Monday 12 March 2012

அல்வா




ஞான அல்வா !

போன ரெண்டு blog லேயும் அல்வா வந்ததால ஆபீஸ் நண்பர் அல்வா பத்தி அதுவும் " அல்வா கொடுக்கறதப்" பத்தி post போடச் சொன்னாரு...
" ஐயா.. உங்களுக்கு நாளைக்கு நிச்சயம் அல்வா வாங்கி கொடுக்கிறேன்..ஆள விடுங்க " ன்னு கெஞ்சியும் வேற வழி இல்லாம அவரோட வேண்டுகோள்படி அல்வா தந்த ஞானத்தை கொஞ்சம் எழுதும்படி ஆயிடுச்சு..!

அல்வாவைக் கண்டு பிடித்தது யார்? ஏன் இந்த பெயர் வந்தது அப்படீன்னு
ஆராஞ்சதுல ஒரு பெரீய உண்மை விளங்கிச்சு..
தாமஸ் ஆல்வா எடிசன் கண்டுபிடிச்ச ஆயிரக்கணக்கான விசயங்கள்ல
அல்வாவும் ஒண்ணு..அவர் பேரிலியே ஆல்வான்னு சொல்லப்பட்டு பிறகு
மருவி " அல்வா" வாக இந்தியாவுல பிரபலமாயிடுச்சு..

அல்வா திருநெல்வேலியில எப்படி famous ஆச்சு? தாமஸ் அல்வா எடிசனுக்கும் இந்த ஊருக்கும் என்ன தொடர்பு? இப்படியெல்லாம் நண்பர்கிட்ட discuss பண்ணுனேன். அப்புறம் ஏழாம் அறிவு கொண்டு யோசிச்சதுல
“ இந்த ஊர்ல நம்மாழ்வார் மாதிரி தம்மாழ்வார்ன்னு ஒரு சமையல்காரர் இருந்திருக்கலாம்.. அவரோட வழித் தோன்றல் தாமஸ் ஆழ்வார்ன்னு ஒருத்தர் அமெரிக்கா போயிருக்கலாம்..அவரோட ஜீன்ஸ்ல வந்தவருதான் நம்ம தாமஸ் அல்வா எடிசன்” ன்னு கண்டுபிடிச்சப்ப எனக்கே புல்லரிச்சுப் போயிடிச்சு..!.

"எனக்கே அல்வா கொடுக்கிறீயே...நைனா...
திருநெல்வேலிக்கே அல்வாவா.. "
இப்படியெல்லாம் நெறைய பேரு அல்வா கொடுக்கறதப் பத்தி பேசறாங்க..
அதாவது தெரிஞ்ச விஷயத்தை வேற மாதிரி சொல்லி ஏமாத்தறது - இதான் நான்
புரிஞ்சிக்கிட்டது..
அடுத்தவங்களப் பத்தி வாய்க்கு வந்தமாதிரி பேசறது சிலருக்கு
அல்வா சாப்டற மாதிரி..!

அல்வா - மல்லீப்பூ combination பத்தியும் discussion ஓடிகிட்டுருக்கு.. இது முடிய ரொம்ப நாளாகும் போலிருக்கு..

கடைசியில அல்வா பத்தி எழுதச் சொன்ன நண்பர் எங்கிட்ட வந்து சத்தியமா "திருப்பதிக்கே லட்டா " ன்னு உங்களைக் கேக்க மாட்டேன்னு சொல்லி ஒரு பெரிய கும்பிடு போட்டாரு..!
PS
மாயரத்துல காளியாகுடி ஹோட்டல்ல " அடி அல்வா" ன்னு ஒண்ணு கிடைக்கும்..தெரிஞ்சவங்க மூலம்தான் வாங்க முடியும்....அல்வா கிண்டுன பாத்துரத்துல கடசியா ஒட்டிக்கிட்டு இருக்கிறத எடுத்து வச்சுருப்பாங்க.. ஜவ்வு மிட்டாய் மாதிரி.... அதன் டேஸ்டே தனி...(:-P...






7 comments:

  1. hahaha...அபார கற்பனை!! :)

    அய்யோ ...எனக்கு இப்பவே காளியாகுடி அல்வா சாப்டனும் போல இருக்கு :P :P

    ReplyDelete
  2. அய்யகோ!!! ஆ(ரம்ப)பிச்சுடங்கப்பா ஆ(ரம்ப)பிச்சுடங்க!!!

    One truth in this is அடி அல்வா :)- really one of a kind. நாக்கு ஊருது:)

    ReplyDelete
  3. ஆமா ...எனக்கு ஒரு சின்ன doubt...உங்க ஆபீஸ் நண்பர் எல்லாம் ஏன் comment எதுவும் போடறதில்ல???

    ReplyDelete
    Replies
    1. ஆபீஸ்ல நெறைய பேருக்கு access கிடையாது..
      பலபேரு phone ல பேசிடுறாங்க...
      நானும் சொல்லி, சொல்லி பாத்துட்டேன்.."உங்க comments ல்லாம்
      blog லியே போடுங்கன்னு.. " ஏன்தான் பயப்படுறாங்களோ?

      Delete
    2. access இல்லன்னா எப்படி blog படிக்கிறாங்க??

      அய்யோ ...நா சில நேரம் கண்ணா பின்னான்னு comments போடுறேனே...அதெல்லாம் படிகிராங்களா???

      Delete
    3. blog படிக்கலாம்..ஆனா comments /reply கொடுக்க முடியாது...!

      Delete
  4. OMG kaliyakudi adi alva... nothing comes close - including tirunelveli iruttukadi alva

    ReplyDelete