மாயரத்துலேருந்து குத்தாலம் பஸ்ல போவும்போது கண்டக்டர் " செத்தகாடு" எல்லாம் இறங்குங்கன்னு
ஒரு இடத்துல குரல் கொடுப்பார். சித்தர்க்காடு என்பதுதான் செத்தகாடாகி விட்டது நான் ஸ்கூல் படிச்சப்ப ஏழெட்டு பேர் சித்தக்காட்டிலேருந்து கொரநாட்டு ஸ்கூலுக்கு நடந்தே வருவாங்க..நாங்களும் லீவு நாள்ல அங்க போயி வயவெளியில விளையாடுவோம்.
திருச்சி வந்தப்புறம்தான் சித்தக்காட்ல வாழ்ந்த மகான்கள் பத்தி தெரிஞ்சுது..
சித்தர்காடு தலவரலாறாகச் சொல்லப்படும் கதை -
சிற்றம்பல நாடிகளைத் தலைமைக் குருவாகக் கொண்டு, அவர்தம் சீடர்களாக அறுபத்து மூவர் மகான்கள் உடனுறைந்தனர். நாள்தோறும் திருக்கூட்டமாகச் சென்று பிட்சை ஏற்று உண்பது அவர்தம் வழக்கம். எல்லா நாள்களிலும் செல்வார்கள் என்று சொல்ல முடியாது.
ஒரு இடத்துல குரல் கொடுப்பார். சித்தர்க்காடு என்பதுதான் செத்தகாடாகி விட்டது நான் ஸ்கூல் படிச்சப்ப ஏழெட்டு பேர் சித்தக்காட்டிலேருந்து கொரநாட்டு ஸ்கூலுக்கு நடந்தே வருவாங்க..நாங்களும் லீவு நாள்ல அங்க போயி வயவெளியில விளையாடுவோம்.
திருச்சி வந்தப்புறம்தான் சித்தக்காட்ல வாழ்ந்த மகான்கள் பத்தி தெரிஞ்சுது..
சித்தர்காடு தலவரலாறாகச் சொல்லப்படும் கதை -
சிற்றம்பல நாடிகளைத் தலைமைக் குருவாகக் கொண்டு, அவர்தம் சீடர்களாக அறுபத்து மூவர் மகான்கள் உடனுறைந்தனர். நாள்தோறும் திருக்கூட்டமாகச் சென்று பிட்சை ஏற்று உண்பது அவர்தம் வழக்கம். எல்லா நாள்களிலும் செல்வார்கள் என்று சொல்ல முடியாது.
ஒருமுறை சிறப்பாலும் செல்வத்தாலும் சிறந்த இல்லறத்தார் ஒருவர் திருக்கூட்டத்தாரை அணுகி, தம் இல்லத்துக்கு ஒருநாள் எழுந்தருளி, திருவருளமுது உண்டு, தங்களை வாழ்விக்க வேண்டும் என்று வேண்டிக் கொண்டார். திருக்கூட்டத்தினரும் ஒருநாள் குறிப்பிட்டு வருவதாக ஏற்றுக்கொண்டனர். குறிப்பிடப்பெற்ற நாளும் வந்தது. திருக்கூட்டத்தினர் அறுபத்து மூவரும் அவர்தம் இல்லம் சென்று பிட்சை ஏற்கத் தயாராக இருந்தனர். அக்கம் பக்கத்தில் உள்ளவர்களும் திரண்டு நின்று உபசாரம் செய்தனர்.திருக்கூட்டத்தினரை அழைத்தவரின் இல்லக்கிழத்தியார் எல்லாப் பணிகளையும் ஏற்றுச் செய்தாலும், தவறு ஏதும் நடந்துவிடக்கூடாதே என்ற படபடப்புடன் வேலைகளைக் கவனித்துக் கொண்டிருந்தார்.
