2004 லில் வேதாத்திரி நகர்
வேதாத்திரி தவச் சாலை
மகரிஷி நினைவு நாளான இன்று அவரைப் பற்றியேஎண்ணிக்கொண்டிருந்தேன்.. மாலா நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளஆழியாறு சென்றுவிட்டாள். மலரும் நினைவுகளில் சிலவற்றைத்தொடர்ந்து இங்கு தர இருக்கின்றேன்..
BHEL அறிவுத் திருக்கோவில் உருவான வரலாறு
1997 ம் ஆண்டு மகரிஷி இங்கு வந்தபோது மூன்று நாட்கள்தங்கியிருந்தார்கள். நாங்கள் நடத்திய காந்தத் தத்துவக் கருத்தரங்குமகரிஷிக்கு மிகுந்த மகிழ்ச்சியைத் தந்தது..அப்போது அவர்கள் " நீங்கள் அமைக்கப் போகும் அறிவுத் திருக்கோவில்பன்னாட்டு மையமாகத் திகழப் போகிறது.. உலகின் பல பாகங்களிலிருந்தும்அறிஞர்கள் இங்கு வந்து பயிற்சி பெறுவார்கள் " என்று வாழ்த்தினார்கள்.
அதுவரை நாங்கள் அறிவுத் திருக் கோவிலைப் பற்றி எண்ணவே இல்லை..மகரிஷி போட்ட விதை 2004 ம் ஆண்டு முளைக்க ஆரம்பித்தது..பல இடங்களில்இக்கோவிலுக்காக இடம் தேடி அலைந்தது ஒரு பெரிய கதை..கடைசியாக திருச்சி - தஞ்சை சாலையில்எல்லோரும் வந்து போகும்படியான இடத்தை தேர்வு செய்து வேதாத்திரி நகர் உருவாக்கினோம்.
அங்கு முதலில் வேதாத்திரி தவக் குடில் துவங்கினோம்..
தொடர்ச்சி அவ்வப்போது வரும்..
No comments:
Post a Comment