னர்.

2. வெற்றியாளர்கள், கடந்த கால தோல்விகளைப் பற்றி கவலை கொள்வதில்லை. எதிர்காலத்தைப் பற்றி பயப்படுவதும் இல்லை. ஆனால் நிகழ்காலத்தில் வாழுகிறார்கள். தோல்வியின் மூலம் ‘எதைச் செய்யக்கூடாது’ என்றஅனுபவத்தையும், வெற்றியின் மூலம் ‘எதைச் செய்ய வேண்டும்’ என்றவெற்றியின் சூத்திரங்களையும் (Success Formulae) கண்டுபிடித்து, பயன்படுத்தி வெற்றி வாகை சூடுகின்றனர்.

3. வெற்றியாளர்கள், தோல்வி அடைந்தால், பிறரை பற்றி குறைகூறுவதில்லை (Finding Fault). நொண்டிச்சாக்கு (Lame Excuse) சொல்வதில்லை. செய்த தவறைநியாயப் படுத்துவதில்லை (Justification) தோல்விக்கு தானே காரணம் என ஒத்துக்கொண்டு, தன்னைத் திருத்தி, சீர்படுத்தி, நேர்மறையாகச் சிந்தித்து, செயலில் ஈடுபட்டு வெற்றி அடைந்துள்ளனர்.

4. வெற்றியாளர்கள், சுயபரிசோதனை (Self Analysis) செய்து அவர்களுடைய பலங்கள் (Strengths), பலவீனங்கள் (Weaknesses), வெற்றி வாய்ப்புக்கள் (Opportunities), எதிர்கால பயங்கள் (Threats) போன்றவற்றைஅலசி ஆராய்ந்து குறிக்கோள் (Goal) நிர்ணயம் செய்கின்றனர். பின்பு திட்டமிட்டு (Plan) குறிக்கோளுக்கு, கால நிர்ணயம் (Target Date) செய்து, தங்களுடைய அறிவைப் (Knowledge) பெருக்கித் திறமையை (நந்ண்ப்ப்) வளர்த்து, நேர்மறைமனோபாவத்துடன் (Positive Attitude), தங்களை உற்சாகப்படுத்தி (Self Motivation) குறிக்கோளை அடைகின்றனர்.

5. வெற்றியாளர்கள், குறிக்கோளை அடைய நிரூபிக்கப்பட்ட வெற்றி முறைகளைப் பயன்படுத்தியுள்ளனர். புதிய மேலாண்மை யுக்திகளை, நவீன தொழில் நுட்பங்களைக் கையாளுபவர்கள். வெற்றியாளர்கள் வெற்றி வாய்ப்புகளை தேடி அல்லது உருவாக்கிப் பயன்படுத்துவார்கள். ஐம்புலன்களையும் (Five Senses) சரியான முறையில் பயன்படுத்தி வெற்றி கண்டுள்ளனர். குறிப்பாக தொடர்பு கொள்ளுதல், வாசித்தல், எழுதுதல், பிறரது உடல்மொழியைக் கண்டுபிடித்து எடை போடுதல், உற்றுக் கவனித்தல், கண்காணித்தல், பிறரிடம் பழகும் தன்மை தலைமைப்பண்பு (Leadership) போன்றவற்றைச் சிறப்பாகப் பயன்படுத்தி, வெற்றி அடைந்துள்ளனர்.

6. வெற்றியாளர்கள் நீர்வளம், நிலவளம், எண்ணெய்வளம், கனிமவளம், இயற்கைவளம் (Water, Land, Oil, Mineral, Natural Resources) போன்றவளங்களை பயன்படுத்தி வெற்றி அடைந்துள்ளனர். போட்டி நிறைந்த இந்த பொருளாதார உலகத்தில் மனித வாழ்க்கையைச் (Human Resources) சிறப்பாகப் பயன்படுத்தி வெற்றி கண்டுள்ளனர்.

7. வெற்றியாளர்கள் மனிதர்களை நிர்வாகம் (HRM Human Resource Management) செய்வதில் கெட்டிக்காரர்கள். மனிதர்களை முன்னேறச் (HRD Human Resource Development) செய்வதில் நல்லவர்கள். அது தவிர நேரத்தையும், தன்னையும் (Time Management and Self Management) நிர்வாகம் செய்வதில் வல்லவர்கள்.

