Wednesday, 28 March 2012

பிரம்ம ஞானம்

எல்லோரும் இறைநிலை உணர்ந்து, இறைநிலை அடையலாம் என
எளிமையாக பிரம்மஞான பயிற்சி தந்த மகரிஷி அவர்களின் நினைவு தினம் ( 28 மார்ச் ).

விஞ்ஞானத்தையும் மெஞ்ஞானத்தையும் இணைத்து உலக மக்கள் அனைவருக்கும் ஏற்ற வகையில்
எளிய உடல் மற்றும் மனப் பயிற்சிகளை வடிவமைத்த ஒப்பற்ற மகானாகிய
அவருடன் நெருங்கி பழகுவதற்கான வாய்ப்பு எனக்கும், மாலாவுக்கும் கிடைத்தது எங்கள் பெற்றோர்கள், மூதாதையர்கள் செய்த நல்வினைப் பயன்கள்தான்!

இன்று அவருடைய மனவளக்கலை " மனித மாண்புக்கு மனவளக்கலை யோகா"
என்ற தலைப்பிலே பாடங்களாக பள்ளியிலே, கல்லூரிகளிலே சொல்லித்தர படுகின்றது.. பட்டப் படிப்பு, முதுகலைப் படிப்பு, MPhil என பல பல்கலைக்கழகங்கள் வகுப்புகள் நடத்துகின்றன. இவருடைய தத்துவத்தை நிறைய பேர் PhD பதிவு செய்து ஆராய்ந்து வருகிறார்கள்.

அவருடைய மறைவுக்கு ஒரு மாதம் முன் நாற்பது பேராசிரியர்களை அழைத்து " இனி எல்லாவற்றையும் உங்களிடம் ஒப்படைத்துவிட்டேன். மனவளக்கலையால்தான் உலக அமைதி வரும் " என்று சொல்லி எங்களைப் பார்த்து கைகூப்பியபோது நாங்கள் நெகிழ்ந்து அழுது விட்டோம். மாலாவைப் பார்த்து " ஸ்ரீலங்காவுக்கு கூப்பிட்டா மறுக்காமப் போய் வாம்மா.." என்று தனிப்பட கூறியதும் மறக்க முடியாது..
( மாலா ஆறு முறை ஸ்ரீலங்கா சென்று பயிற்சி கொடுத்திருக்கிறாள் )
ஸ்ரீராம் TCS சேருமுன் ஆழியாரில் ஒரு மாதத்துக்குமேல் தங்கி மகரிஷியின்
அன்புக்கு பாத்திரமானதும் கிடைத்தற்கரிய பேறு..!

வேதாத்திரிய வேள்வி தினமாகிய இன்று உலக அமைதிக்கான தொண்டில் எங்களை மீண்டும், மீண்டும்
அர்ப்பணித்துகொண்டு கடமைகளைத் தொடர்கின்றோம்..!
வாழ்க மகரிஷி புகழ்! வாழ்க வேதாத்திரியம்!






7 comments:

  1. வாழ்க வளமுடன்!

    ReplyDelete
  2. Belive it or not, I've been waiting for this day and for this post (esp. on this day Mar 28th) since u started writing this blog!!! First, I got disappointed by seeing Karnan post on this day and just consoled myself by reading the words in that post.
    Again,wanted to check one more time before i shut down my system.... Thanks a million Uncle for this post!

    வாழ்க வளமுடன்
    வாழ்க வளமுடன்
    வாழ்க வளமுடன்

    I can't forget this day, after hearing the news I just started crying...., Amogh (he was only 10 months old at that time) came to me and wiping off my tears.....

    வேதாத்திரியம் வாழ்க வளமுடன்!
    வேதாத்திரி மகரிஷி வாழ்க வளமுடன்!

    Most importly, இந்த யோகா முலம் தான் உங்கள் அனைவரின் நட்பும் கிடைத்தது!!

    மனவளக்கலை யோகா வாழ்க வளமுடன்!!!

    ReplyDelete
  3. didn't know மகரிஷி's நினைவு நாள் coincides with my b'day..

    வாழ்க வளமுடன்!!

    ReplyDelete
  4. i love this photo chitappa; very natural ... guru & sishyan!

    ReplyDelete
  5. வாழ்க வைய்யகம் வாழ்க வளமுடன்

    ReplyDelete
  6. வாழ்க வைய்யகம் வாழ்க வளமுடன்

    ReplyDelete
  7. மகரிஷி அவர்களின் இலட்சியம் நிச்சயம் நிறைவேறும். மனவளக்கலை அன்பர்கள் அனைவரும் கை கோர்த்து அர்ப்பணிப்போடு செயல்படுவார்கள்...
    வாழ்க வளமுடன் 🙏

    ReplyDelete