இக்காலத்தில் ஒரு வேலையை நிறைவாக இயக்குவதற்கேற்ற வசதிகள் உண்டு. அக்காலத்தில் அவ்வாறு எளிமையாய்ச் செய்துவிட இயலாது.திருக்கூட்டத்தினர் வந்திருந்த இல்லத்தில் அடுத்தடுத்து மங்கலப் பொருளாகக் குத்துவிளக்குகள் ஏற்றப் பெற்றிருந்தன. விளக்கை எரிவிக்க அக்காலத்தில் வேப்பெண்ணெய் பயன்படுத்தப்பெற்றது. வேப்பெண்ணெய் ஒரு பாத்திரத்தில் வைக்கப்பெற்றிருந்தது.திருக்கூட்டத்தினருக்கு உணவு பரிமாறப் பெற்றது. எல்லா வேலைகளையும் இல்லத்து அம்மையாரே செய்து கொண்டிருந்தார். பதற்றம் காரணமாக, திருக்கூட்டத்தினருக்குப் பசுநெய் வார்ப்பதற்குப் பதிலாக, விளக்கு எரிப்பதற்காக வைத்திருந்த வேப்பெண்ணெயை வார்த்து விட்டார். அறுபத்து மூவரைக் கொண்ட திருக்கூட்டத்தில் ஒருவர் மட்டும் கசப்புச் சுவை தெரிந்து ஓக்கலித்து விட்டார். ஓக்கலித்தாலும் சத்தம் அதிகம் வெளிப்படாமல் அடக்கிக் கொண்டார். திருக்கூட்டத்தின் தலைவராகிய சிற்றம்பல நாடிகளார் இதனை உணர்ந்தார்.“தவச்சுவை அறிவார் அவச்சுவை அறியார்” என்று கூறினார். மற்றை வகையில் விருந்து சிறப்பாக நடந்தேறியது. திருக்கூட்டத்தினர் புறப்பட்டுச் சென்று விட்டனர்.
அடுத்த நாள் காலையில் திருக்கூட்டத்தினர் எண்ணிக்கையில் ஒருவர் காணப்பெறவில்லை. “அவச்சுவை அறிவார் தவச்சுவை அறியார்” என்ற வாசகம் எழுதப்பெற்ற ஓலை நறுக்கு ஒன்று அவர் இருந்த இடத்தில் காணப்பெற்றது. அவர்தான் முதல்நாள் விருந்தில் வேப்பெண்ணெய் என்று தெரிந்து ஓக்கலித்தவர்.
சில ஆண்டுகள் கழிந்தன. சிற்றம்பல நாடிகள் தம் கூட்டத்தினருடன் ஜீவசமாதி அடையப் போவதாக அறிவிப்புச் செய்தார். ஊரே திரண்டது. அரசன் செய்தியறிந்து வந்தான். அரசன் முன்னிலையில் சிற்றம்பல நாடிகள் தலைமையில் அறுபத்திரண்டு பேரும் அமர்ந்து ஜீவசமாதி அடைந்தனர். அப்போது வயதான ஓர் அம்மையார் கண்ணீர்விட்டு அழுதார். அருகில் இருந்தவர்கள் ஏன் அழுகிறீர்கள்? என்று கேட்டார்கள். அப்போது அம்மையார் “இக்கூட்டத்தில் இருந்த ஒருவர் போய்விட்டார். அவரும் இருந்திருந்தால் இப்போது அவரும் இவர்களுடன் ஜீவசமாதி அடைந்திருப்பாரே! என்று வருந்தினேன்.” என்று கூறினார். அதே சமயத்தில் அவரும் வந்து விட்டார். வந்தவுடன் அவர் சிற்றம்பல நாடிகளின் ஜீவசமாதியின் முன்னர் நின்றுகொண்டு “அவச்சுவை அறியாமல் தவச்சுவை அறிந்து விட்டேன். என்னையும் ஏற்றுக் கொள்ள வேண்டும்.” என்று கதறி அழுதார். சிற்றம்பல நாடிகளின் ஜீவசமாதி வெடித்தது. உள்ளிருந்து சுவாமிகள் வெளிப்பட்டு வந்து, தவச்சுவை அறிந்தவரைத் தம்முடைய மார்புடன் அணைத்துக் கொண்டு சென்று, தம்முடைய சமாதியிலேயே உடன் இருத்திக் கொண்டார். இவையெல்லாம் உடனிருந்து பார்த்துக் கொண்டிருந்த மன்னன் ஜீவசமாதியில் அமர்ந்த அனைவரையும் அழுதும் தொழுதும் அரற்றியும் வழிபாடாற்றி நின்றான் என்பது வரலாறு.
ஏன் சித்தக்காட்டைப் பத்தி இன்னிக்கி எழுதுனேன்னா ஒரு சுவாரஸ்யமான அனுபவம் -
நேத்தி நைட் பாட்டு கேட்டுக்கிட்டுருந்தப்ப ராகவேந்திரர் படத்துல வர்ற க்ளைமாக்ஸ் பாட்டு "அழைக்கிறான் மாதவன் " என்னை அப்படியே உலுக்கிடிச்சு..அதுவும் ஜேசுதாஸ் " குருவே சரணம்" ன்னு
உருகும்போது ஒரு பரவச நிலை..உண்மையிலே ஒரு தெய்வீக அனுபவம்தான்..