8. வெற்றியாளர்கள் கடினமாக உடல் உழைப்புடன் (Physical Hardwork), புத்திசாலித்தனமான மூளை உழைப்புடன் (Smart Mental Work), தொழிலாளிகள், வாடிக்கையாளர்கள் … ஆகியோர்களின் கூட்டு உழைப்புடன் (Team Work), தங்களை முழுமையாக அர்பணித்து (Commitment) குறிக்கோளை அடையும்வரை, திட்டமிட்டபடி, விடாமுயற்சி (Endurance) செய்து, வெற்றி அடைந்துள்ளனர். தன்னம்பிக்கை அவர்களின் தாரக மந்திரம்.

9. வெற்றியாளர்கள் மாற்றத்தை விரும்புபவர்கள், மாற்றம் ஒன்றேநிலையானது என்று நம்புபவர்கள். நேர்மறைமனோபாவத்துடன் (Positive Mental Attitude) பிரச்சனைகளை வெற்றி வாய்ப்புகளாக மாற்றுபவர்கள். தடைக்கற்களை, படிக்கட்டுகளாக மாற்றுபவர்கள். பலவீனங்களை பலமாக மாற்றுபவர்கள். மொத்தத்தில் சோதனையைச் சாதனையாக மாற்றுபவர்கள். துன்பத்தை இன்பமாக மாற்றுபவர்கள்.

10. வெற்றியாளர்கள் செய்யும் தொழிலே தெய்வம் (Work is worship) என போற்றி வழிபடுபவர்கள். வாடிக்கையாளர் களுக்குத் தரமான சேவை செய்து மகிழ்ச்சி அளிப்பவர்கள் மொத்தத்தில் செய்யும் தொழிலை கஷ்டப்பட்டு செய்யாமல், இஷ்டப்பட்டு விரும்பி செய்பவர்கள். வெற்றியை அடைய செயலில் ஈடுபடுபவர்கள். வெற்றியாளர்கள் தான் மட்டுமின்றி பிறரும் வெற்றியடைய விரும்பி செயல்படுவார்கள்.

11. வெற்றியாளர்கள், அவர்களுக்கு எது தேவையோ (Need), எது (Want), அதை மற்றவர்களுக்கு அதிகமாகக் கொடுக்கின்றனர். அன்பை (Love) பொழிகின்றனர். சரியான நபருக்கு சரியான நேரத்தில் உதவி (ஏங்ப்ல்) செய்கின்றனர். தியாகம் செய்கின்றனர். மற்றவர்களுக்கு வழி காட்டுகின்றனர். பிரபஞ்சத்தில், தங்களுக்குத் தேவையானவற்றை கேட்டுப் பெறுகின்றனர்.

12. வெற்றியாளர்கள், மனம் என்னும் மந்திரச் சாவியை பயன்படுத்தி வெற்றி கண்டுள்ளனர். ஆன்மிக முறைப்படி அல்லது விஞ்ஞான முறைப்படி மனத்தை கையாண்டு வெற்றி அடைந்துள்ளனர். வெற்றியாளர்கள் குறிக்கோளை அடைய லட்சியக் கனவை அடிக்கடி (Creative Visualization) காணுபவர்கள். ஆழ்மனத்திற்கு (Sub Conscious Mind) கட்டளையிடுபவர்கள் (Auto Suggestion).

மேற்கண்ட 12 வெற்றி சூத்திரங்களை, வாழ்க்கையில் பின்பற்றினால் உங்கள் வெற்றி நிச்சயம்! ஜெயிப்பது நிஜம்.


MIND BLOWING PLANETS IN UNIVERSE

 


The universe is a treasure trove of weird and wonderful, so let me introduce you to a couple of mind-boggling planets. First up, we've got HD 189733b. This planet, located about 63 light-years away, is known for its deep blue hue, but not because it's covered in oceans like Earth. Nope, it's more like a scorching hot, turbulent gas giant with silicate rain that could slice through you like glass. Imagine a planet where it literally rains glass sideways. Yikes!

Then there's TrES-2b, also charmingly dubbed "The Dark Knight." Why, you ask? Well, it's darker than charcoal, reflecting less than 1% of the light that hits it. It's so black that it makes Darth Vader look positively radiant. Scientists think it might be absorbing almost all the light that hits it, but the exact reason for its darkness is still a cosmic mystery.

