Monday 26 March 2012

குதம்பைச் சித்தர்


உலகத்துலேயே முதல்முத ரசாயன விஞ்ஞானம் கண்டுபிடிச்சவங்க நம்ம தமிழ்நாட்டு சித்தர்கள்தான்..
வானியல், மூலிகை, மந்திரம், மருத்துவம், ரசவாதம் இப்டீன்னு ஏகப்பட்ட விசயங்கள மக்களுக்கு கொடுத்தவங்க இவங்கதான்..
உலக சரித்திரம் தமிழ்நாட்டைப் பத்தி அதிகமா சொல்லலே..
அதனால உலகத்துல நெறைய பேருக்கு சித்தர்கள் சமுதாயத்துக்கு செஞ்ச தொண்டு பத்தி தெரியல..
7 ம் அறிவு படம் வந்தப்புறம்தான் போதிதர்மர் பற்றி தமிழ்நாட்டு மக்களுக்கே தெரிஞ்சுது..
இந்த சித்தர்கள் பல்வேறு காலகட்டங்கள்ல வாழ்ந்திருந்தாலும் 18 பேர்கள்
குறிப்பிடப்பட வேண்டியவர்கள்..
இந்த 18 பேர் லிஸ்ட்ல மாயரத்துல ஜீவசமாதி அடைஞ்ச குதம்பைச் சித்தரும் ஒருவர்.
இவரு ஒரு பெண் சித்தர்ன்னு சொல்றவங்க இருக்காங்க..
இவரு காதுல பொம்பளைங்க போட்டுக்கற குதம்பை நகையை
அணிந்திருந்ததால குதம்பைச் சித்தர்ன்னு பேரு வந்துச்சுன்னு
சொல்றவங்களும் இருக்காங்க..
இவரு மொத்தமே 32 பாட்டுதான் எழுதியிருக்காருன்னு சொல்றாங்க..

" மாங்காய்ப் பாலுண்டு மலைமேல் இருப்போருக்கு
தேங்காய்ப் பாலேதுக்கடி, குதம்பாய்
தேங்காய்ப் பால் எதுக்கடி? "
எல்லாருக்கும் தெரிஞ்ச இதுக்கு அர்த்தம் யோசிச்சுப் பாருங்க..

மகரிஷிகிட்ட இவரப் பத்தி பேசினப்ப அவரு புதுசா ஒரு கருத்து சொன்னாரு..
காயகல்ப பயிற்சியில "அசுவனி முத்திரை"ன்னு ஆசனவாய் தசைகளை
சுருக்கி, விரிக்கும் நரம்பூக்கப் பயிற்சி தெரிஞ்சிருக்கும்.
குதத்தைச் ( ஆசனவாயை ) சுற்றியுள்ள தசைகள் உடலியக்கத்திற்கு துணை நிற்பவை. நரம்புகளுக்கு ஊக்கம் கொடுப்பவை. டாக்டர்கள் Sphincter muscles என்பார்கள்.
இந்த தசைகளின் பெருமையை உணர்ந்த சித்தர் குதத்தை பெண்பாலாக உருவகித்து பாடிய பாடல்கள்தான் இந்த 32 பாடல்கள் என்றார்.

மக்களுக்கு வேண்டிய ஞானக் கருத்துகளை
குதம்பை என்ற பெண்ணுக்குச் சொன்னதாக எடுத்துக்கலாம்.

மாயரத்துல இருக்குற இவருடைய ஜீவசமாதிய நான் இன்னும் போய் பாக்கல..!

10 comments:

  1. I'm learning a lot about சித்தர்s from you..

    ReplyDelete
  2. JP, why/how we lost all the information about சித்தர்? Why this information is not generally or told in school, how this got out of main stream?

    Also few blog before you mentioned 63 சித்தர், what is the significance of 63? 63 சித்தர், 63 Nayanmargals?!!!!

    ReplyDelete
    Replies
    1. British people who ruled India framed the school syllabus and we follow the same..
      63 நாயன்மார்கள் சித்தர்களா சொல்லப்படல.. அவங்க சிவனால் சோதிக்கப்பட்டு சிவனடி சேந்ததா கதைகள் பெரிய புராணத்துல இருக்கு..
      சித்தக்காட்ல ஜீவசமாதி அடைஞ்சவங்க 63 பேர்கள்ல
      தலைவர் சிற்றம்பல நாடிகள் பேர் மட்டும்தான்
      நமக்குத் தெரியுது..
      Number 63 is coincidence..

      Delete
    2. Very interesting!!! Don't know,how to thank you for sharing lots of info with us! "அறிவு பசிக்கு நல்ல தீனி கிடைக்குது" from you! I'll be very happy, If my baby girl picks up these things now!:):):)

      Delete
  3. "மாங்காய்ப் பாலுண்டு மலைமேல் இருப்போருக்கு"
    இந்த பாட்டுக்கு அர்த்தமா ??? திருவிளையாடல் படத்துலே சிவாஜி
    நாகேஷ்-ஐ கேள்வி கேக்கிறது போல இருக்கு :))

    ReplyDelete
  4. மாங்காய்ப் பாலுண்டு மலைமேல் இருப்போருக்கு
    தேங்காய்ப் பாலேதுக்கடி, குதம்பாய்
    தேங்காய்ப் பால் எதுக்கடி? "...........so cute phrase..Thx JP

    ReplyDelete
  5. This comment has been removed by the author.

    ReplyDelete
  6. "மக்களுக்கு வேண்டிய ஞானக் கருத்துகளை
    பெண் தான் முதன் முதலில் கூட சொன்னதாக கூட எடுத்துக்கலாம்" -- right Uncle?

    ReplyDelete
  7. ahem ahem...Priya, ... :) wait until JP writes about "பட்டினத்தார்" :)

    ReplyDelete
    Replies
    1. :):):) Felt like highlighting, "பெண்ணின் பெருமை". :):):)

      Delete