இதே கதைதானே நம்ம ஊர்லயும் நடந்துருக்கு...இது மனசுல ஓடிகிட்டே இருந்துச்சி..
அதத்தான் இங்கே share பண்ணியிருக்கேன்!
சித்தர்காடு கோவில் போட்டோ உடனே கிடைக்கல..அடுத்த தடவ மாயரம் வந்தா இங்க போயிட்டு வாங்க..மிக அமைதியான இடம்.. ஆற்றல்களம் அதிகம்..ஈசியா தவம் செட் ஆகும்..
குதம்பைச் சித்தர் ஜீவசமாதியும் மாயரத்துலதான் இருக்கு..
wish you had written சித்தர் story in your easy to read கதை சொல்ற style...didn't understand meaning of few words but got the gist
ReplyDeletewhat's the meaning of the அவச்சுவை....தவச்சுவை... line?
ஊர்ல மார்கழி மாசம் திருக்கூட்டம் வருமே...இந்த மாதிரி ஆரம்பிச்ச திருக்கூடந்தானா?
இது வேற...
Deleteதிருக்கூட்டம் பத்தி தனியே ஒரு போஸ்ட் போடறேன்
தவச் சுவை - நிலையான இன்பம் தரும் விஷயங்கள்
அவச்சுவை - துன்பம் தரும் இன்பங்கள்!
திருக்குறள்
தவஞ்செய்வார் தங்கருமஞ் செய்வார்மற் றல்லார்
அவஞ்செய்வார் ஆசையுட் பட்டு.
விளக்கம் தருக ?
அய்யோ ...இதானே வேணாங்கறது..... எனக்கு புரீர மாதிரி நீங்களே சொல்லிடுங்க
Deleteஅடக்கமா, அன்பா நோம்பு நோக்கறவங்க தான் டூட்டிய ஒயுங்கா செய்வாங்க..
Deleteமத்தவங்க பிஸ்தா கணக்கா கண்டதுககு ஆசைப்பட்டு கண்டத செஞ்சு
கஷ்டப்படுவாங்க!
Interesting!!!! Is this Moovaloor koil? If not where is this koil? JP, the picture is really cute?
ReplyDeleteIt is not Moovaloor Kovil.
Deleteஇந்த கோவில் ரயில்வே ஓவர்ப்ரிட்ஜ் ( towards Kuttaalam )இறங்கினவுடனே ரைட்ல ஒரு ஆர்ச் தெரியும்..
அதுக்குள்ளே நுழைஞ்சா கோவில் வரும்..
Good to know..I have heard people going to temple in chitharkad, but came to know the history behind it.
ReplyDeleteJP in பரவச நிலை - OMG - JP, puleeeease - next time take photo of u in பரவச நிலை and post it, wld love to see that :)
ReplyDeleteI LOVE the "cute young monk" - especially hairless head and the radiant glow in his face - HUGS ;)
குட்டி மாங்க் மொட்டத் தலையிலேயே அவ்வளவு glow இருக்கறச்ச
Deleteஎன்னோட தவக் கனல்ல அதுவும் தெய்வீக பரவச நிலையில போட்டோ
எடுத்தா ஒண்ணுமே விழாது..!
pinniteenga chitappu:)
Deletehahaha.... sooooooper!!!
Deleteyeah..JP..right, ஒண்ணுமே விழாது becos, need to put 100w glow on the background to take your snap......and JP...i need to discuss your தெய்வீக பரவச நிலை with Maloo next time....(can't stop laffing!)
Deleteதவச்சுவை அறிவார் அவச்சுவை அறியார்” &
ReplyDelete"தவச் சுவை - நிலையான இன்பம் தரும் விஷயங்கள்
அவச்சுவை - துன்பம் தரும் இன்பங்கள்!"
-- I like it.
Just catching up with this post...very interesting. I had picked up "சித்தர் பாடல்கள்" book from Appa's collection and read a page or two every now and then. I think குதம்பைச் சித்தர் songs are famous. Going to read them again.
ReplyDeleteExcellent writing on this SiddarKadu, Need to be in this place as a being in this life time , atleast once...
ReplyDelete