Last on our quirky planetary tour is Gliese 436b. This Neptune-like planet is swimming in a sea of burning ice. Wait, what? That's right. Despite being so close to its parent star that its surface temperature could melt steel, Gliese 436b has an outer layer of ice that remains solid. It's like an interstellar magic trick.

These planets are just the tip of the cosmic iceberg when it comes to the bizarre and extraordinary out there. The universe sure knows how to keep us on our toes!

கடவுள் இருப்பது எங்கே?


 

சிறுகுறிஞ்சான்

 அதிகமாக சர்க்கரை சாப்பிடுவதை எப்படித் தடுப்பது

வீட்டில் சிறுகுறிஞ்சான் செடி வளருங்கள் .நர்சரியில் கிடைக்கும் .

இனிப்பு சாப்பிடுவதற்கு முன்னர் ஒரே ஒரு இலை கடித்து சுவைத்து சாப்பிடுங்கள்

அதன் பின்னர் அரைகிலோ இனிப்பு சாப்பிட்டாலும் சுவை தெரியாது

அப்படியே சப்பென்று இருப்பதால் மெல்ல இனிப்பென்றாலே வெறுத்துவிடுவீர்கள் .

குழந்தைக்கு தாய்ப்பால் மறப்பதைப்போல

மேலும் உடம்பில் சுகரும் கூடாது .மிகுந்த கண்ட்ரோல் செய்யும் .பவுடரும் கிடைக்கும் .

இது அருமையான மூலிகை

Thursday, 30 November 2023

MEMES OF THE DAY ( 30-11-23 )


 

TURNING POINT - STORY



 

எம்.சாண்ட்

 

  1. எம்.சாண்ட் தொழிற்சாலைகளில் உருவாக்கப்பட்டது

ஆற்று மணல் ஆற்றுப் படுகைகளில் இயற்கையாகக் கிடைக்கும்.

2. எம்.சாண்ட் தண்ணீரில் கழுவப்பட்ட எம் சாண்டில் மட்டுமே ஈரப்பதம் கிடைக்கும்.

ஆற்று மணல் ஈரப்பதம் நுண்ணிய துகள்களுக்கு இடையில் சிக்கியுள்ளது

3. ஆற்று மணலுடன் ஒப்பிடும்போது எம்.சாண்ட் அதிக கான்கிரீட் வலிமை கொண்டது

எம் சாண்டுடன் ஒப்பிடும்போது ஆற்று மணல் குறைந்த கான்கிரீட் வலிமை கொண்டது

4. எம்.சாண்ட் 0 % தூசி இருக்கும்

ஆற்று மணல் 3 -20 % தூசி இருக்கும்

5. எம்.சாண்ட் 0% கடல் பொருட்கள் இருக்கும்

ஆற்று மணல் 2-4% கடல்சார் பொருட்கள் (ஓடுகள், சிப்பி போன்றவை) இருக்கும்

6. எம்.சாண்ட் பெரிதாக்கப்பட்ட பொருள்கள் இல்லை

ஆற்று மணல் 6-10% பெரிதாக்கப்பட்ட பொருள் (கற்கள்) சல்லடையில் சலிக்க வேண்டும்

7. ஆற்று மணலுடன் ஒப்பிடும்போது எம்.சாண்ட் சுற்றுச்சூழலுக்கு குறைவான சேதத்தை ஏற்படுத்தும்.

ஆற்று மணல் சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்கும். நிலத்தடி நீர்மட்டத்தை குறைத்து ஆற்று நீர் வறண்டுவிடும்.

8. M-மணல் உலர் அடர்த்தி (dry density) 1750 கிலோ/மீ3

ஆற்று மணல் உலர் அடர்த்தி (dry density) 1600 கிலோ/மீ3

9. எம்-சாண்ட் குறிப்பிட்ட ஈர்ப்பு தோராயமாக 2.73 (specific gravity) ஆகும்

ஆற்று மணல் குறிப்பிட்ட ஈர்ப்பு(specific gravity) தோராயமாக 2.65 ஆகும்

10. எம்.சாண்ட்- ஆற்று மணலுடன் ஒப்பிடும்போது அதிக கான்கிரீட் வலிமை கொண்டது

ஆற்று மணல் - எம் சாண்டுடன் ஒப்பிடும்போது குறைந்த கான்கிரீட் வலிமை கொண்டது.

எனவேய இந்த 10 பாயிண்ட் மூலமாக ஆற்று மணலை விட எம் சாண்டுடன் வீடு கட்ட சிறந்தது ஆகும்