Sunday, 25 March 2012

எந்தன் நெஞ்சில் நீங்காத தென்றல் நினைவுகள் - 3


திருக்கூட்டம்
ஒரே நேரத்துல எரநூறு முந்நூறு விதவிதமான சாமியார்கள் தெரு முழுக்க வீட்டு வாசல்ல பாத்தா எப்படி இருக்கும்? இந்த சம்பவம்ஒவ்வொரு மார்கழி மாசமும் ஒருநாள் நடக்கும்..
திருவண்ணாமலையில பெரிய கார்த்திகையின்போது நாட்டின் பல்வேறு பகுதியிலேருந்து வந்து சேரும் சாமியார்கள் ஒரு கூட்டமாகச் சேர்ந்து கால்நடையாக பழனி நோக்கி புறப்படுவார்கள்.
இந்தக் கூட்டம்தான் திருக்கூட்டம் - இதுக்கு ஒரு தலைமை சாமியார் இருப்பார். விதவிதமான வாத்தியக் கருவிகளுடன் எக்காளம் ஊதிக்கொண்டு இந்தக் கூட்டம் தேவார, திருவாசகப் பாடல்கள் பாடிக்கொண்டு ஒவ்வொரு ஊரிலும் ஓரிரு நாட்கள் தங்கி வழிபாடு நடத்துவார்கள். தைப்பூசத்தன்று பழனியில் இருக்கும்படி திட்டமிட்டு நடந்து வருவார்கள். ஒவ்வொரு ஊர்லேயும் செல்வந்தர் ஒருவர் இவர்களுக்கு வேண்டிய வசதிகளை செய்து கொடுத்து பூஜை ஏற்பாடு செய்வார்கள்.
மாயரத்துல கொட்டாச்சி வீட்ல இவங்களுக்கான பூஜை, விருந்து ஏற்பாடு செய்வாங்க. சாயந்திர நேரத்துல ஒவ்வொரு சாமியாரா வந்து சேருவாங்க.. எங்க வீட்டு வாச திண்ணையில மாத்திரம் 30 , 40 சாமியாருங்க தங்கியிருப்பாங்க. ஜடாமுடி சாமியார், நீட்டு நக சாமியார், புலித்தோல் அணிந்த சாமியார், மொட்டை சாமியார்,கண்ணாடி சாமியார் இப்படி பலரக சாமியார்கள்....சிலரை பாக்கவே பயமா இருக்கும். வழக்கமா வர்ற சாமியாருங்க வீட்டுக்குள்ள தங்குவாங்க.. அப்பாகிட்ட ரொம்ப நேரம் பேசிக்கிட்டுருப்பாங்க.
அடுத்த நா காலையில எல்லா சாமிக்கும் கொட்டாச்சி வீட்ல எண்ணை, சீயக்காய் கொடுப்பாங்க.. எல்லா சாமியாருங்களும் காவேரிக்குப் போயிஆயில் பாத் எடுத்துக்கிட்டு வருவாங்க..அப்புறம் ரெண்டு மணி நேரம் கொட்டாச்சி வீட்ல பூஜை நடக்கும். அப்புறம் அவங்களுக்கு பிரமாதமான சாப்பாடு போடுவாங்க. மாயரத்துல இருக்குற மத்தவங்களுக்கும் அன்னதானம் நடக்கும்.
கொஞ்சம் ரெஸ்ட் எடுத்துக்கிட்டு குத்தாலம் கிளம்புவாங்க..
இப்பல்லாம் திருக்கூட்டம் வருதான்னு தெரியல.. தெருவிலேயும் திண்ணைகளே இல்ல..
ஒண்ணுரெண்டு விஷயங்கள் ஞாபகம் இருக்கு -
ஒரு சாமியார் அப்பாகிட்ட புது வேட்டி வாங்கி ஒரு வாளியில சாயப்பொடி போட்டு அத காவி வேட்டியா மாத்திக் கட்டிகிட்டாரு..
ஒரு சாமியாரு அப்பா மேல கவிதையா பாடுனாரு..
எல்லா சாமிங்களுமே திருவண்ணாமலை பிரசாதமா தீபகொப்பறை கருப்பு சாந்தை நெத்தியில விட்டுவிடுவாங்க..

4 comments:

  1. Nostalgic memories!! You took me back to the golden period of my childhood days in Kottachi house....
    I remember I used to be very scared of the சாமியார்s when I was very little and நான் அடம் பண்ணும் போதெல்லாம் சித்தி would say திருக்கூட்ட சாமியார் கிட்ட உன்ன கொடுத்துட போறேன்
    The head சாமியார் had the special single திண்ணை and the 100s of others would spread out on the loooong திண்ணை
    Can never forget the grand feast in கத்திரிக்கொட்டாய்...(so sad to see it falling apart now) I would hate the big கருப்பு சாந்து பொட்டு they put on our forehead and அவங்க எலயில குமிஞ்சு இருக்குற சாப்பாட பாத்து அசந்து போய் ....அய்யோ எவ்வளவு சாப்டுராங்கன்னு வாய பொலந்து சொல்ல சித்தி கிட்ட குட்டு வாங்கியிருக்கேன்.. :) So many wonderful memories...

    It's really sad that these wonderful traditions are not carried out anymore..

    Thank you for writing about this and bringing back the cherished times I spent at Kottachi house..

    After reading this, missing my தாத்தா soooooo much now :(((

    ReplyDelete
  2. உன்னை அப்பவே ஜடாமுடி சாமியார் கிட்ட கொடுத்துக்கலாம். Now, too late!

    ReplyDelete
    Replies
    1. yeah...tough luck...ஜடாமுடி சாமியார் தப்பிச்சுட்டார் ...யார் யாரோ எங்கிட்ட மாட்டிகிட்டாங்க... :)

      Delete
  3. @JP
    திருக்கூட்டம் memories are so fresh in my mind. Samiyars staying at our home திண்ணை used to ask for water and I used to take water in the சொம்பு to give it to them. As you say, they would come inside and talk with தாத்தா. I vaguely remember one சாமியார் demonstrating to தாத்தா something with பாதரசம் (Mercury). This is definitely, one of many colorful events associated with Korand :))

    ReplyDelete